Drinks For Glowing Skin: 7 நாட்களில் சருமம் பால் போல பளபளக்க… இந்த பானங்கள குடியுங்க!

  • SHARE
  • FOLLOW
Drinks For Glowing Skin: 7 நாட்களில் சருமம்  பால் போல பளபளக்க… இந்த பானங்கள குடியுங்க!

பண்டிகைகள் மற்றும் திருமணங்களில் பெண்கள் அழகாகவும் தனித்துவமாகவும் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இதற்கு விலை உயர்ந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் வீட்டில் இருக்கும் சில பொருட்களை செலவில்லாமல் பயன்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான பொலிவைப் பெறலாம்.

பீட்ரூட் + நெல்லிக்காய் ஜூஸ்:

பீட்ரூடன் நெல்லிகாய் கலந்து தயாரிக்கப்படும் ஜூஸ் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் சி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்திலுள்ள கரும்புள்ளிகள், கருவளையங்களை போக்குவது, சரும நிறத்தை அதிகரிப்பது ஆகியவற்றை செய்கிறது.

நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி சரும வறட்சி, கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பது போன்ற பலன்களைக் கொடுக்கிறது.

வெள்ளரி + புதினா ஜூஸ்:

வெள்ளரி மற்றும் புதினா சருமத்தை எப்போதும் நீரேற்றமாக வைத்திருக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் முகத்தில் புள்ளிகள், எண்ணெய் போன்ற பிரச்சனைகள் வராது.

வெள்ளரிக்காயில் வைட்டமின் சி உள்ளது, இது சருமத்தை பொலிவாக்கும். வெள்ளரி தோல், இயற்கையாகவே எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்த உதவுகிறது.

இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தோல் அழற்சியை குறைக்கவும், காஃபிக் மற்றும் ஃபோலிக் அமிலங்கள் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

இஞ்சி, பீட்ரூட், நெல்லிக்காய் கலந்த சாறு:

இவை ஆக்ஸிஜனேற்ற உணவுகள் என்று அழைக்கப்படுகின்றன. இதனுடன் நெல்லிக்காயில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இந்த ஜூஸை குடிப்பதால் உங்கள் சருமம் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது வீக்கம் மற்றும் முகப்பருவை அகற்ற உதவுகிறது. இது தவிர, இஞ்சியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. இஞ்சி சருமத்தில் உள்ள கறைகள் மற்றும் புள்ளிகளை குறைத்து உங்கள் அழகை அதிகரிக்கிறது.

காய்கறி ஜூஸ்:

பீட்ரூட், கேரட், ப்ரோக்கோலி மற்றும் இஞ்சி போன்ற காய்கறிகளை ஜூஸ் செய்வது மிகவும் நல்லது.

கேரட்டில் இருக்கும் வைட்டமின் ஏ சருமத்தின் எண்ணெய்பசையை அகற்ற உதவுவதோடு, கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமம் இளமையாகவும், பளபளப்பாகவும் இருக்க உதவுகிறது.

எலுமிச்சை ஜூஸ்:

எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நம்மை ஆரோக்கியமாக்குகிறது. மேலும் சருமம் பிரகாசமாக இருக்கும். எலுமிச்சை சாறு சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி, முகத்தை பொலிவாக்குகிறது.

Image Source: Freepik

Read Next

Glowing Skin Tips: சருமம் ஜொலிக்க இந்த ஒன்னு போதும்.! ட்ரை பண்ணுங்க..

Disclaimer

குறிச்சொற்கள்