How To Remove Facial Hair Naturally: பெண்களுக்கு முகத்தில் முடி வளருவது இயல்பானது. இதனை தடுக்க சிலர் வேக்ஸிங், ஷேவிங், த்ரட்டிங் போன்றவற்றை செய்கிறார்கள். ஆனால் இது முடியை குறைக்காமல் இன்னும் அதிகரிக்கிறது. மேலும் இது சருமத்தில் அழற்ஜியை உண்டாக்கும். இன்னும் சிலர் லேசர் சிகிச்சை போன்றவற்றை நாடுகிறார்கள். ஆனால் இதனால் சில பக்க விளைவுகள் உண்டாகும்.
ஆனால் வீட்டிலேயே இயற்கை முறையில் முகத்தில் உள்ள முடிகளை அகற்ற முடியும். இதனால் எந்த பக்கவிளைவுகளும் இருக்காது. இதற்கு வீட்டில் உள்ள பொருட்களே போதும். இதற்காக அதிகம் செலவு செய்ய தேவை இல்லை. முகத்தில் உள்ள முடியை இயற்கை முறையில் வீட்டிலேயே அகற்ற, நீங்கள் பயன்படுத்த வேண்டிய பொருட்கள் இங்கே.

பேஷியல் ஹேர் வராமல் தடுக்க இயற்கை முறை (Natural Remedies To Remove Facial Hair)
தேன் மற்றும் சர்க்கரை
1 ஸ்பூன் தேனில் 2 ஸ்பூன் சர்க்கரையை கலந்து சிறிது சூடுபடுத்திக்கொள்ளுங்கள். இது வேக்ஸ் பதத்திற்கு மாறும். இந்த நேரத்தில் அடுப்பை நிறுத்திவிடுங்கள். இது குளிர்ந்ததும் முகத்தில் தடவி 20 நிமிடம் உலர விடவும். இது நன்கு உலர்ந்த பிறகு, ஒரு காட்டன் துணியை நீரில் நனைத்து, முகத்தை நன்கு அழுத்தி துடைக்கவும். இப்படி செய்தால் துணியோடு முடியும் சேர்ந்து வந்துவிடும்.
இதையும் படிங்க: ‘Makeup’ இல்லாமலேயே முகம் ஜொலிக்கணுமா? இதை செய்யுங்க!
பால், லெமன் மற்றும் ஜெலட்டின்
1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 3 ஸ்பூன் பால் மற்றும் 3 ஸ்பூன் ஜெலட்டின் பவுடரை சேர்த்து மிதமான தீயில் சூடுபடுத்தவும். இது குளிர்ந்த உடன், முகத்தில் தடவி நன்கு உலர விடவும். பின்னர் குளிர்ந்த நீரை கொண்டு முகத்தை ஸ்க்ரப் செய்யவும். இதே போல் வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள முடி நீங்கிவிடும்.
கடலை மாவு மற்றும் ரோஸ்வாட்டர்
கடலை மாவில் ரோஸ்வாட்டரை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற விடவும். இதனை நன்கு ஸ்க்ரப் செய்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இதனை வாரம் இரு முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள முடிகள் நீங்கும்.
கார்ன் ஸ்டார்ச் மற்றும் முட்டை
முட்டை வெள்ளைக்கருவில் சோள மாவு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே விடவும். பின் இதனை நன்கு ஸ்க்ரப் செய்யவும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இதனை வாரம் ஒரு முறை செய்துவந்தால் முகத்தில் உள்ள முடி நீங்கும்.
(இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள், தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை இருந்தால், இந்த கலவைகளை முகத்தில் தடவும் முன், தோல் மருத்துவரிடம் இருந்து ஆலோசனை பெறுவது நல்லது.)
Image Source: Freepik