How To Look Beautiful Without Makeup: பொதுவாக பெண்கள் தங்கள் அழகு மீது அதிகம் கவனம் செலுத்துபவராக இருப்பார்கள். இதற்காக வீட்டு வைத்தியம், அழகு சாதன பொருட்கள் போன்றவற்றை அதிகம் பயன்படுத்துகின்றன.
ஆனால் இன்றைய பிஸியான வாழ்க்கையில், அவர்களுக்கு ‘Makeup’ போட நேரம் இல்லை. இந்த நேரத்தில் மேக் -அப் இல்லாமலேயே எப்படி அழகாவது என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.
உள்ளிருந்து பொலிவு பெற இதை செய்யவும்

உங்கள் சருமம் ஜொலிக்க வேண்டும் என்றால், நீங்கள் நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரோட்டீன், வைட்டமின் சி,ஏ போன்ற ஊட்டச்சத்துகளை பெற வேண்டும். இதற்காக நீங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்ளலாம்.
முகம் உள்ளிருந்து பொலிவு பெற நீரேற்றமாக இருப்பது அவசியம். இதற்காக நீங்கள் தினமும் போதுமான அளவு தண்ணீர் அல்லது இயற்கையாக பெறப்படும் பழச்சாறுகளை குடிக்க வேண்டும். மேலும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ளலாம்.
குறிப்பாக உங்கள் சருமம் பளபளப்பாக ஆப்பிள், பீட் ரூட், கேரட் கலந்த சாறுகளை குடிப்பது நல்லது. மேலும் உங்கள் உணவில் இலை காய்கறிகளை இணைத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் முகத்தில் உள்ள அழுக்கை நீக்க உதவும்.
உடற்பயிற்சிக்கு முக்கிய பங்கு உண்டு
நீங்கள் தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தாலே போதும். இது உங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும், உங்கள் சருமத்தை பிரகாசிக்கவும் செய்யும்.
Image Source: Freepik