How to make homemade beetroot soap and its benefits: அன்றாட உணவில் நாம் சேர்த்துக் கொள்ளும் காய்கறிகள், பழங்கள், தானியங்கள், விதைகள், நட்ஸ் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த பொருள்களை எடுத்துக் கொள்வதன் மூலம் பல்வேறு வகையான நோய்களிலிருந்து விடுபடலாம். ஏனெனில் இந்த உணவுகளை சரிவர எடுத்துக் கொள்ளாத போது, அதில் உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக பலதரப்பட்ட நோய்களைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. அவ்வாறு சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சந்திக்கக் கூடிய ஒரு பொதுவான நோயாக அனிமியா என்றழைக்கப்படும் இரத்த சோகை அமைகிறது.
உடலில் இரத்த சோகை ஏற்படுவதற்கான முக்கிய காரணியாக அமைவது இரும்புச்சத்து குறைபாடே ஆகும். இது தவிர, எலும்பு மஜ்ஜை பிரச்சினைகள், நாள்பட்ட நோய்கள், சில மருந்துகள், மரபணு கோளாறுகள், மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு, கர்ப்பம் போன்ற பல்வேறு காரணிகளும் அனிமியாவுக்கு வழிவகுக்கிறது. குறிப்பாக, இரும்புச்சத்து குறைபாடு ஆனது போதுமான அளவு இரும்புச்சத்து இல்லாத போது, ஏற்படக்கூடியதாகும். இதனால் இரத்த சிவப்பணுக்கள் போதுமான அளவு ஹீமோகுளோபினை உருவாக்க முடியாது. இதன் காரணமாக அனீமியா ஏற்படலாம். எனினும் சில ஆரோக்கியமான உணவுமுறையின் மூலம் இதைக் கட்டுப்படுத்தலாம். இதற்கு சிறந்த தீர்வாக பீட்ரூட் அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Beetroot Kola Urundai: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பீட்ருட் கோலா உருண்டை செய்முறை!
அனிமியாவைத் தடுக்க உதவும் பீட்ரூட்
பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டின் முக்கிய நன்மையாக, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவது அடங்கும். இது தவிர, இரத்த அழுத்தத்தை முறைப்படுத்துவது, செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்க, வீக்கத்தைக் குறைக்க, உடலின் ஆற்றலை அதிகரிக்க உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. பீட்ரூட்டின் மொறுமொறுப்பான தன்மை, சிவப்பு வண்ணம் அனைத்துமே அதை பல்வேறு வழிகளில் சாப்பிட ஏதுவாக உள்ளது. அவ்வாறு அனிமியாவைத் தடுப்பதற்கு பீட்ரூட்டைக் கொண்டு பீட்ரூட் சூப் தயார் செய்யலாம்.
பீட்ரூட் சூப் தயார் செய்யும் முறை
தேவையானவை
- வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
- பிரியாணி இலை
- பூண்டு - இரண்டு பல்
- இஞ்சி - ஒரு அங்குலம்
- சின்ன வெங்காயம் - 2
- பீட்ரூட் - ஒன்றரை கப் (சிறு துண்டுகளாக வெட்டியது)
- கேரட் - 1
- தக்காளி - 1
- தண்ணீர் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- மிளகு - 1 தேக்கரண்டி (நொறுக்கப்பட்டது)
- கிரீம் - தேவையான அளவு
- புதினா - தேவையான அளவு
இந்த பதிவும் உதவலாம்: Beetroot cutlet recipe: உங்க குழந்தை பீட்ரூட் சாப்பிட மாட்டிக்குதா? இப்படி செஞ்சி கொடுத்தா மிச்சமே வெக்க மாட்டாங்க
பீட்ரூட் சூப் தயாரிப்பது எப்படி?
- பிரஷர் குக்கரில் வெண்ணெய் சேர்த்து, பிறகு பிரிஞ்சி இலை, பூண்டு, இஞ்சி, வெங்காயம் போன்றவற்றைச் சேர்த்து சிறிது மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
- பிறகு கேரட், பீட்ரூட், தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, இரண்டு நிமிடங்கள் வதக்கி, தண்ணீர் சேர்த்து 3 முதல் 4 விசில் வரை வேகவைக்க வேண்டும்.
- இந்த கலவையை ஆறவைத்து, தண்ணீரை வடிகட்டி ஒதுக்கி வைக்கலாம். அதன் பின்னர், காய்கறிகளை ஒரு பிளெண்டரில் மாற்றி மென்மையான பேஸ்ட் கிடைக்கும் வரை அரைத்துக் கொள்ளலாம்.
- இந்த அரைத்த பீட்ரூட் கலவையை கடாயில் ஊற்றி, ஏற்கனவே வடிகட்டிய நீரை சேர்த்து கலக்க வேண்டும். பின்னர், சூப்பில் கூடுதல் தண்ணீர் சேர்க்கலாம்.
- அதன் பின்னர், இந்த சூப்பை கொதிக்க வைத்து, நொறுக்கப்பட்ட கருப்பு மிளகு சேர்த்து கிளறி கடைசியாக கிரீம் மற்றும் ஒரு சிறிய புதினாவைச் சேர்த்து அலங்கரிக்கலாம்.
பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- பீட்ரூட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இதற்கு இதில் உள்ள வைட்டமின் பி1 மற்றும் இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களே காரணமாகும். இது உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இரத்த சோகை பிரச்சனையைத் தவிர்க்க உதவுகிறது.
- பீட்ரூட்டில் உள்ள அதிகளவிலான கரையும் நார்ச்சத்துக்கள், உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தி பெருங்குடலைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
- பீட்ரூட்டில் பீட்டாலைன் என்ற அழற்சி எதிர்ப்புப் பண்புகள் அதிக அளவில் உள்ளது. இது நாள்பட்ட அழற்சி தொடர்பான பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. மேலும் சிறுநீரகத்தில் ஏற்படும் அழற்சியைப் போக்கவும், சிறுநீரகப் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: இந்த பிரச்சனை உள்ளவர்கள் மறந்தும் பீட்ரூட் சாப்பிடக்கூடாது? ஏன் தெரியுமா?
Image Source: Freepik