Hirsutism:பெண்களே முகத்தில் முடி வளர்ச்சியா? - உணவு மூலம் கட்டுப்படுத்த Dr.அருண் குமார் சூப்பர் டிப்ஸ்!

பெண்களுக்கு முகத்தில் முடி முளைக்க காரணம் என்ன, அதனை உணவு முறையிலேயே இயற்கையாக சரி செய்வது எப்படி என மருத்துவர் அருண் குமார் விரிவாக விளக்கம் அளித்துள்ளார். 
  • SHARE
  • FOLLOW
Hirsutism:பெண்களே முகத்தில் முடி வளர்ச்சியா? - உணவு மூலம் கட்டுப்படுத்த Dr.அருண் குமார் சூப்பர் டிப்ஸ்!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக ஊடகங்கள் அவரை பேட்டி கண்டன. அதனை சோசியல் மீடியாவில் ஷேர் செய்து, அவருடைய முகத்தில் அளவுக்கு அதிகமாக முடி வளர்ந்திருப்பதை நிறைய பேர் கேலி, கிண்டல் செய்தனர். இது கட்டாயம் கண்டிப்படக்கூடியது. அதுமட்டுமின்றி பெண்களுக்கு இப்படி முகத்தில் முடி வளர காரணம் என்ன என்பது குறித்த அறிவியல் விளக்கத்தையும்அறிந்து கொள்ள வேண்டும்.

ஆண்களுக்கு மீசை, தாடி அதெல்லாம் இருக்கிறது சகஜம் ஏன்னா ஆண்களுடைய அந்த ஹார்மோன் தன்மை இருக்கு. ஆனா பெண்களுக்கு இந்த மாதிரி முடி முளைச்சா இதை வந்து ஹிர்சூட்டிசம் (Hirsutism) என மருத்துவ ரீதியாக அழைக்கப்படுகிறது.



 

ஹிர்சூட்டிசம் ஏற்படுவதற்கான காரணங்கள்:

தற்போது பெரும்பாலான பெண்களுக்கு பிசிஓடி என சொல்லக்கூடிய நீர்க்கட்டி பிரச்சனை பெரும்பாலானோருக்கு இருக்கிறது. இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய், குழந்தைப்பேறு தள்ளிப்போவது உள்ளிட்டவை ஏற்படும். இவர்களுக்கு ஓவுலேஷன் என சொல்லக்கூடிய சினைமுட்டை உற்பத்தி சரியாக இருக்காது. இதற்கு ஹார்மோன் சமநிலையின்மை காரணமாகும்.

இன்சுலின் எதிர்ப்பு தன்மையின் காரணமாக சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ஃபேட்டி லிவர் போன்ற பிரச்சனைகள் வரும் என பார்த்திருப்போம். இந்த இன்சுலின் எதிர்ப்பு தன்மையால் ஏற்படக்கூடிய ஹார்மோன் சமநிலையின்மை ஓவரியைப் பாதிக்கும் பொழுது பெண்களுக்கு பிடிஓடி பிரச்சனை ஏற்படுகிறது. இந்த ஹார்மோன் தான் ஈஸ்ட்ரோஜன் ப்ரோஸ்ட்ரான் அதிகரிக்கும். ஆனால் சில பெண்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு தன்மை காரணமாக ஆண் ஹார்மோன்களான ஆண்ட்ரோஜன்ஸ் டெஸ்டோஸ்டிரான் சுரப்பு அதிகரிக்கிறது.

இது ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக கலந்து பெண்களுக்கு முகத்தில் முடி வளர்ச்சி அதிகமாக காரணமாகிறது. இது தான் ஹிஸ்டூட்டிசம் என அழைக்கப்படுகிறது என்கிறார் மருத்துவர் அருண் குமார்.

உணவு மூலம் சரி செய்வது எப்படி?

முகத்தில் அளவுக்கு அதிகமாக வளரும் முடியை சரி செய்ய நிறைய பெண்கள் பியூட்டி பார்லர் செல்வார்கள். சிலர் டேனோசால் என்ற மாத்திரையை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் இதற்கான நல்ல தீர்வு என்பது முறையான உணவுக்கட்டுப்பாடு மட்டுமே என்கிறார்.

பிசிஓடி, ஹிர்சூட்டிசம் இருக்கும் பெண்கள் லோ காஸ்ட் கார்போஹைட்ரேட் டயட் எனப்படும் குறைவான மாவுச்சத்து உள்ள உணவை எடுத்துக்கொள்வது தான் சிறந்தது. இதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும். உடல் எடை குறைந்தால் பிசிஓடி பிரச்சனை முழுமையாக குணமடையாவிட்டாலும், இன்சுலின் எதிர்ப்பு தன்மையை குறைக்க முடியும். இதன் மூலமாக ஹார்மோன் சமநிலையின்மையை சரி செய்து, முகத்தில் முடி வளர்வதை இயற்கையாக கட்டுப்படுத்தலாம்.

பிசிஓடி, ஹிர்சூட்டிசம் இருக்கும் பெண்கள் லோ காஸ்ட் கார்போஹைட்ரேட் டயட் எனப்படும் குறைவான மாவுச்சத்து உள்ள உணவை எடுத்துக்கொள்வது தான் சிறந்தது. இதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும். உடல் எடை குறைந்தால் பிசிஓடி பிரச்சனை முழுமையாக குணமடையாவிட்டாலும், இன்சுலின் எதிர்ப்பு தன்மையை குறைக்க முடியும். இதன் மூலமாக ஹார்மோன் சமநிலையின்மையை சரி செய்து, முகத்தில் முடி வளர்வதை இயற்கையாக கட்டுப்படுத்தலாம்.

இதுகுறித்து மருத்துவர் அருண் குமார் கூறுகையில், “பிசிஓடி உள்ள 75 சதவீத பெண்களை பார்த்தீங்கன்னா உடல் பருமனா இருப்பாங்க. அவங்களுக்கு ஏதோ ஒரு வகையில உடல் பருமன் குறைச்சா கொஞ்சம் குறையலாம். ஆனா 25 சதவீத பெண்கள் நார்மல் வெயிட் இருந்தே பிசிஓடி இருக்கும் ஹிசூட்டிசம் இந்த முடி முளைக்கிறது இதெல்லாம் இருக்கும். இந்த ரெண்டு விதமான பெண்களுமே மாவுச்சத்து இல்லாத உணவுமுறை, எல்சிஎச்எப் பாலியோ கீட்டோ மாதிரியான உணவு முறையை முயற்சித்தால் இன்சுலின் எதிர்ப்புத் தன்மையால் ரத்தத்தில் கலக்கும் ஆண்களுக்கான ஹார்மோன்களின் உற்பத்தி குறையும், இதன் மூலமாக முகத்தில் முடி வளரும் பிரச்சனை கட்டுக்குள் வரும்” என்கிறார்.

குறிப்பாக பிசிஓடி பிரச்சனையால் அவதிப்படும் பெண்கள் மாவுச்சத்து குறைவாக உள்ள உணவை எடுத்துக் கொள்வதன் மூலமாக இதுசம்பந்தமான ஒழுங்கற்ற மாதவிடாய், கருத்தரித்தலில் தாமதம், முகத்தில் அளவற்ற முடி வளர்ச்சி போன்ற அனைத்து பிரச்சனைகளில் இருந்து தீர்வு பெறலாம் எனக்குறிப்பிட்டுள்ளார்.

Read Next

பெண்களுக்கு ஆளி விதை என்னவெல்லாம் செய்யும் தெரியுமா.?

Disclaimer

குறிச்சொற்கள்