Drinks To Reduce Arthritis: நாள்தோறும் நாம் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளில் மூட்டு வலியும் ஒன்று. மூட்டு ஆரோக்கியத்தைப் பாதிக்கும் முக்கிய காரணியாக அமைவது ஊட்டச்சத்து பற்றாக்குறையே ஆகும். இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மூட்டு வலியால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அன்றாட வாழ்க்கையின் செயல்பாடுகளைப் பாதிக்கலாம்.
மூட்டு வலி பிரச்சனையில் இருந்து விடுபட சில ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களைக் கையாள வேண்டும். சில பானங்களில் மூட்டு வலி நிவாரண பண்புகள் நிறைந்துள்ளன. இவை மூட்டு வலியை நிர்வகிக்க உதவுகிறது. இதில் மூட்டு வலியைக் குறைக்க உதவும் பானங்களைக் காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: எறும்பு போல சுறுசுறுப்பாக இருக்க இதை சாப்பிட்டாலே போதும்.!
மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும் பானங்கள்
கீல்வாதத்தை நிர்வகிக்க சிறந்த ஆரோக்கியமான பானங்கள் உதவுகிறது. இது மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது.
கிரீன் டீ
கிரீன் டீயில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உட்பட பல்வேறு ஆரோக்கிய பண்புகள் நிறைந்துள்ளன. மேலும் இதில் பாலிபினால்கள் எனப்படும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த கிரீன் டீ வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது ஆரோக்கியமான மூட்டுகள் மற்றும் எலும்பு தசைகளை மேம்படுத்த உதவுகிறது. இது உடலுக்கு ஈரப்பதமூட்டும் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பானமாகும். இதற்கு கிரீன் டீ காய்ச்சி சூடாகவோ அல்லது குளிராகவோ அருந்துவது உடல் ஆற்றலை அதிகரிக்கும்.
சூடான மஞ்சள் பால்
மஞ்சளில் குர்குமின் என்ற இயற்கையான அழற்சி எதிர்ப்புக் கலவை நிறைந்துள்ளது. இது கீல்வாதத்துடன் தொடர்புடைய அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. சூடான மஞ்சள் பால் அருந்துவது வீக்கம் மற்றும் மூட்டு வலியைக் குறைக்கிறது. ஒரு கப் பாலை சூடாக்கி அதில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து படுக்கைக்குச் செல்லும் முன் குடிக்கலாம். இது நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவுகிறது.
இஞ்சி சாறு
இஞ்சி அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இஞ்சி டீ அருந்துவது இன்று பலரின் விருப்பமாகும். இதன் சுவை மட்டுமல்லாமல் பல்வேறு ஆரோக்கிய பண்புகள் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இதற்கு புதிய இஞ்சி துண்டுகளை வெந்நீரில் ஊறவைத்தோ அல்லது இஞ்சி டீ பேக்குகளைப் பயன்படுத்தியோ இஞ்சி டீ தயார் செய்யலாம். இஞ்சி டீ தயாரிப்பில் தேன், எலுமிச்சை போன்றவற்றைச் சேர்ப்பது கூடுதல் நன்மைகளைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Chow Chow Benefits: காய் ஒன்று பலன் நூறு… சௌ சௌவின் வியக்கவைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
செர்ரி சாறு
செர்ரிகள் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இவை குறிப்பாக கீல்வாத வலியைக் குறைக்க உதவுகிறது. செர்ரிகளின் துடிப்பான சிவப்பு நிறத்திற்கு அந்தோசயினின்கள் காரணமாகிறது. இவை வீக்கத்தைக் குறைக்கும் திறனை கொண்டுள்ளது. மேலும், செர்ரி சாறு தயாரிக்கும் போது சர்க்கரை சேர்க்கப்பதைத் தவிர்ப்பது கூடுதல் நன்மைகளைத் தரும்.
எலும்பு குழம்பு
எலும்பு குழம்பில் கொலாஜன், குளுக்கோசமைன், காண்ட்ராய்டின் போன்ற மூட்டு ஆரோக்கியத்தை ஆதரிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை கீல்வாதம் உள்ளவர்களுக்கு நன்மை அளிக்கும். குறிப்பாக கொலாஜன் குருத்தெலும்புகளின் முக்கிய அங்கமாகும். சூடான, ஊட்டமளிக்கும் எலும்பு குழம்பை அருந்துவது, மூட்டுகளுக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது.
செம்பருத்தி தேநீர்
செம்பருத்தி பூவின் உலர்ந்த இதழ்களில் இருந்து செம்பருத்தி தேநீர் தயாரிக்கப்படுகிறது. இது மூட்டுவலி அறிகுறிகளுக்கு எதிராக போராட உதவுகிறது. ஆந்தோசயினின்கள் மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த செம்பருத்தி தேநீர் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இதனுடன் தேன் சேர்த்து குளிராகவோ அல்லது சூடாகவோ அருந்தலாம்.
இந்த பானங்களை அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொள்வது மூட்டு வலி மற்றும் வீக்கம் போன்ற அறிகுறிகளைக் குறைத்து மூட்டு வலி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Black Raisins benefits: தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த கருப்பு திராட்சை சாப்பிடுவதன் நன்மைகள்!
Image Source: Freepik