Glowing skin food list: நல்ல ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்தைப் பெற யாருக்குத் தான் ஆசை இருக்காது. ஆம். உண்மையில் பளபளப்பான, பொலிவான சருமத்திற்காக பலரும் பல்வேறு சரும பராமரிப்புப் பொருள்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். சிலர் வீட்டிலேயே தயார் செய்து சருமத்தைப் பொலிவாக்க உதவும் பொருள்களை பயன்படுத்துவர். ஆனால், உண்மையில் சரும ஆரோக்கியம் என்பது சருமத்திற்கு வெளிப்பூச்சாக என்ன பயன்படுத்துகிறோம் என்பதை விட, நாம் சருமத்தைப் பொலிவாக்க சாப்பிட வேண்டிய உணவுகளும் அடங்கும். குறிப்பாக, காலை உணவானது நாள் முழுவதும் தொனியை அமைக்கிறது.
இவை ஆற்றலின் அடிப்படையில் மட்டுமல்லாமல், சருமத்திற்கு நீரேற்றம், நெகிழ்ச்சி மற்றும் பளபளப்பைத் தரக்கூடியதாகும். முக்கியமாக, குடல் ஆரோக்கியம் சருமத்தை மேம்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே தான் நாம் காலையில் சாப்பிட வேண்டிய உணவை ஆரோக்கியமாக எடுத்துக் கொள்வது அவசியமாகக் கருதப்படுகிறது. காலையில் முதலில் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது சருமத்திற்கு உள்ளிருந்து ஊட்டமளிக்கக்கூடிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதில் பளபளப்பான சருமத்தை ஆதரிக்க தினமும் காலையில் சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான உணவுகளைக் காணலாம்.
சருமம் பளபளப்பாக இருக்க காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்
வெதுவெதுப்பான எலுமிச்சை நீர்
காலையில் வெறும் வயிற்றில் புதிய எலுமிச்சை சாறு கலந்த ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் நாளைத் தொடங்குவது உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். இந்த எளிய நச்சு நீக்க பானமானது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இவை செரிமானத்தை மேம்படுத்தவும், வைட்டமின் சி உட்கொள்ளலை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் எலுமிச்சை நீரானது கொலாஜன் உற்பத்தி மற்றும் சரும பழுதுபார்ப்புக்கு அவசியமான ஆக்ஸிஜனேற்றிகளைக் கொண்டுள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: Antioxidant Rich Foods: சருமம் ஜொலிக்க வேண்டுமா.? ஆன்டி ஆக்ஸிடண்ட் எடுத்துக்கோங்க…
முக்கிய கட்டுரைகள்
பப்பாளி
இந்த வெப்பமண்டல பழம் சுவையானது மட்டுமல்லாமல், சக்திவாய்ந்த சரும சுத்தப்படுத்தியாகவும் அமைகிறது. இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் பப்பேன் போன்ற செரிமான நொதிகள் நிறைந்துள்ளது. இவை சருமத்தில் ஏற்படும் கறைகளை அழிக்கவும், சுருக்கங்களைத் தடுக்கவும், சூரிய ஒளியால் ஏற்படும் நிறமிகளைக் குறைக்கவும் உதவுகிறது. எனவே இதை வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகுந்த நன்மை பயக்கும்.
பெர்ரி பழங்கள்
ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் ப்ளூபெர்ரி போன்ற பெர்ரி பழங்கள் ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின் சி மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்த பழமாகும். இவை சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும் இவை கொலாஜன் தொகுப்பை ஊக்குவிக்கின்றன. எனவே காலை நேரத்தில் ஒரு கிண்ணம் பப்பாளி அல்லது ஸ்மூத்தியாக எடுத்துக் கொள்ளலாம்.
ஊறவைத்த பாதாம்
இரவில் ஊறவைத்த பாதாமை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது சருமத்திற்கு ஒரு சூப்பர்ஃபுட்டாகக் கருதப்படுகிறது. இதில் வைட்டமின் ஈ, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது. இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடவும், சரும நெகிழ்ச்சித்தன்மையைப் பராமரிக்கவும் உதவுகின்றன. காலையில் ஊறவைத்த 2-5 பாதாம் பருப்புகளை சாப்பிடுவது உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தையும் மென்மையையும் கணிசமாக மேம்படுத்தி, சூரிய கதிர்களிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
கிரீன் டீ
காலையில் டீ, காபிக்கு பதிலாக ஒரு கப் கிரீன் டீ அருந்துவது சருமத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். கிரீன் டீயானது அழற்சி எதிர்ப்பு மற்றும் வயதான எதிர்ப்பு நன்மைகளைக் கொண்ட கேட்டசின்கள்-தாவர அடிப்படையிலான சேர்மங்கள் நிறைந்ததாகும். கிரீன் டீயைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் முகப்பருவைக் குறைக்கவும், புற ஊதா கதிர்வீச்சு சேதத்திலிருந்து பாதுகாக்கவும் முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: வயசானாலும் உங்க ஸ்கின் இளமையா இருக்கணுமா? இந்த ஐந்து உணவுகளை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க
ஆளி விதைகள் அல்லது சியா விதைகள்
ஒரு தேக்கரண்டி அளவிலான ஆளி விதைகள் அல்லது சியா விதைகளை இரவு முழுவதும் தண்ணீர் அல்லது பாதாம் பாலில் ஊறவைத்து காலையில் சாப்பிடுவது சருமத்திற்கு நன்மை தருகிறது. இவை ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் ஆற்றல் மையமாகும். இந்த ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தைக் குறைக்கவும், சரும நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தவும் உதவுகின்றன. மேலும் இது சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது.
தயிரில் ஊறவைத்த ஓட்ஸ்
தயிரில் இரவு முழுவதும் ஊறவைத்த ஒரு கிண்ணம் ஓட்ஸை காலையில் உட்கொள்வது குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. இது புரோபயாடிக் நிறைந்த காலை உணவாகும். இவை தெளிவான சருமத்திற்கு வழிவகுக்கிறது. மேலும் தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் மற்றும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் போன்றவை சரும நுண்ணுயிரியை சமநிலைப்படுத்தி வீக்கத்தைக் குறைக்கிறது. நல்ல செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்களின் உதவியுடன் நல்ல சருமத்தைப் பெறலாம்.
காலை வழக்கத்தில் இந்த உணவுகளைச் சேர்ப்பது சருமத்தை இயற்கையாகவே நச்சு நீக்கம் செய்யவும், நீரேற்றமாக வைக்கவும் உதவுகிறது. போதுமான நீர் உட்கொள்ளல் மற்றும் நல்ல தூக்கத்துடன் இந்த தேர்வுகளை இணைப்பது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: டார்க் சாக்லேட் சாப்பிடுங்க.. சும்மா பளபளனு தங்கம் போல ஜொலிக்கும் சருமத்தைப் பெறுங்கள்
Image Source: Freepik