$
Grapeseed Oil Benefits For Hair And Skin: திராட்சை மற்றும் திராட்சை விதைகள் பலரும் அறிந்த ஒன்றே. ஆனால், திராட்சை விதை எண்ணெய் பற்றி உங்களுக்குத் தெரியுமா.? திராட்சை விதை எண்ணெய் ஆனது ஒயின் திராட்சை விதைகளில் இருந்து எடுக்கப்படுவதாகும். சருமம் மற்றும் கூந்தல் இரண்டிற்கும் பயனளிக்கும் வகையில் தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்றவை உள்ளன. அதே போல, திராட்சை எண்ணெயும் சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
இந்த திராட்சை விதை எண்ணெய் ஆனது ஒயின் தயாரித்த பின் மீதமுள்ள திராட்சை விதைகளிலிருந்து இரசாயனங்கள் மூலம் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் குறைந்த எடையைக் கொண்டிருப்பதால், சருமத்திற்கு பயன்படுத்தும் போது சருமத் துளைகளை அடைக்காது மற்றும் உணர்திறன் மற்றும் எண்ணெய்ப்பசை மிகுந்த சருமம் கொண்டவர்களுக்கு முகப்பருவை ஏற்படுத்தாது. இது போன்று திராட்சை விதை எண்ணெய் தரும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Monsoon Nail Care Tips: மழைக்காலத்துல நகப் பராமரிப்புக்கு இதெல்லாம் செய்யுங்க.
சருமம் மற்றும் முடிக்கு திராட்சை விதை எண்ணெயின் நன்மைகள்
திராட்சை விதை எண்ணெயில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள், பீட்டா கரோட்டின் போன்றவை நிறைந்துள்ளது. இவை சருமம் மற்றும் முடி பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது.
முடி ஆரோக்கியத்திற்கு திராட்சை விதை எண்ணெய்
பெண்கள் பலருக்கும் நீண்ட மற்றும் அழகான கூந்தலைப் பெற விரும்புவர். இதற்கு சிறந்த தேர்வு திராட்சை விதை எண்ணெய் என்றே கூறலாம். இந்த எண்ணெயைப் பயன்படுத்துவது முடிக்கு ஊட்டமளிப்பதுடன், தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் ஈ முடி வளர்ச்சியை ஊக்குவித்து, உச்சந்தலை ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. மேலும், இவை பொடுகு பிரச்சனையையும் நீக்க உதவுகிறது.

முகப்பருவை போக்க
சருமத்தில் உள்ள முகப்பருவை போக்க திராட்சை விதை எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. சருமத்தில் முகப்பரு ஏற்பட இரு முக்கிய காரணங்கள் உள்ளது. இதில் முதலாவதாக தோல் துளைகள் அடைப்பு, இரண்டாவதாக, பாக்டீரியா தாக்குதல். இந்த இரு பிரச்சனைகளிலிருந்தும் விடுபட திராட்சை விதை எண்ணெயைப் பயன்படுத்தலாம். திராட்சை விதை எண்ணெய் மிக மெல்லியதாக இருப்பதால், இவை தோலின் துளைகளை அடைக்காது. இந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வது துளைகள் திறக்கப்பட்டு, தோலில் இருக்கும் பாக்டீரியாக்களை வெளியேற்றுகிறது. முகப்பரு உள்ளவர்கள் இந்த எண்ணெயை அடிக்கடி பயன்படுத்துவது நன்மை தரும். தினமும் இரவு தூங்கும் முன் இந்த எண்ணெயை சருமத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
சூரிய கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பு
திராட்சை விதை எண்ணெய் நல்ல அளவிலான ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளைக் கொண்டுள்ளது. இது புற ஊதாக் கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது. சருமத்தில் சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களின் காரணமாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே வெயிலில் செல்வதற்கு முன்பாக சிறிது திராட்சை விதை எண்ணெயை முகம், கை, மற்றும் கால்களில் தடவிக் கொள்ளலாம். ஆனால், இவ்வாறு செய்வது முகம் சிறிது எண்ணெய் பசையுடன் காணப்படும்.
இந்த பதிவும் உதவலாம்: Beard Growth Oil: தாடி வேகமா வளர பாதாம் எண்ணெயை இப்படி பயன்படுத்துங்க.
மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை நீக்க
இந்த எண்ணெயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது சருமத்திற்கு முதுமை எதிர்ப்பு முகவராக செயல்படுகிறது. ஆக்ஸிஜனேற்றத்தால் ஃப்ரீ ரேடிக்கல்கள் ஏற்படுத்தும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க வைட்டமின் சி உதவுகிறது. எனவே இதை சருமத்தில் தடவுவதன் மூலம் மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் போன்ற முதுமை அறிகுறிகளைக் குறைக்கலாம்.

சருமத்தை மென்மையாக்க
திராட்சை விதை எண்ணெயை சருமத்திற்கு மாய்ஸ்சரைசராக பயன்படுத்தலாம். இந்த எண்ணெயைப் பயன்படுத்துவது சருமத்தை மென்மையாக மற்றும் பளபளப்பாக வைக்க உதவுகிறது. இதற்கு காரணம், இந்த எண்ணெயில் உள்ள வைட்டமின் சி, மற்றும் வைட்டமின் ஈ போன்றவையே ஆகும். இந்த இரண்டு வைட்டமின்களும் சருமத்திற்கு பெரிதும் நன்மை பயக்கும். திராட்சை விதை எண்ணெய் கொண்டு சருமத்தில் மசாஜ் செய்யலாம் அல்லது முகமூடியில் கலந்து முகத்தில் தடவலாம்.
இந்த வழிகளில் திராட்சை விதை எண்ணெயை சருமம் மற்றும் முடியின் அழகைப் பராமரிக்கவும், ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. எனினும், அதிகமான பயன்பாடு விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே இந்த எண்ணெயை குறைந்த அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Figs Skin Benefits: அத்திப்பழத்தை இப்படி யூஸ் பண்ணா முகச்சுருக்கமே வராதாம்.
Image Source: Freepik