Sat Sep 12, 2026 | 12:58 AM IST

Skin whitening: 2 துண்டு பீட்ரூட் இருந்தா போதும், பத்து பைசா செலவில்லாமல் முகத்தை வெள்ளையாக்கலாம்!

Permanent skin whitening with beetroot: பிஸியான வாழ்க்கை முறை, பணிச்சுமை காரணமாக நம்மில் பலருக்கு சருமத்தை பராமரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை. இதனால், சருமம் வறண்டு கலையிழந்து காணப்படும். பணம் இருப்பவர்கள் வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் 2 முறையோ பார்லருக்கு சென்று அதிக அளவில் பணம் செலவு செய்து தங்கள் சருமத்தை பராமரிப்பார்கள். ஆனால், அவை நாம் எதிர்பார்த்த முடிவுகளை தருவதில்லை.

சருமத்தை பராமரிக்க எப்போதும் இயற்கையான பொருட்களை பயன்படுத்துவதே சிறந்தது. பளபளப்பான சருமத்திற்கு பீட்ரூட் மிகவும் நல்லது. இது சருமத்திற்கு சிவப்பு நிறத்தை தருவதுடன், முகத்தை பொலிவாக்கும். சருமத்தில் பீட்ரூட்டை எப்படி பயன்படுத்துவது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : எப்பவும் அழகா இளமையா தெரியனுமா? இந்த 2 பொருட்களை முகத்தில் தடவுங்க!

பீட்ரூட் மற்றும் கற்றாழை ஜெல்

பளபளப்பான சருமத்தைப் பெற, பீட்ரூட்டுடன் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தலாம். இதனால், சருமம் பளபளப்பாக காணப்படும். இதற்கு முதலில், கற்றாழை ஜெல்லை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இப்போது அதில் 2 ஸ்பூன் பீட்ரூட் சாறு சேர்க்கவும்.

இந்த கலவையை நன்றாக கலக்கவும். அதன் பிறகு, அதை உங்கள் முகத்தில் தடவி 2 நிமிடங்கள் விடவும். பின்னர், லேசான கைகளால் முகத்தை மசாஜ் செய்யவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை சுத்தம் செய்யவும்.

இந்த பதிவும் உதவலாம் : Youthful Skin: குளிர்காலத்தில் சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும் 5 மூலிகைகள்!

முல்தானி மிட்டி மற்றும் பீட்ரூட்

முகம் பொலிவு பெற, பீட்ரூட்டில் முல்தானி மிட்டியை கலந்து தடவலாம். இது சருமத்தை மேம்படுத்துகிறது. இதற்கு முதலில் முல்தானி மிட்டியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 பீட்ரூட்டை அரைத்து சாறு எடுக்கவும். நீங்கள் விரும்பினால், இதில் எலுமிச்சை சாறு அல்லது தயிர் சேர்க்கலாம். பின்னர் இவற்றை நன்றாக கலக்கவும்.

தேவைப்பட்டால், அதில் ரோஸ் வாட்டர் சேர்க்கலாம். இப்போது அதை முகத்தில் தடவவும். பிறகு 15 நிமிடம் உலர விடவும். பின்னர், உங்கள் கையில் தண்ணீரை எடுத்து, உங்கள் முகத்தை சிறிது ஈரப்படுத்தி, நன்றாக மசாஜ் செய்யவும். சுமார் 2 நிமிடம் மசாஜ் செய்த பிறகு, முகத்தை தண்ணீரில் சுத்தம் செய்து, டவலால் சுத்தம் செய்யவும். இது உங்கள் முகத்தை நீண்ட நேரம் பளபளப்பாக வைத்திருக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : Homemade Lip Oil: இந்த குளிருல வறண்டு போன உதட்டுக்கு லிப் ஆயில் தயாரிப்பது எப்படி?

மனதில் கொள்ளவேண்டிய விஷயங்கள்

பீட்ரூட்டைப் பயன்படுத்தும் போது, ​​உங்கள் சருமத்தில் எந்த வித ஒவ்வாமையும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பீட்ரூட் உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால், அதை தோலில் பயன்படுத்த வேண்டாம். நீங்கள் பீட்ரூட்டை முகத்திற்கு பயன்படுத்தும் போது, அதை நன்கு சுத்தம் செய்யுங்கள்.

Pic Courtesy: Freepik

Read Next

எப்பவும் அழகா இளமையா தெரியனுமா? இந்த 2 பொருட்களை முகத்தில் தடவுங்க!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content