Facial Hair Remedies: முகத்தில் உள்ள முடி இருந்த இடம் தெரியாமல் போக இந்த ரெமிடிஸ் யூஸ் பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
Facial Hair Remedies: முகத்தில் உள்ள முடி இருந்த இடம் தெரியாமல் போக இந்த ரெமிடிஸ் யூஸ் பண்ணுங்க

முகத்தின் முடிகளை அகற்ற உதவும் வீட்டு வைத்தியம்

முகத்தில் தோன்றிய முடிகளை நீக்க பயன்படுத்த வேண்டிய வீட்டு வைத்தியங்களைக் காணலாம்.

மஞ்சள் பேஸ்ட்

  • இந்த பேஸ்ட் தயார் செய்ய, மஞ்சள் தூளை தண்ணீர் அல்லது பாலுடன் கலந்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்க வேண்டும்.
  • மஞ்சள் பேஸ்ட்டை தேவையற்ற முடி உள்ள பகுதிகளில் தடவ வேண்டும்.
  • பின் இதை உலர வைத்து வட்ட இயக்கத்தில் மெதுவாக தேய்க்க வேண்டும்.

மஞ்சளில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளதால், இவை முடியை அகற்றுவதற்கான பாரம்பரிய அழகு நடைமுறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: இனி கருப்பான காலை மறைக்க வேணாம்! காலை பளபளப்பாக்க இந்த ரெமிடிஸ் யூஸ் பண்ணுங்க

முட்டை வெள்ளை மாஸ்க்

  • இந்த மாஸ்க் தயார் செய்ய, முட்டையின் வெள்ளைக்கருவை நுரை வரும் வரை அடிக்க வேண்டும்.
  • இதற்கு முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி உலர விட வேண்டும்.
  • இது காய்ந்ததும், அதை உரித்து, மெதுவாகக் கழுவ வேண்டும்.

இந்த முறையானது சருமத்தை இறுக வைத்து, முகத்தில் தேவையற்ற முடிகளை அகற்ற உதவுவதாகக் கூறப்படுகிறது.

உருளைக்கிழங்கு மற்றும் பருப்பு மாஸ்க்

  • இந்த பேஸ்ட் தயார் செய்வதற்கு, மஞ்சள் பருப்பை ஒரே இரவில் ஊறவைத்து பேஸ்டாக கலக்க வேண்டும்.
  • பின் உருளைக்கிழங்கை அரைத்து சாற்றை எடுத்துக் கொள்ளவும்.
  • அதன் பிறகு உருளைக்கிழங்கு சாறுடன் பருப்பு விழுதை கலந்து முகத்தில் தடவலாம்.
  • இதை உலர வைத்து பின் மெதுவாக ஸ்க்ரப் செய்யலாம்.

இதில் உருளைக்கிழங்கு சருமத்தை ஒளிரச் செய்யவும், பருப்பு முடி வளர்ச்சியைத் தடுப்பதற்கும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Homemade Kajal Benefits: அழகான, கவர்ச்சியான கண்களுக்கு வீட்டிலேயே காஜலை இப்படி செய்யுங்க

மஞ்சள் மற்றும் பப்பாளி மாஸ்க்

  • இவை இரண்டு சரும பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • இந்த மாஸ்க் தயார் செய்வதற்கு பச்சை பப்பாளியை ஒரு சிட்டிகை மஞ்சளுடன் சேர்த்து கலக்க வேண்டும்.
  • பின் இந்தக் கலவையை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு, இதை 15-20 நிமிடங்கள் அப்படியே வைத்து கழுவ வேண்டும்.

இதில் பப்பாளியில் உள்ள என்சைம்கள் மயிர்க்கால்களை பலவீனப்படுத்துகிறது. மேலும் மஞ்சள் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டு காணப்படுகிறது.

ஓட்ஸ் மற்றும் வாழைப்பழ ஸ்க்ரப்

  • இந்த ஸ்க்ரப் தயார் செய்வதற்கு முதலில் பழுத்த வாழைப்பழங்களை ஓட்மீலுடன் கலந்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்க வேண்டும்.
  • பிறகு இந்தக் கலவையை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் வைக்கலாம்.
  • பின் இதை மெதுவாக தேய்ப்பதன் மூலம் முகத்தின் முடியை நீக்கலாம்.

இதில் ஓட்மீல் எக்ஸ்ஃபோலியேட்ஸ் மற்றும் வாழைப்பழங்களில் சருமத்திற்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது.

சர்க்கரை மற்றும் எலுமிச்சை ஸ்க்ரப்

  • எலுமிச்சை மற்றும் சர்க்கரை ஸ்க்ரப் தயார் செய்வதற்கு சர்க்கரையை எலுமிச்சை சாறுடன் கலந்து ஸ்க்ரப்பை உருவாக்கலாம்.
  • இந்தக் கலவையை முகத்தை வட்ட இயக்கத்தில் மெதுவாக தேய்த்துக் கொள்ளலாம்
  • அதன் பின், இதை வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ளவும்.
  • இதில் எலுமிச்சை இயற்கையான ப்ளீச்சாக செயல்படுவதுடன், சர்க்கரை உரித்தலுக்கு உதவுகிறது.

இவ்வாறு பல்வேறு வீட்டு வைத்திய முறைகளைக் கையாள்வதன் மூலம் முகத்தில் உள்ள முடிகளை விரைவில் நீக்க முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Facial Hair Removal Tips: முகத்தில் தேவையற்ற முடிகளை நீக்க இந்த வீட்டு வைத்தியங்களை டிரை பண்ணுங்க

Image Source: Freepik

Read Next

Pink lip Tips: உங்க உதடு கருப்பா அசிங்கமா இருக்கா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!

Disclaimer

குறிச்சொற்கள்