Facial Hair Removal: ஆண்களை போல் பெண்களுக்கும் முகத்தில் முடி வளரும். இதற்கு சில ஹார்மோன் ஏற்ற இறக்கங்களே காரணம். சிலருக்கு இயற்கையாகவே முகத்தில் முடி வளரும். இதில் குடும்ப வரலாரும் அடங்கும்.
முகத்தில் வளரும் முடியை ஆண்களை போல் பெண்களும் Shaving செய்யலாமா? முகத்தில் உள்ள முடிகள் உங்கள் அழகை குறைக்கும். ஆகையால் பெண்களும் ஷேவிங் அல்லது லேசர் ஹேர் ரிடக்ஷன் செய்துக்கொள்ளலாம்.
ஆனால் பரவிவரும் சில கட்டுக்கதையினால் பெண்கள் முகத்தில் ரேஸர் பயன்படுத்த யோசிக்கிறார்கள். அதாவது முகத்தில் ஷேவ் செய்தால் மீண்டும் முடி அதிகமாக வளரும் என்று சிலர் கூறுவதை கேட்டு, சில பெண்கள் Shaving செய்யலாமா செய்யக்கூடாதா என்ற சந்தேகத்தில் உள்ளனர்.

முகத்தில் Shaving செய்வது எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. நீங்கள் வேக்சிங் அல்லது த்ரெடிங் செய்யும் போது முடி அடியோடு பிடுங்கி எடுக்கப்படுகிறது. இதனால் முடி வளர்வதில் தாமதமாகிறது. ஆனால் நீங்கள் Shaving செய்யும் போது மேல் முடி மட்டும் அகற்றப்படுகிறது. இதனால் முடி விரைவில் வளர்கிறது. மேலும் நீங்கள் Shaving செய்யும் போது முடி பாதிக்கப்படாது. இதனால் முடி வளரும் போது அடர்த்தியாக வளர்வது போல் தோன்றும்.
நீங்கள் Shaving செய்யும் போது, உங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களும் நீங்கும். சேவிங் செய்வதற்கு முன்னும் பின்னும் மாய்ஸ்சரை பயன்படுத்த வேண்டும். உணர்திறன் வாய்ந்த சருமம் கொண்டவர்கள், Shaving செய்ய வேண்டாம். இது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் ஷேவிங் செய்யும் போது கவனமாக இருப்பது அவசியம். இல்லையெனில் முகத்தில் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் சேவிங் செய்வதற்கு முன் தோல் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். அவர்கள் உங்களுக்கான தீர்வை வழங்க முடியும்.
Image Source: Freepik