Doctor Verified

பெண்களின் முகத்தில் தேவையற்ற முடி வளர்வதற்கு காரணம் என்ன? வீட்டிலேயே நீக்கும் இயற்கை KKR முறை!

பெண்களுக்கான முக முடி பிரச்சனையான ஹிர்சூட்டிசம் ஏன் ஏற்படுகிறது? ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, PCOS காரணங்கள் மற்றும் வீட்டிலேயே செய்யக்கூடிய குப்பைமேனி–கஸ்தூரி மஞ்சள்–ரோஸ் வாட்டர் (KKR) பேஸ்ட் மூலம் முடியை குறைக்கும் இயற்கை தீர்வு.
  • SHARE
  • FOLLOW
பெண்களின் முகத்தில் தேவையற்ற முடி வளர்வதற்கு காரணம் என்ன? வீட்டிலேயே நீக்கும் இயற்கை KKR முறை!

பெண்களுக்கு ஏற்படும் பல ஹார்மோன் சார்ந்த பிரச்சனைகளில், முகத்தில் தேவையற்ற அளவில் மீசை அல்லது தாடி போன்ற முடிகள் வளர்வது மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்தும். அழகியல் ரீதியாகவும், மனரீதியாகவும் இதனால் பலர் தன்னம்பிக்கையிழக்க நேரிடுகிறது. மருத்துவ ரீதியில் இவ்வாறு பெண்களின் முகம் மற்றும் உடலில் ஆண் மாதிரி முடி வளர்வதைக் Hirsutic Features அல்லது Hirsutism என்று அழைக்கப்படுகிறது.


முக்கியமான குறிப்புகள்:-


ஹிர்சூட்டிசம் ஏன் ஏற்படுகிறது?

பெண்களின் உடலில் பெண் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் அதிகமாக இருப்பது இயல்பு. ஆனால் மிகவும் குறைந்த அளவில் மட்டுமே சுரக்க வேண்டிய ஆண் ஹார்மோன்கள் - ஆண்ட்ரோஜென் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் - அதிகரித்தால் முகத்தில் முடி வளர்ச்சி கூடும்.

இந்த நோய்கள் அதிக ஆண் ஹார்மோன்களை ஏற்படுத்தும்:

  • PCOS / PCOD
  • Fibrocystic disease of breast
  • Fibroid uterus
  • Adenomyosis
  • Fibroadenoma of breast

இந்த மருத்துவ நிலைகளில் ஏற்கனவே ஹார்மோன்கள் சீர்குலைந்து இருக்கும் காரணத்தால், முகத்தில் முடி வளர்வது சாதாரண பக்கவிளைவாகும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Video Link: https://youtu.be/nU2SD1wyTjc

முக முடியை குறைக்கும் நம்பத்தகுந்த வீட்டுவழி – KKR Combination

அதிக ஆண் ஹார்மோன் காரணமாக ஏற்படும் முக முடி பிரச்சனையை குறைக்க, இயற்கை வைத்தியத்தில் மிகுந்த பயன் தருவது KKR காம்பினேஷன்.

K – குப்பைமேனி பொடி
K – கஸ்தூரி மஞ்சள்
R – ரோஸ் வாட்டர்

இந்த மூன்றும் சேரும்போது முடியின் வேரை பலவீனப்படுத்தும் இயற்கை கலவையாக மாறுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: அழகை அள்ளித்தரும் ஆவாரம்பூ! முக பொலிவுக்கு இப்படி யூஸ் பண்ணுங்க..

எப்படி தயாரிப்பது?

  • அரை டீஸ்பூன் குப்பைமேனி பொடி
  • அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள்
  • தேவையான அளவு ரோஸ் வாட்டர்
  • இந்தப் பொருட்களை ஒன்றாகச் சேர்த்து ஒரு சமமான பேஸ்ட்டாக கலக்கவும்.

எப்படிப் பயன்படுத்துவது?

  • மீசை, தாடி, கன்னப்பகுதி போன்ற மெல்லிய முதல் அடர்த்தியான facial hair உள்ள இடங்களில் தடவவும்.
  • புருவம் மற்றும் ஹேர்லைன் பகுதிகளை தவிர்க்கவும்.
  • பேஸ்ட்டை சுமார் 2 மணி நேரம் காயவிடவும்.
  • பின்னர் தண்ணீர் கொண்டு முகத்தை மெதுவாக கழுவவும்.

தொடர்ந்து பயன்படுத்தினால் கிடைக்கும் பலன்

இந்த பேஸ்ட்:

  • முடியின் வேரான hair follicles-ஐ பலவீனப்படுத்தும்
  • அடர்த்தியான முடிகளை மெல்லியதாக மாற்றும்
  • நாளடைவில் உதிர்ந்து குறையச் செய்யும்
  • மீண்டும் வளர்வதை மெதுவாக்கும்

இது நிலத்தில் சாணம் தெளித்து களைகளை அழிக்கும் முறையுடன் ஒத்ததாக நிபுணர்கள் விளக்குகின்றனர்.

நிபுணர் பரிந்துரை:

நீங்கள் இந்த முறையை 3 முதல் 5 மாதங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் கணிசமான மாற்றம் தெரியும்.

இறுதியாக..

பெண்களிடம் ஏற்படும் முக முடி பிரச்சனை என்பது வெறும் அழகியல் சிக்கல் மட்டுமல்ல, அது உடலின் ஹார்மோன் சமநிலையிலான மாற்றத்தையும் குறிக்கிறது. இயற்கையாகவும், ரசாயனம் இல்லாமலும் இந்த பிரச்சனையை கட்டுப்படுத்த விரும்புவோருக்கு KKR காம்பினேஷன் மிகச் சிறந்த வழி. தொடர்ச்சியான பயன்படுத்துதல், உணவில் மாற்றங்கள், ஹார்மோன் பரிசோதனைகள் ஆகியவை இணைந்தால், முக முடி பிரச்சனை பெருமளவில் குறைய வாய்ப்பு அதிகம்.

பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள வீட்டுவழி சிகிச்சை பொதுத் தகவலுக்காக மட்டுமே. ஹார்மோன் பிரச்சனைகள் அல்லது தீவிர மருத்துவ நிலைகள் இருந்தால், மருத்துவர் ஆலோசனம் அவசியம்.

Read Next

இளநரை காரணங்கள் & தீர்வுகள்.. சித்த மருத்துவம் கூறும் 3 அற்புத முறைகள்.. டாக்டர் நித்யா விளக்கம்.!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Dec 09, 2025 00:50 IST

    Published By : Ishvarya Gurumurthy

குறிச்சொற்கள்