Homemade drinks for skin whitening: திருமண நாள் நெருங்கி வரும் நேரத்தில் புதிய மணப்பெண்கள் அழகு நிலையத்திற்குச் சென்று பல்வேறு சரும பராமரிப்புப் பொருள்களைப் பயன்படுத்துவர். இவ்வாறு அழகு நிலையத்தில் மேக்கப் போடுவதன் மூலம் மட்டுமே திருமணத்தின் போது அழகாக இருக்க முடியும் என பலரும் நம்புகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த நாளில் கூடுதல் பளபளப்பைப் பெற அனைவரும் விரும்புகின்றனர். உண்மையில், சரும பொலிவு என்பது வெளிப்புறப் பூச்சுகளைப் பயன்படுத்துவதைக் காட்டிலும், உட்புறத்திலிருந்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதைக் குறிக்கிறது.
இயற்கையாகவே சரும பொலிவைப் பெற விரும்புபவர்கள் இது போன்ற அழகு பராமரிப்புப் பொருள்களைப் பயன்படுத்துவதை விட சில ஆரோக்கியமான வீட்டு வைத்திய முறைகளைக் கையாளலாம். உடலின் உட்புறத்தை சரியான முறையில் பாதுகாத்துக் கொள்வதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக வைப்பதுடன், பளபளப்பான சருமத்தைப் பெறலாம். அவ்வாறு டயட்டீஷியன் ரிச்சா கங்கானி அவர்கள் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் சருமத்தைப் பொலிவாக்க குடிக்க வேண்டிய பானம் தயாரிக்கும் முறை குறித்து பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இதில் விரிவாகக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Drinks For Glowing Skin: 7 நாட்களில் சருமம் பால் போல பளபளக்க… இந்த பானங்கள குடியுங்க!
ஏன் உட்புற சரும பராமரிப்பு முக்கியம்?
சருமத்திற்குள்ளேயே பளபளப்பைப் பெற விரும்புபவர்கள் சரியான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையைக் கையாள வேண்டியது அவசியமாகும். அதாவது சரியான உணவு, நீரேற்றமாக வைப்பது மற்றும் வழக்கமான உடற்பயிற்சி போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. உண்மையில், சரும ஆரோக்கியம் குடல் ஆரோக்கியத்தைப் பொறுத்து அமைகிறது. நல்ல குடல் ஆரோக்கியத்தின் உதவியுடன், நல்ல பொலிவான, பளபளப்பான சருமத்தைப் பெறலாம்.
பொலிவான சருமத்திற்கு உதவும் பானம்
இந்த பானத்தின் செயல்முறை குறித்து ஊட்டச்சத்து நிபுணர் ரிச்சா கங்கானி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது,”21 நாட்களில் தெளிவான மற்றும் ஒளிரும் கண்ணாடி போன்ற சருமத்தைப் பெற ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே அதிகம் உள்ள நான்கு அடிப்படை பொருட்கள் சேர்த்த பானத்தை அருந்தலாம்” என்று அவர் குறிப்பிடுகிறார்.
அதன் படி, பீட்ரூட், கேரட், கறிவேப்பிலை மற்றும் ஆம்லா ஆகிய நான்கு பொருள்களையும் கலந்து பானத்தைத் தயார் செய்து தினமும் ஒரு கிளாஸ் குடிக்க வேண்டும். சிறந்த செரிமான ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கு இந்த பானத்தை வடிகட்டி அல்லது நார்ச்சத்துடன் அப்படியே குடிக்கலாம்.
தேவையானவை
- பீட்ரூட் (சிறியது) - 1 (நறுக்கியது)
- கேரட் (சிறியது) - 1 (நறுக்கியது)
- ஆம்லா - 1 (நறுக்கியது)
- கறிவேப்பிலை - 5-10 இலைகள்
- தேங்காய் தண்ணீர் - சிறிதளவு
செய்முறை
- இந்த நான்கு பொருள்களையும் மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும். பிறகு இதில் சிறிது தேங்காய் தண்ணீரையும் சேர்த்து அரைக்கலாம்.
- இந்த பானத்தை வடிகட்டியோ அல்லது அப்படியே குடிக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Skin whitening: 2 துண்டு பீட்ரூட் இருந்தா போதும், பத்து பைசா செலவில்லாமல் முகத்தை வெள்ளையாக்கலாம்!
சருமத்திற்கு கேரட், பீட்ரூட், ஆம்லா சாறு தரும் நன்மைகள்
கேரட்
இதில் வைட்டமின் சி, ஈ, பீட்டா கரோட்டின் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை சருமத்தை நச்சு நீக்கம் செய்ய உதவுகிறது. மேலும் வெயிலிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. கேரட் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தவும், இயற்கையான பளபளப்பை வழங்கவும் உதவுகிறது.
பீட்ரூட்
பீட்ரூட்டில் வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது வறண்ட சருமம் மற்றும் சுருக்கங்களைத் தடுக்க உதவுகிறது. மேலும் இதில் சிறிதளவு லைகோபீன் மற்றும் ஸ்குவாலீன் போன்றவை உள்ளது. இது சருமத்தின் முதுமை அறிகுறிகளைக் குறைக்கவும், சருமத்திற்கு உள்ளிருந்து பளபளப்பைத் தரவும் உதவுகிறது.
ஆம்லா
இது வைட்டமின் சி இன் சக்திவாய்ந்த மூலமாகும். ஆம்லாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்திற்குத் தேவையான கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இது சருமத்தின் உறுதி மற்றும் நெகிழ்ச்சித்தன்மையைப் பராமரிக்க உதவுகிறது. இது தவிர, சுருக்கங்கள், நேர்த்தியான கோடுகள் மற்றும் வயதான புள்ளிகளைக் குறைக்கவும் ஆம்லா உதவுகிறது.
கறிவேப்பிலை
இதில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளது. இது சருமத்தின் ஆரோக்கியமான நிறத்திற்கு அவசியமாகும். இது தவிர, கறிவேப்பிலையில் உயிரியல் ரீதியாக செயல்படும் சேர்மங்கள் உள்ளது. இது சருமத்தை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கவும், சருமத்திற்கு புத்துணர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
இந்த பானத்தை அருந்துவது மட்டுமல்லாமல் ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையைக் கையாள்வதன் மூலம் சரும ஆரோக்கியத்துடன் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பேணிப் பாதுகாக்கலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Amla Benefits For Face: ஆம்லாவை இப்படி யூஸ் பண்ணா முகத்தில் இந்த பிரச்சனை எல்லாம் வராதாம்!
Image Source: Freepik