இன்றைய பெண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்று PCOD (Polycystic Ovarian Disease) ஆகும். மாதவிடாய் சீர்குலைவு, உடல் எடை அதிகரிப்பு, வயிற்றுப் பசை கொழுப்பு, முகத்தில் பிம்பிள்ஸ், ஹார்மோன் சமநிலை பிரச்சினைகள் போன்றவை இதில் அடங்கும். பல பெண்கள் மருத்துவ சிகிச்சையுடன் உணவு பழக்கத்திலும் மாற்றங்களைச் செய்ய பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில், “நெய் PCOD பிரச்சினைக்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று டாக்டர் வினோதினி பிரதீப் சமீபத்தில் தனது Instagram பதிவில் கூறியுள்ளார். ஆனால் நெய் எவ்வாறு PCOD-க்கு உதவுகிறது? மருத்துவரின் டாக்டர் வினோதினியின் முழு விளக்கம் இங்கே.
நெய் மற்றும் PCOD – மருத்துவர் கருத்து
டாக்டர் வினோதினி பிரதீப் கூறியதன்படி, நெய் என்பது வெறும் சமையல் கொழுப்பு அல்ல, அது பெண்களின் ஹார்மோன் ஆரோக்கியம் மற்றும் குடல் செயல்பாட்டை மேம்படுத்தும் இயற்கை மருந்து போல் செயல்படுகிறது.
எடிபிள் ஆயில்களைக் காட்டிலும் நெய் நல்லது
பல பெண்கள் எண்ணெயை அடிக்கடி பயன்படுத்துவதால் உடலில் மோசமான கொழுப்பு சேர்கிறது. ஆனால் நெய் சத்து நிறைந்த “சேச்சுரேட்டட் ஃபேட்ஸ்” (Good Fats) கொண்டுள்ளது. இதனால் உடலில் ஹார்மோன்கள் சீராக உற்பத்தி ஆகும்.
Butyric acid – குடல் குணப்படுத்தும் சக்தி
நெயில் உள்ள Butyric acid குடலை குணப்படுத்தி, ஹார்மோன் சமநிலையை ஏற்படுத்துகிறது. PCOD கொண்ட பெண்களுக்கு குடல் ஆரோக்கியம் முக்கியம், ஏனெனில் அது நேரடியாக ஹார்மோன்களை பாதிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: PCOS, PCODக்கு உதவும் Top 5 ஆயுர்வேத உணவுகள் - நிபுணர் பரிந்துரை
Linoleic acid – வயிற்றுக் கொழுப்பை குறைக்கும்
PCOD கொண்ட பெண்களின் முக்கிய பிரச்சினை belly fat ஆகும். நெயில் உள்ள Linoleic acid வயிற்றுக் கொழுப்பை குறைத்து, உடலை “Insulin Friendly” ஆக்குகிறது. இதனால் இன்சுலின் எதிர்ப்பு குறைந்து, PCOD பிரச்சினைகளில் நன்மை தருகிறது.
வைட்டமின்கள் நிறைந்த உணவு
நெய் A, D, E, K போன்ற கொழுப்பு கரையக்கூடிய வைட்டமின்களில் செறிந்துள்ளது. இவை முட்டையிணை ஆரோக்கியம், தோல் பிரகாசம், மனநிலை சமநிலை ஆகியவற்றுக்கு உதவுகின்றன.
PCOD கொண்ட பெண்களுக்கு நெயின் நன்மைகள்
* மாதவிடாய் சீராகும்
* ஹார்மோன் சீராகும்.
* வயிற்றுக் கொழுப்பை குறைக்கும்
* இன்சுலின் உணர்திறன் உயரும்.
* முட்டை மற்றும் கருப்பை வலுப்படும்
* கருத்தரிப்பு திறன் மேம்படும்.
* உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்
* உடல் உஷ்ணம் குறையும்.
* மனநிலை & தோல் ஆரோக்கியம் மேம்படும்
* பெண்களின் மன அழுத்தம் குறையும்.
View this post on Instagram
தினசரி எவ்வளவு நெய் எடுத்துக்கொள்வது?
டாக்டர் வினோதினி பிரதீப் பரிந்துரைத்தது போல, “தினசரி 1 தேக்கரண்டி நெய் போதுமானது”. அதிகமாக எடுத்துக்கொள்வது எடையை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சரியான அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.
இறுதியாக..
PCOD என்பது பல பெண்கள் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினை. இதற்கு உணவு பழக்க மாற்றமும், வாழ்க்கை முறை மாற்றமும் முக்கியம். நெய், PCOD கொண்ட பெண்களுக்கு ஒரு இயற்கை ஹார்மோன் சமநிலை உணவு என்ற வகையில் உதவக்கூடும். ஆனால், மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே உணவு முறையில் மாற்றங்கள் செய்ய வேண்டும்.