Dancer Hand Breastfeeding: குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதில் சிக்கலா? இந்த நிலையில் கொடுங்க

  • SHARE
  • FOLLOW
Dancer Hand Breastfeeding: குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதில் சிக்கலா? இந்த நிலையில் கொடுங்க

நடனக் கலைஞர் கை தாய்ப்பால் கொடுக்கும் நிலை

குறைமாத குழந்தைகளின் தாய்மார்கள் அல்லது சிறப்புத் தேவை கொண்ட குழந்தைகளுக்கு நடனக் கலைஞர் கையால் தாய்ப்பால் (Dancer Hand Breastfeeding Position) நிலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு புதிய தாய்மார்களும் இந்த நிலையைக் கற்பிக்க வேண்டும். குறிப்பாக தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தையைப் பிடிப்பதில் சிக்கல்களை எதிர்கொள்ளும் தாய்மார்களும் இந்த நிலையைப் பயன்படுத்தலாம். இந்த நிலை குழந்தைக்கு ஆதரவையும், சௌகரியமான நிலை மற்றும் பிடியை ஏற்படுத்துகிறது. குறிப்பாக பலவீனமான குழந்தைகள் அல்லது குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இந்த நிலை சரியான ஆதரவைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Breastfeeding Benefits: ஆரோக்கியம் மிக்க தாய்ப்பாலும், தாய் மற்றும் சேய் பெறும் நலன்களும்.!

நடனக் கலைஞர் கை தாய்ப்பால் கொடுப்பது எப்படி

இந்த நிலை சிக்கலாக இருந்தாலும் எளிமையான நிலைகளில் ஒன்றாகும். டேன்சர் ஹேண்ட் தாய்ப்பால் நிலை செய்யும் வழிமுறைகளைக் காணலாம்.

  • முதலில் தாய்மார்கள் மார்பகங்களை ஆதரித்தவாறு கைகளை அதன் கீழ் வைக்க வேண்டும்.
  • பின் கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலை U வடிவத்தில் உருவாக்கி, அதனுடன் குழந்தையின் கன்னத்தைப் பிடிக்க வேண்டும்.
  • குழந்தையின் கன்னங்களை மெதுவாக அழுத்தி மார்பகத்திற்கு அருகில் கொண்டு வந்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
  • இது குழந்தைக்கு தாய்ப்பால் உறிஞ்சுவதற்கு மற்றும் முலைக்காம்புகளைச் சரியாகப் பிடிக்கவும் உதவுகிறது.
  • சிறந்த பாலூட்டலுக்கு குழந்தையை இதே நிலையில் வைத்துக் கொடுக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: New Born Baby Care Tips: பிறந்த குழந்தையின் சில பராமரிப்பு முறைகள்.!

நடனக் கலைஞர் கை தாய்ப்பால் கொடுக்கும் நிலையின் நன்மைகள்

இந்த நிலையில் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பது பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

  • பலவீனமான தசைகள் கொண்ட குழந்தைகளுக்கு இந்நிலையில் தாய்ப்பால் கொடுப்பது எளிது.
  • இந்த நிலை குறைமாத குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கான எளிய வழியாகும்.
  • பிளவுபட்ட உதடுகளைக் கொண்ட குழந்தைகளுக்கு எளிதாக பால் கிடைக்கும் வசதியை இந்நிலை தருகிறது.
  • இந்நிலை ஊனமுற்ற குழந்தைகள் சரியாக பால் உறிஞ்சுவதற்கான நிலையாகும்.
  • டவுன் சின்ட்ரோமுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது சிரமமாக இருக்கும். அவர்களுக்கும் இந்த நிலையில் தாய்ப்பால் கொடுப்பது சிறந்ததாகும்.
  • குழந்தையின் உடல்நிலை சரியாக இல்லாவிடின், சரியாக உணவளிக்க முடியாமல் போகலாம். இது போன்ற சூழ்நிலையில் இந்த நிலையைப் பயன்படுத்தி தாய்ப்பால் கொடுக்கலாம்.

குறைபிரசவக் குழந்தைகள், டவுன்சின்ட்ரோம் உள்ள குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கான சிறந்த வழியாக இந்த டேன்சர் ஹான்ட் தாய்ப்பாலூட்டும் நிலை உள்ளது. மேலும் இதன் மூலம் பலவீனமான குழந்தைகளுக்கும் அதிக ஊட்டச்சத்து கிடைக்கிறது. எனவே தாய்மார்கள் மிக எளிய வழியான இந்த நிலை மூலம் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Newborn Sleeping: குழந்தைக்கு நல்ல தூக்க பழக்கத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிகள்

Image Source: Freepik

Read Next

Premature Baby Care Tips: குறைமாத குழந்தைகளைப் பராமரிக்க பெற்றோர்களுக்கான சில குறிப்புகள்

Disclaimer

குறிச்சொற்கள்