Face Massage Daily Benefits: தினமும் முகத்திற்கு மசாஜ் செய்யலாமா? அப்ப ஒரு நாளைக்கு எத்தனை முறை மசாஜ் செய்யலாம்

  • SHARE
  • FOLLOW
Face Massage Daily Benefits: தினமும் முகத்திற்கு மசாஜ் செய்யலாமா? அப்ப ஒரு நாளைக்கு எத்தனை முறை மசாஜ் செய்யலாம்

தினமும் முகத்திற்கு மசாஜ் செய்யலாமா?

ஆயுர்வேத மருத்துவர் சோனல் கர்க் அவர்களின் கருத்துப்படி, தினமும் முகத்திற்கு மசாஜ் செய்வது பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இது முகத்தின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவுகிறது. எனவே தினமும் முகத்தில் மசாஜ் செய்யலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Ways To Remove Dark Spots: முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் விரைவில் மறைய சில வழிகள்!

ஆனால், இதற்கு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கையாள வேண்டும். மசாஜ் செய்யும் போது லேசான கைகளால் வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இது சருமத்தை உரிக்காது. மசாஜ் செய்வது சருமத்தில் கொலாஜனை அதிகரித்து, சரும அமைப்பை மேம்படுத்துகிறது. கொலாஜன் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தி, முகச்சுருக்கங்களைக் குறைக்கிறது.

ஒரு நாளைக்கு எத்தனை முறை ஃபேஸ் மசாஜ் செய்யலாம்?

சாதாரண சருமத்திற்கு, வாரம் இரண்டு முதல் மூன்று முறை மசாஜ் செய்யலாம். இதுவே கடுமையான தோல் பிரச்சனை கொண்டிருப்பவர்கள், சருமத்தை மீட்டெடுக்க முகத்தை தினமும் ஒரு முறை மசாஜ் செய்யலாம். அதன் படி, சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் மசாஜ் செய்யலாம். இந்த சமயத்தில், லேசான கைகளால் மசாஜ் செய்வது முகத் தோலுக்கு நன்மைகளைத் தருகிறது.

முகத்தை மசாஜ் செய்ய எந்த எண்ணெய் பயன்படுத்தலாம்?

சிலருக்கு முகத்தை மசாஜ் செய்வதற்கு எந்த எண்ணெய் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து சந்தேகம் எழும். முக மசாஜிற்கு எந்தெந்த எண்ணெய் பயன்படுத்தலாம் என்பது குறித்து காணலாம்.

தேங்காய் எண்ணெய்

சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்க தேங்காய் எண்ணெய் உதவுகிறது. மேலும், இதில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. இவை சருமத்தில் உள்ள பாக்டீரியா தொற்றுகளை நீக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Eye Dark Circles: கண் கருவளையங்கள் நீங்க வீட்டிலேயே பின்பற்ற வேண்டிய சில எளிய முறைகள்!

கெமோமில் எண்ணெய்

இது உடலின் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், இந்த எண்ணெயைப் பயன்படுத்துவது தோல் எரிச்சல், சொறி போன்றவற்றிலிருந்து நிவாரணம் தருகிறது. இந்த எண்ணெயைக் கொண்டு வாரம் ஒரு முறை முகத்திற்கு மசாஜ் செய்யலாம்.

ஆலிவ் எண்ணெய்

இது இதயம் மற்றும் சருமத்தை பிரகாசமாக்க வைக்க உதவுகிறது. வறண்ட சருமம் கொண்டவர்கள் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

தேயிலை மர எண்ணெய்

இந்த எண்ணெய் கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்வது சருமத்தை மேம்படுத்த உதவுகிறது. இது தோல் பதனிடுதல் மற்றும் முகப்பரு பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. இதன் மூலம் சரும பிரச்சனைகளை நீக்கலாம்.

பொதுவாக, மசாஜ் செய்வது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன், நல்ல தூக்கத்தைத் தருகிறது. இதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Upper Lip Hair: உதட்டின் மேல் வளரும் முடியை நீக்க சில வீட்டு வைத்திய முறைகள்

Image Source: Freepik

Read Next

Green Grapes For Skin: முக அழகுக்கு பச்சை திராட்சையே போதுமானது!

Disclaimer