Baby Face Massage: குழந்தைக்கு ஃபேஸ் மசாஜ் செய்ய போறீங்களா? அப்ப கண்டிப்பா இத தெரிஞ்சிக்கோங்க.

  • SHARE
  • FOLLOW
Baby Face Massage: குழந்தைக்கு ஃபேஸ் மசாஜ் செய்ய போறீங்களா? அப்ப கண்டிப்பா இத தெரிஞ்சிக்கோங்க.


How To Do Face Massage For Baby: பிறந்த குழந்தையின் பராமரிப்பு இன்று பல தாய்மார்களுக்கும் சவாலான ஒன்றாக உள்ளது. இந்த பராமரிப்பு முறையில் குழந்தைக்கு மசாஜ் செய்வதும் அடங்கும். ஏனெனில், குழந்தைக்கு மசாஜ் செய்வது உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவும். மேலும் நன்றாக மசாஜ் செய்வது உடலும் வேகமாக வளர்ச்சியடைந்து ஆரோக்கியமாக வைத்திருக்கௌதவும்.

ஆனால், பாடி மசாஜ் செய்வதுடன், முகத்தின் பாகங்களையும் மசாஜ் செய்வது அவசியமாகும். ஃபேஸ் மசாஜ் செய்வது குழந்தைகளுக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இவை தாய் மற்றும் சேய்க்கு இடையிலான வலுவான பிணைப்பை ஏற்படுத்துவதற்கான வழியாகும். குறிப்பாக, குளிர்காலத்தில் குழந்தைக்கு சூரிய ஒளியில் மசாஜ் செய்வது எலும்புகள், தசைகளின் வளர்ச்சியை மேம்படுத்துவதுடன், பருவகால நோய்களிலிருந்தும் பாதுகாப்பாக வைக்க உதவுகிறது. அதே சமயம், சிறிய குழந்தைக்கு 15 நிமிடங்கள் மசாஜ் செய்து போதுமானதாகும்.

குழந்தைகளுக்கு ஃபேஸ் மசாஜ் செய்வதால் கிடைக்கும் பயன்கள்

குழந்தைகளின் முகத்தை மசாஜ் செய்வது, முகத்தில் இரத்த ஒட்டத்தை அதிகரிக்கிறது. இது குழந்தையின் உறுப்புகளின் வளர்ச்சிக்கு ஏதுவாக அமைகிறது. மசாஜ் செய்வதன் மூலம் நல்ல தூக்கத்தைப் பெறலாம். எடை குறைந்த குழந்தைகளுக்கு, உடல் எடையை அதிகரிக்கவும் மசாஜ் செய்வதன் மூலம் பெறலாம். எனவே மசாஜ் செய்வது குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: கோடை அல்லது குளிர் காலம்.. எந்த காலத்திலும் குழந்தைக்கு நன்மை தரும் ஆலிவ் ஆயில் மசாஜ்

ஃபேஸ் மசாஜ் செய்வது குழந்தைகளுக்கு பல் துலக்கும் போது ஏற்படும் வலியிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது. ஆரம்ப காலத்தில் குழந்தை மற்றும் பெற்றோர் இருவருக்கும் மன அழுத்தம் இருக்கும். இந்த சூழ்நிலையில் ஃபேஸ் மசாஜ் செய்வதன் மூலம் குழந்தையின் முக வலியில் இருந்து நிவாரணம் தருகிறது. மேலும் குழந்தைக்கு ஃபேஸ் மசாஜ் செய்வது மன அழுத்த ஹார்மோன் கார்டிசோலின் அளவைக் குறைக்க உதவுகிறது.

குழந்தைக்கு ஃபேஸ் மசாஜ் எப்படி செய்வது

குழந்தைக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள படி வரிசையாக மசாஜ் செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மைகளைத் தரும்.

உதடு மசாஜ்

குழந்தையின் முகத்தில் உதடுகளைச் சுற்றியுள்ள பகுதியில் மசாஜ் செய்வது முக்கியமாகும். இதற்கு குழந்தைக்கு சிரிக்க கற்றுக் கொடுப்பது போல் செய்து, உதடுகளின் கீழ் மற்றும் மேல் பகுதிகளை இரு கைகளின் கட்டை விரல்களால் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது முக தசைகளுக்கு நிவாரணம் அளிக்கும்.

கண் மசாஜ்

முகத்தின் மிகவும் மென்மையான பகுதியான கண் பகுதியையும் மசாஜ் செய்ய வேண்டும். இந்த பகுதியை மசாஜ் செய்வதில் அதிக கவனம் தேவை. இதற்கு குழந்தையின் புருவங்களுக்கு மேல் பகுதியில் இருந்து, கன்னம் வரை இஅண்டு கட்டை விரல்களால் மசாஜ் செய்யலாம். இது குழந்தையின் முகத்தில் இதய வடிவத்தை வரைவது போல இருக்கும். மேலும், இரு புருவங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் 30 நிமிடங்களுக்கு மெதுவாக அழுத்துவது, அவர்களுக்கு நிம்மதியைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Almond Milk For Babies: இது தெரிஞ்சா இனி குழந்தைக்கு தினமும் பாதாம் பால் கொடுப்பீங்க.

இதில் கண்கள் மூடிய நிலையில் குழந்தையை வைத்து, அவர்களின் நெற்றிக்கு அருகில் உங்கள் இரு கைகளையும் மடித்து பின் கைகளை வெளிப்புறமாக நகர்த்தி, கன்னங்களை நன்றாக, மென்மையாக மசாஜ் செய்யலாம்.

தலையை அன்பாக தடவுதல்

குழந்தையின் தலையை மசாஜ் செய்வது அவர்களுக்கு மன அழுத்தத்தை குறைப்பதாக அமைகிறது. இரு கைகளாலும் நெற்றியின் இருபுறமும் மசாஜ் செய்ய வேண்டும். இதற்கு விரல்களைப் பயன்படுத்தலாம்.

எனினும் மசாஜ் செய்யும் போது குழந்தைக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்பதையும் கவனிப்பது அவசியம். இந்த சமயத்தில் அவர்களுடன் சிறிது நேரம் பேச வேண்டும். இது தவிர குழந்தைக்கு மசாஜ் செய்ய எந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம், மசாஜ் செய்ய சரியான நேரம் போன்றவற்றை மருத்துவ ஆலோசனை பெற்று செய்யலாம். மேலும், குழந்தை சோர்வாக இருக்கும் போது காலை, மாலை இருவேளைகளிலும் மசாஜ் செய்யலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Baby Constipation Home Remedies: குழந்தைக்கு மலச்சிக்கல் குணமாக உதவும் வீட்டு வைத்தியங்கள்

Image Source: Freepik

Read Next

Kajal for Babies: குழந்தைக்கு கண்மை வைப்பது நல்லதா? கட்டுக்கதைகளும் உண்மையும் இங்கே!

Disclaimer