Doctor Verified

மட்டன் ஈரல் Vs சிக்கன் ஈரல் - எது நல்லது? எவ்வளவு சாப்பிடலாம்? மருத்துவர் விளக்கம்..

மட்டன் ஈரல் மற்றும் சிக்கன் ஈரல் – எது ஆரோக்கியத்திற்கு சிறந்தது? மருத்துவர் அருண் குமார் கூறியுள்ள கலோரி, புரதம், வைட்டமின் A, B12 சத்து விவரங்கள் மற்றும் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதற்கான முழு விளக்கம்.
  • SHARE
  • FOLLOW
மட்டன் ஈரல் Vs சிக்கன் ஈரல் - எது நல்லது? எவ்வளவு சாப்பிடலாம்? மருத்துவர் விளக்கம்..


இரத்த சோகை, நரம்பியல் பிரச்சனைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற பல உடல் சிக்கல்களை தவிர்க்கும் விதமாக, பலர் ஈரல் சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். ஆனால், மட்டன் ஈரல் நல்லதா? சிக்கன் ஈரல் நல்லதா? எவ்வளவு அளவில் சாப்பிடலாம்? என்பதே பலரின் சந்தேகம். இதற்கான அறிவியல் விளக்கத்தை மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.

Video Link: https://youtu.be/6nRmrwDT38Y

சத்துக்கள் எவ்வளவு இருக்கின்றன?

மட்டன் ஈரல் மற்றும் சிக்கன் ஈரல் இரண்டிலும் பல சத்துக்கள் நிறைந்துள்ளன.

* 100 கிராம் மட்டன் ஈரல் – 160–170 கலோரி, 20–25 கிராம் புரதம், 5 கிராம் கொழுப்பு (fat), 400–500 மில்லி கிராம் கொலஸ்ட்ரால், 6000 யூனிட் வைட்டமின் A, 85 மைக்ரோ கிராம் வைட்டமின் B12.

* 100 கிராம் சிக்கன் ஈரல் – 160–170 கலோரி, 20–25 கிராம் புரதம், 5 கிராம் கொழுப்பு, 400–500 மில்லி கிராம் கொலஸ்ட்ரால், 16,000 யூனிட் வைட்டமின் A, 16 மைக்ரோ கிராம் வைட்டமின் B12.

artical  - 2025-09-25T135334.796

வைட்டமின் A – கண்களுக்கு முக்கியம்

கண் பார்வை, தோல் ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு முக்கியமானது வைட்டமின் A. இந்த சத்துக்கள் இரண்டிலும் இருந்தாலும், சிக்கன் ஈரலில் வைட்டமின் A அளவு மூன்றரை மடங்கு அதிகம் உள்ளது.

வைட்டமின் B12 – நரம்புகள் & இரத்தத்திற்கு அவசியம்

நரம்பியல் கோளாறு மற்றும் இரத்த சோகையைத் தவிர்க்க வைட்டமின் B12 மிக அவசியம். சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு இந்த சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அந்த வகையில், மட்டன் ஈரலில் B12 அதிகம் இருப்பதால், சைவம் அதிகம் சாப்பிடுவோர் தவிர்க்க வேண்டிய குறைபாட்டை நிரப்ப உதவும்.

இந்த பதிவும் உதவலாம்: சிக்கன், மட்டன் சாப்பிட்டால் எத்தனை நோய்கள் வரும் தெரியுமா?

எவ்வளவு சாப்பிடலாம்?

மருத்துவர் அருண் குமார் அளித்த ஆலோசனைப்படி –

* பெரியவர்கள் – வாரத்தில் ஒரு முறை 100–200 கிராம் மட்டன்/சிக்கன் ஈரல் சாப்பிடலாம்.

* குழந்தைகள் – வாரம் ஒரு முறை 50 கிராம் அளவில் சாப்பிடலாம்.

* கர்ப்பிணி பெண்கள் (முதல் 3 மாதங்கள்) – வாரத்திற்கு 50 கிராம் மட்டுமே மட்டன் ஈரல் சாப்பிடலாம்.

சிக்கன் ஈரல் vs மட்டன் ஈரல்

* சிக்கன் ஈரல் – அதிக வைட்டமின் A, குறைந்த B12.

* மட்டன் ஈரல் – அதிக வைட்டமின் B12, நடுத்தர அளவு வைட்டமின் A.

இரண்டும் உடலுக்கு நல்லது. ஆனால், உடல் தேவைக்கேற்ப தேர்வு செய்தால் அதிக நன்மை கிடைக்கும் என்று மருத்துவர் வலியுறுத்துகிறார்.

artical  - 2025-09-25T135434.399

பக்கவிளைவுகள்

* அதிகமாக சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவு உயரும் அபாயம் உள்ளது.

* கர்ப்பிணி பெண்கள், சிறிய குழந்தைகள் எச்சரிக்கையுடன் சாப்பிட வேண்டும்.

* சிக்கன் ஈரலில் அதிக அளவு அன்டிபயோடிக் கழிவுகள் இல்லை என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

இறுதியாக..

மட்டன் ஈரல் மற்றும் சிக்கன் ஈரல் இரண்டும் உடலுக்குத் தேவையான புரதம், வைட்டமின் A, வைட்டமின் B12 போன்ற முக்கிய சத்துகளை வழங்குகின்றன. ஆனால் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை மருத்துவரின் ஆலோசனைப்படி பின்பற்றினால், உடலுக்கு நன்மை அதிகரிக்கும்; தீமைகள் குறையும்.

Disclaimer: இந்தக் கட்டுரை மருத்துவர் வழங்கிய பொதுவான தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. உங்கள் உடல்நலத்திற்கேற்றவாறு எவ்வளவு அளவு ஈரல் சாப்பிடலாம் என்பதை உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணர் ஆலோசனைப்படி தீர்மானிக்கவும்.

Read Next

அதிகப்படியான மன அழுத்தத்தைத் தவிர்க்க வீட்டில் இருக்கும் இந்த ஸ்நாக்ஸ் சாப்பிடுங்க..

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Sep 25, 2025 13:56 IST

    Published By : Ishvarya Gurumurthy