Baby Constipation Home Remedies: குழந்தைக்கு மலச்சிக்கல் குணமாக உதவும் வீட்டு வைத்தியங்கள்

  • SHARE
  • FOLLOW
Baby Constipation Home Remedies: குழந்தைக்கு மலச்சிக்கல் குணமாக உதவும் வீட்டு வைத்தியங்கள்

குழந்தைகளுக்கு மலச்சிக்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள்

தெசலோனிகியின் ஹிப்போக்ராட்டி யோ பொது மருத்துவமனையின் கூற்றுப்படி, குழந்தைப் பருவத்தில் ஏற்படும் மலச்சிக்கல் ஒரு பொதுவான அறிகுறியாகும். இரண்டு வாரங்களுக்கு மேல் இது நீடிக்கும் போது குடல் இயக்கத்தில் தாமதம் அல்லது சிரமத்தை ஏற்படுத்தலாம். குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கான அறிகுறிகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Newborn Sleeping: குழந்தைக்கு நல்ல தூக்க பழக்கத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிகள்

  • கடின, உலர்ந்த, மற்றும் துகள்கள் போன்ற மலம்
  • அரிதான குடல் இயக்கங்கள் (மூன்று நாள்களுக்கு ஒரு முறை அல்லது குறைவான இயக்கங்கள்)
  • கடினமான மலத்தால் மலக்குடலில் ஏற்படும் சிறு விரிசல்களால் மலத்தில் இரத்தம் வருதல்
  • குடல் அசைவுகளின் போது சிரமம் அல்லது அசௌகரியத்தை அனுபவிப்பது

குழந்தைகளில் மலச்சிக்கல்லை நீக்க உதவும் வீட்டு வைத்தியம்

உணவைச் சரிசெய்தல்

குழந்தை திட உணவுகளை உண்ணத் தொடங்கினால், நார்ச்சத்துள்ள ப்யூரிட் ப்ரூன்ஸ், பட்டாணி அல்லது பீச், பேரிக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் நார்ச்சத்து மலத்தை மென்மையாக்கவும், வழக்கமான குடல் இயக்கங்களை ஊக்குவிக்கவும் உதவுகிறது. எனினும், சாத்தியமான ஒவ்வாமை அல்லது உணர்திறன் அபாயத்தைக் கண்காணிக்க படிப்படியாக புதிய உணவுகளை அறிமுகப்படுத்தலாம்.

திரவ உட்கொள்ளலை அதிகரிப்பது

நீரிழப்பு மலச்சிக்கல்லை ஏற்படுத்தலாம். எனவே, குழந்தை போதுமான அளவு நீரேற்றமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக வெப்ப காலநிலை அல்லது அவர்களுக்குக் காய்ச்சல் இருக்கும் போது வழக்கமான பால் ஊட்டத்துடன், கூடுதலாக சிறிய அளவு தண்ணீரை அருந்தலாம். ஆனால், ஆறு மாதங்களுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு தண்ணீர் உட்கொள்ளுதல் குறித்த வழிகாட்டுதல்களுக்கு குழந்தை மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Premature Baby Care Tips: குறைமாத குழந்தைகளைப் பராமரிக்க பெற்றோர்களுக்கான சில குறிப்புகள்

சூடான குளியல்

குழந்தையின் தசைகளைத் தளர்த்த வெதுவெதுப்பான குளியல் மேற்கொள்ளலாம். இது அவர்களுக்கு சௌகரியமாக மலம் கழிக்க உதவுகிறது. மேலும் அசௌகரியத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

மசாஜ் செய்வது

வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வது எளிய வீட்டு வைத்தியம் ஆகும். குழந்தையின் வயிற்றில் கடிகார திசையில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இது குடல் வழியாக மலத்தை நகர்த்த உதவுவதுடன், அசௌகரியத்தில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

சைக்கிள் ஓட்டும் இயக்கம்

குழந்தையின் முதுகில் படுத்திருக்கும் போது, மெதுவாக கால்களை சைக்கிள் ஓட்டும் இயக்கத்தில் நகர்த்த வேண்டும். இது அவர்களின் வயிற்றுத் தசைகளைத் தூண்டி, குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Newborn Hair Growth: பிறந்த குழந்தைக்கு முடி அதிகமாக வளர இத செய்யுங்க

எப்போது மருத்துவ ஆலோசனை பெறலாம்?

இந்த வீட்டு வைத்தியங்கள் பாதுகாப்பானதாக இருப்பினும், எச்சரிக்கையாக இருப்பது மற்றும் சுகாதார நிபுணர அணுகுவது அவசியமாகும்.

  • மூன்று மாதங்களுக்குக் கீழ் உள்ள குழந்தைகள், 24 மணி நேரத்திற்கும் மேலாக மலம் கழிக்காத போது
  • ஒரு வாரத்திற்கும் மேலாக வீட்டு வைத்தியத்தைக் கையாண்ட பின்னும், மலச்சிக்கல் தொடரும் போது
  • குழந்தை கடுமையான வலி, வாந்தியெடுத்தல் அல்லது வயிற்று வலியை அனுபவிக்கும் போது
  • குழந்தையின் மலத்தில் இரத்தம் இருப்பதைக் கவனிக்கும் போது சுகாதார நிபுணரை அணுகுவது அவசியம் ஆகும்.

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும் முறைகள்

குழந்தைகளில் மலச்சிக்கல்லை நிர்வகிப்பதற்கான சிறந்த அணுகுமுறை அதனை வராமல் தடுப்பதாகும். இங்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க சில அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்.

தாய்ப்பால் கொடுப்பது

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், குழந்தை எளிதில் ஜீரணிப்பதுடன், மென்மையான மலத்திற்கு வழிவகுக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Dancer Hand Breastfeeding: குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதில் சிக்கலா? இந்த நிலையில் கொடுங்க

ஃபார்முலா ஃபீடிங்

ஃபார்முலா ஃபீடிங் என்பது உற்பத்தியாளரின் அறிவுறுத்தல்களின் படி, சரியான ஃபார்முலா-டு-வாட்டர் விகிதத்தைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

நீரேற்றம்

குழந்தையின் வயது மற்றும் தேவைக்கேற்ப தாய்ப்பாலுடன் நீரேற்றமாக வைத்திருப்பது அவசியமாகும்.

உடல் செயல்பாடுகளை ஊக்குவிப்பது

குழந்தை அதிகம் நடமாடத் தொடங்கிய பின், அவரது வயிற்று தசைகள் மற்றும் குடல் அசைவுகளைத் தூண்டுவதற்கு குழந்தை தவழுவதை ஊக்குவிக்க வேண்டும்.

நார்ச்சத்து அறிமுகப்படுத்துதல்

திடப்பொருள்களை அறிமுகப்படுத்தும் போது, ஓட்ஸ், பட்டாணி, கொடிமுந்திரி போன்ற லேசான, நார்ச்சத்து நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்வதுடன் தொடங்கவும். அதே சமயம், மலச்சிக்கல்லை ஏற்படுத்தும் அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Food Allergies In Children: குழந்தைக்கு உணவு அலர்ஜியைத் தரும் இந்த உணவுகளை மறந்தும் கொடுக்காதீங்க

Image Source: Freepik

Read Next

கோடை அல்லது குளிர் காலம்.. எந்த காலத்திலும் குழந்தைக்கு நன்மை தரும் ஆலிவ் ஆயில் மசாஜ்

Disclaimer

குறிச்சொற்கள்