How To Remove Unwanted Face Hair: சிலருக்கு முகத்தில் தேவையற்ற முடிகள் இருப்பதைப் பார்த்திருப்போம். இந்த முடிகளை அகற்ற, பெண்கள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். இதில் சிலர் ப்ளீச் பயன்படுத்துவர். இன்னும் சிலர் மற்ற பல்வேறு முறைகளைப் பயன்படுத்துவர். சில நேரங்களில் இந்த முறைகள் தீங்கு விளைவிக்கலாம்.
முகத்தில் முடி வளர்வதற்கு ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக இருக்கலாம். ஒரு பெண்ணின் உடலில் ஆண்ட்ரோஜனின் அளவு அதிகமாகும் போது, முகம் மற்றும் மற்ற உடல் பாகங்களிலும் தேவையற்ற முடிகள் வளர ஆரம்பிக்கலாம். இவை தவிர சில கிரீம்கள் அல்லது மருந்துகளின் பக்க விளைவுகள் காரணமாக தேவையற்ற முடி வளர்ச்சி ஏற்படலாம். இந்த தேவையற்ற முடியை வீட்டிலேயே எளிமையாக அகற்ற உதவும் சில வழிகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Eyebrow Thickening Tips: அடர்த்தியான கண் புருவம் வேண்டுமா? தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க
முகத்தில் தேவையற்ற முடியை நீக்க உதவும் வீட்டு வைத்தியம்
வீட்டிலேயே எளிமையான முறையில் சில பொருள்களைக் கொண்டு முகத்தில் உள்ள தேவையற்ற முடியை நீக்க முடியும்.
சர்க்கரை, தேன் மற்றும் எலுமிச்சை
- முதலில் 2 முதல் 3 ஸ்பூன் எலுமிச்சைச் சாறு மற்றும் சர்க்கரையை எடுத்து, அதில் தேன் சேர்த்து கலவையாகத் தயார் செய்ய வேண்டும்.
- இந்த பேஸ்ட்டை இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் சூடாக்க வேண்டும்.
- இதை சூடாக்கிய பீறகு மெழுகு போல் ஒட்டும். இந்த பேஸ்ட்டை குளிர்விக்க வேண்டும்.
- கலவை சூடாக இருப்பின், நீர்த்துப் போகச் செய்ய தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
- பின் கலவை ஆறியதும் மக்காளச்சோள மாவு அல்லது மைதாவை முடி உள்ள இடத்தில் தடவி, அதன் பிறகு இந்த கலவையை அந்த இடத்தில் தடவ வேண்டும்.
- பிறகு மெழுகை துண்டு அல்லது துணியின் உதவியுடன் அகற்றுவது, வேக்சிங் செய்வது போல் வேலை செய்யும்.
- அதே சமயம், இதில் பயன்படுத்தப்படும் அனைத்துப் பொருள்களும் சருமத்திற்கு எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாதவாறு அமையும்.
- எனினும் இந்த பொருள்களினால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டால் இதைப் பயன்படுத்த வேண்டாம்.

முட்டை மற்றும் சோளமாவு
முட்டையின் வெள்ளைக்கருவைப் பயன்படுத்தி தேவையற்ற முடிகளை அகற்றலாம்.
- இதற்கு முதலில் முட்டையை உடைத்து அதன் வெள்ளைப் பகுதியைப் பிரித்துக் கொள்ள வேண்டும்.
- பின் இந்த வெள்ளைப் பகுதியில் சர்க்கரை மற்றும் சோளமாவைச் சேர்த்து நன்றாகக் கலக்கி, பேஸ்ட்டை முடி உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் வரை வைத்து உலர வைக்க வேண்டும்.
- உலர்த்திய பிறகு முகத்தைக் கழுவிக் கொள்ளலாம்.
- இதனை வாரத்திற்கு இரு முறையாவது பயன்படுத்தலாம்.
- எனினும், பருக்கள் அல்லது உணர்திறன் மிக்க சருமம் கொண்டவர்கள் இதைப் பயன்படுத்தக் கூடாது.
இந்த பதிவும் உதவலாம்: Jojoba Oil For Nails: நகங்கள் வேகமாக வளரணுமா.? இந்த ஒரு எண்ணெய் போதும்.
பப்பாளி மற்றும் மஞ்சள்
பப்பாளி, மஞ்சளைப் பயன்படுத்தி முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க முடியும்.
- முதலில் பச்சை பப்பாளியின் தோலை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின், இந்த துண்டுகளை கலவையாக்கி அதில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.
- இவ்வாறு தயாரிக்கப்பட்ட கலவையை முகத்தில் முடி இருக்கும் இடத்தில் தடவி, 15 நிமிடங்கள் வைத்து பிறகு முகத்தை மசாஜ் செய்து சுத்தமான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.
- மேலும், பச்சை பப்பாளியில் பப்பேன் நிறைந்துள்ளது. இது முடி துளைகளை விரிவுபடுத்தி, முகத்தில் இருந்து முடியை உதிர வைக்கிறது. இதனுடன் தோலில் இருந்துஇறந்த செல்களை அகற்றுகிறது.
- இந்த பேக்கை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தலாம்.

ஓட்ஸ் மற்றும் வாழைப்பழம்
- ஓட்மீலில் அவெனாந்த்ராமைடு என்ற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. இது அரிப்பு மற்றும் தோல் எரிச்சல் போன்ற பிரச்சனையை குறைக்கிறது.
- இதை ஸ்க்ரப்பாக பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றலாம். மேலும் சருமத்தை மென்மையாக்க உதவுகிறது.
- இதற்கு பழுத்த வாழைப்பழத்தை பேஸ்ட் செய்து அதனுடன், ஓட்ஸ் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
- இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் மசாஜ் செய்து பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளலாம்.
இந்த பொருள்களைக் கொண்டு வீட்டிலேயே எளிமையான முறையில் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றலாம். எனினும், சருமம் உணர்திறன் மிக்கது என்பதால் எரிச்சல் அல்லது ஒவ்வாமை போன்றவற்றைத் தவிர்க்க பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Grape Seed Oil Benefits: சருமம் மற்றும் முடி ஆரோக்கியம் இரண்டிற்கும் உதவும் திராட்சை விதை எண்ணெய்.!
Image Source: Freepik