Upper Lip Hair: உதட்டின் மேல் வளரும் முடியை நீக்க சில வீட்டு வைத்திய முறைகள்

  • SHARE
  • FOLLOW
Upper Lip Hair: உதட்டின் மேல் வளரும் முடியை நீக்க சில வீட்டு வைத்திய முறைகள்

உதட்டின் மேல் உள்ள முடியை நீக்குவதற்கான வீட்டு வைத்திய முறைகள்

இயற்கையாகவே உதட்டின் மேல் வளரும் முடியை நீக்கலாம். இந்த எளிய பொருள்களைச் சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் பலன்களைப் பெறலாம்.

தேன் மற்றும் எலுமிச்சை

எலுமிச்சையுடன் தேன் கலந்த கலவையும் முடி வளர்ச்சியைக் குறைக்க உதவுகிறது. இரண்டு டீஸ்பூன் அலவு தேனுடன், சர்க்கரை, எலுமிச்சைச்சாறு கலந்து மிதமான அளவில் சூடு செய்து பேஸ்ட் செய்ய வேண்டும். பிறகு இதை லேசாகத் தண்ணீர் விட்டு இறக்கி குளிர வைத்து முடி வளர்ச்சிக்கு எதிர்திசையில் தடவ வேன்டும். மேலும், இதை மெல்லிய பருத்தி துணியை ஒட்டி முடி வளர்ச்சிக்கு எதிர் திசையில் வேகமாக இழுக்க வேண்டும். இது சற்று வலி தருவதாக இருந்தாலும், அதிகளவு உபாதையை ஏற்படுத்தாது.

எலுமிச்சை மற்றும் சர்க்கரை கலவை

முகத்தில் உதட்டின் மேல் உள்ள முடியை நீக்க எலுமிச்சைச் சாறு மற்றும் சர்க்கரை கலந்த கலவை உதவுகிறது. எலுமிச்சைச் சாற்றை 2 டீஸ்பூன் அளவில் எடுத்துக் கொண்டு அதனுடன் 8 முதல் 9 டீஸ்பூன் வரை நீர் சேர்த்து கலக்க வேண்டும். பிறகு 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கலக்க வேண்டும். இவை நன்கு கொதிக்கும் வரை சூடாக்கி பின் இறக்கி விடலாம். சூடு தணிந்த பிறகு உதட்டில் முடி இருக்கும் இடத்தில் தடவி 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து குளிரிந்த நீரில் கழுவி வர முடி விரைவாக கொட்டி விடும்.

இந்த பதிவும் உதவலாம்: Ways To Remove Dark Spots: முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் விரைவில் மறைய சில வழிகள்!

முட்டை வெள்ளைக்கரு

முட்டை வெள்ளைக்கருவும் முடி வளர்ச்சியைக் குறைக்க உதவுகிறது. முட்டை வெள்ளைக்கருவுடன், அரை டீஸ்பூன் அளவு சோளமாவு கலந்து சிறிது சர்க்கரை சேர்த்து பேஸ்ட் போல செய்ய வேண்டும். இவற்றை விரல்களால் உதடு முழுவதும் தடவி 20 நிமிடங்கள் வரை வைத்து பின் உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி முடி வளர்ச்சியைக் குறைக்கலாம்.

மஞ்சள்

முடி வளர்ச்சியைக் குறைப்பதற்கு மஞ்சள் ஒரு சிறந்த தீர்வாகும். 1 டீஸ்பூன் மஞ்சள் உடன் 1 டீஸ்பூன் பால் கலந்து, பேஸ்ட் போல செய்து அதனை உதட்டின் மேல் தடவி மசாஜ் செய்ய வேண்டும். பிறகு 20 நிமிடங்கள் வரை வைத்து காட்டன் பருத்தி கொண்டு நன்றாகத் துடைத்து எடுக்க வேண்டும். இதை தினம் ஒரு முறை செய்வதன் மூலம் உதட்டின் மேல் உள்ள முடி வளர்ச்சியைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Causes of Pimples: முகத்தில் பருக்கள் வர முக்கிய காரணம்!

உருளைக்கிழங்கு மற்றும் பருப்பு கலவை

முதலில் பருப்பை மைய அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் எலுமிச்சைச்சாறு 5 டீஸ்பூன், சிறிய உருளைக்கிழங்கு 1, 3 டீஸ்பூன் பாசிப்பயிறு, தேன் 1 டீஸ்பூன் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் 20 நிமிடம் வரை இந்த கலவையை முடி வளர்ச்சி அடையும் தடவி வர, முடி வளர்ச்சி குறையும்.

வாழைப்பழம் மற்றும் ஓட்ஸ் கலவை

வாழைப்பழம் மற்றும் ஓட்ஸ் சேர்த்து கலந்து பேஸ்ட்டாக தயாரிக்க வேண்டும். இதனை முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும் இடத்தில் தடவி பின் 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி எடுக்க வேண்டும் இது உதட்டின் மேல் முடி வளர்வதைக் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: மஞ்சள் மற்றும் பால் கொண்டு முகத்தை சுத்தம் செய்வது எப்படி?

Image Source: Freepik

Read Next

Anti Aging Tips : எப்பவும் இளமையாக தெரிய இந்த ஃபேஸ் மாஸ்க்யை ட்ரை பண்ணுங்க!

Disclaimer

குறிச்சொற்கள்