Causes of increased facial hair growth in females: பொதுவாக ஆண்களுக்கு மட்டுமே முகத்தில் அதிகமாக முடி வளர்வதை பார்த்திருப்போம். ஆனால், சில நேரங்களில் ஒரு சில பெண்களின் முகத்தில் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். இது பெண்களின் அழகை பாதிக்க கூடிய விஷயமாகக் கருதப்படுகிறது. இவ்வாறு இயல்புக்கு மாறாக பெண்களின் முகத்தில் அதிகமாக முடி வளர்வது உடல்நல அபாயத்தைக் குறிக்கிறது. இதில் பெண்களுக்கு முகத்தில் வளரும் அதீத முடி வளர்ச்சிக்கான காரணங்கள் குறித்தும், அதைக் குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ஈரோடு, பேபி மருத்துவமனை, குழந்தை மருத்துவர் அல்லது ஆலோசகரான டாக்டர். அருண்குமார், எம்.டி. அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கியுள்ளார். அது குறித்து இதில் விரிவாககக் காண்போம்.
ஹிர்சுட்டிசம் (Hirsutism) என்றால் என்ன?
பொதுவாக ஹிர்சுட்டிசம் என்பது உடலின் சில பகுதிகளில் முடி அதிகமாக இல்லாத அல்லது குறைவாக இருப்பதைக் குறிப்பதாகும். அவ்வாறே பெண்களுக்கு முகத்தில் தோன்றும் அதிகமான முடி வளர்ச்சியானது ஹிர்சுட்டிசம் என அழைக்கப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: PCOS மற்றும் PCOD... நிரந்தரமான நீங்க வேண்டுமா.? இது ஒன்னு போதும்.!
நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் ஹெல்த் தளத்தில் குறிப்பிட்ட படி, “ஹிர்சுட்டிசம் என்பது அனைத்து வயது பெண் நோயாளிகளிலும் காணப்படும் ஒரு பொதுவான மருத்துவ நிலையாகும். இது சுமார் 5-10% பெண்களை பாதிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் கருப்பை அல்லது அட்ரீனலைக் குறிக்கக் கூடிய ஹைபராண்ட்ரோஜெனிசமாக இருக்கலாம். மேலும், இது ஒரு அரிய வளர்சிதை மாற்ற நோய்க்குறியைக் குறிக்கிறது. ஹிர்சுட்டிசம் ஒரு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைகிறது. குறிப்பாக, இது இளம் பெண்களில் காணப்படுகிறது. பொதுவாக பெண்களின் உடல் பாகங்களில் அதிகப்படியான முடி வளர்ச்சியை ஏற்படுத்தும் ஹிர்சுட்டிசம் ஆனது ஆண்ட்ரோஜன்கள் எனப்படும் ஹார்மோன்களின் அதிகரிப்பால் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.”
பெண்களுக்கு முகத்தில் முடி வளர காரணம் (Hirsutism Causes)
டாக்டர் அருண்குமார் அவர்களின் கூற்றுப்படி, பெண்களுக்கு முகத்தில் முடி வளரும் நிலையானது நீர்க்கட்டி பிரச்சனையான PCOD பிரச்சனையால் ஏற்படுகிறது. இந்த PCOD நிலையில் இன்சுலின் எதிர்ப்புத் தன்மையால் ஹார்மோன் சமநிலையின்மை உண்டாகலாம். பெண்களின் உடலில் ஏற்படும் இந்த ஹார்மோன் சமநிலையின்மை கருமுட்டையை (Ovary) பாதிக்கிறது. இதனால் அதிகப்படியான ஆண் ஹார்மோனான ஆண்ட்ரோஜன்கள் சுரப்பு அதிகரிக்கிறது. இதன் காரணமாகவே, ஆண்களைப் போன்று பெண்களுக்கும் முகத்தில் முடி வளர்ச்சி அதிகரித்து காணப்படுகிறது” என்று கூறியுள்ளார்.
முகத்தில் உள்ள முடியை எப்படி நீக்குவது?
சில பெண்கள் முகத்தில் தோன்றும் இந்த அதிகப்படியான முடியை நீக்குவதற்கு பியூட்டி பார்லர் சென்று முடியை நீக்குவர். ஆனால், இது தற்காலிக தீர்வாகத் தோன்றினாலும் முழுமையான தீர்வாக அமையாது. இன்னும் சிலர் முகத்தில் உள்ள முடியை நீக்க, சில மாத்திரைகளை எடுத்துக் கொள்வர். ஆனால், இவை நிரந்தர தீர்வாக அமையாது. இந்நிலையில் முகத்தின் முடியை போக்குவதற்கு PCOD-யில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று மருத்துவர் அருண்குமார் கூறியுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: PCOD Diet: பிசிஓடி இருக்கா.? இந்த பழங்களை தவறுதலாக கூட சாப்பிடாதீர்கள்.!
அதன் படி, Low carb diet என்று கூறப்படும் மாவுச்சத்து குறைவான உணவுமுறையைக் கையாள வேண்டும். உடல் பருமன் அல்லது உடல் எடை குறைவு இரண்டில் எந்த நிலையிலும் PCOD இருக்கும் போது, இன்சுலின் எதிர்ப்புத் தன்மையைக் கட்டுப்படுத்த இந்த டயட் சிறந்த தேர்வாகும். எனவே, அன்றாட உணவில் மாவுச்சத்தை எந்த அளவுக்கு குறைக்க முடியுமோ அந்த அளவிற்கு குறைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம், ஆரோக்கியமான புரதங்கள், கொழுப்புகள் நிறைந்த டயட் முறைகளான LCHF, Paleo, Keto போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும்.
View this post on Instagram
PCOD உள்ளவர்கள் உடல் பருமனைக் குறைப்பதன் மூலம் இந்த பிரச்சனையிலிருந்து விடுபட முடியும். எனினும், இதற்கு சிறந்த தீர்வாக குறைந்த கார்ப் டயட் என்ற குறைந்த கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். எனவே PCOD பிரச்சனை உள்ள பெண்களுக்கு முகத்தில் ஏற்படும் அதிக முடி வளர்ச்சியைத் தவிர்க்க Low carb உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது என்று டாக்டர். அருண்குமார் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: PCOD Diet Chart: PCOD இருக்கிறதா.? இந்த உணவுகளை முக்கியம்..
Image Source: Freepik