What Happens If We Eat Ghee Daily: சில வருடங்கள் பின்னோக்கி சென்றால், நெய் இல்லாத உணவே இருக்காது. ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. பெரும்பாலான மக்கள் நெய் சாப்பிடுவதில்லை. நெய் சாப்பிட்டால் எடை அதிகரித்து விடும் என்ற எண்ணுகிறார்கள். ஆனால் நெய்யில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது தெரியுமா? இது குறித்து இங்கே காண்போம்.
நெய்யில் உள்ள சத்துக்கள்
நெய்யில் பல வகையான சத்துக்கள் உள்ளன. இவை உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இதில் வைட்டமின் ஏ, ஈ, டி, கே, ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 போன்ற கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மேலும் லினோலிக் அமிலம், பியூட்ரிக் அமிலம் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்ததாக கூறப்படுகிறது.

நெய்யின் நன்மைகள்
அல்சைமர்க்கு தீர்வு
நெய்யில் உள்ள ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் டிமென்ஷியா மற்றும் அல்சைமர் போன்ற பிரச்னைகளை குறைக்கிறது. தினமும் நெய்யை உட்கொள்வதால், உடலில் உள்ள நரம்புகளின் செயல்பாடு மேம்படும்.
எலும்புகள் வலுவாகும்
நெய்யில் வைட்டமின் கே, கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை உடலின் எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க பெரிதும் உதவுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
செரிமானம் மேம்படும்
செரிமான அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்த நெய் மிகவும் உதவியாக இருக்கும். உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது.
அழகு மேம்படும்
நெய் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல அழகுக்கும் நல்லது. இது இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. குறிப்பாக குளிர்காலத்தில் பலருக்கு உதடுகள் வெடித்து சில சமயங்களில் இரத்தம் கசியும். இரவில் படுக்கும் முன் சிறிது நெய்யை எடுத்து உதடுகளில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எவ்வளவு நெய் சாப்பிட வேண்டும்?
எந்த உணவுப் பொருட்களையும் அதிகமாக எடுத்துக்கொள்வது நல்லதல்ல. நெய்க்கும் இது பொருந்தும். ஒரு நபர் ஆரோக்கியமாக இருக்க ஒரு நாளைக்கு இரண்டு தேக்கரண்டி சுத்தமான நெய்யை உட்கொண்டால், எந்த பிரச்சனையும் இருக்காது. மேலும் பல வகையான ஆரோக்கிய நலன்களை பெற முடியும். அதிகமாக நெய் சாப்பிட்டால் உடல் எடை கூடும் வாய்ப்பு உள்ளது.
யாரெல்லாம் நெய் சாப்பிடக்கூடாது?
இதய நோய்கள், நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நெய்யை குறைவாக உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அதிகமாக எடுத்துக்கொள்ள விரும்பினால், மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. அதே சமயம், அதிகளவில் கலப்பட நெய் சந்தையில் கிடைக்கிறது. எனவே சுத்தமான நெய்யை உண்ண பரிந்துரைக்கப்படுகிறது.
Image Source: Freepik