Monsoon Nail Care Tips: மழைக்காலத்துல நகப் பராமரிப்புக்கு இதெல்லாம் செய்யுங்க.

  • SHARE
  • FOLLOW
Monsoon Nail Care Tips: மழைக்காலத்துல நகப் பராமரிப்புக்கு இதெல்லாம் செய்யுங்க.

ஏனெனில், மழைக்காலங்களில் நகங்கள் வலுவிழந்து காணப்படுவதுடன், உடைதல் மற்றும் வெட்டுக் காயங்கள் ஏற்படலாம். இந்த சூழ்நிலையில் 5 முதல் 8 நாள்களுக்கு நகங்களில் நெயில் பெயிண்ட் தடவுவதை தவிர்க்க வேண்டும். மேலும் இந்த பருவத்தில் நகங்களை நீளமாக வளர வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிடில் இது தொற்றுநோய்க்கான ஆபத்தை கணிசமாக அதிகரிக்கலாம். மழைக்காலங்களில் நகங்களை வீட்டிலேயே எப்படி பராமரிப்பது என்பது குறித்துக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Homemade Eye Masks: கண் கருவளையம் சீக்கிரம் மறைய இந்த கண் மாஸ்க் பயன்படுத்துங்க.

மழைக்காலத்தில் நகங்களை பராமரிப்பது எப்படி?

இந்த பருவகாலத்தில் நகங்களை பராமரிக்க சில வீட்டு வைத்திய முறைகளைக் கையாளலாம். இதில் மழைக்காலத்தில் நகங்களைப் பராமரிக்கும் முறைகளைக் காணலாம்.

ஆலிவ் எண்ணெய்

நகப்பராமரிப்பிற்கு மசாஜ் செய்வது மிகவும் நன்மை பயக்கும். இரவு தூங்கும் முன்பாக லேசாக ஆலிவ் எண்ணெயைச் சூடாக்கி, நகங்களை மசாஜ் செய்ய வேண்டும். இது நகங்களுக்கு ஊட்டச்சத்தை வழங்குகிறது. இந்த செயல்முறையைத் தொடர்ந்து செய்து வருவது நகங்களை வலுவடையச் செய்கிறது. மேலும், மசாஜ் செய்வது நாள் முழுவதும் ஏற்படும் சோர்வைக் குறைக்கிறது.

கல் உப்பு மற்றும் வெந்நீர்

வெதுவெதுப்பான நீரில் கல் உப்பைச் சேர்த்து, இரவு தூங்கும் முன் சிறிது நேரம் கைகளை ஊற வைக்க வேண்டும். இது மிகவும் தளர்வைத் தரும். இதைத் தொடர்ந்து செய்வது நகங்களை சுத்தமாக வைத்திருப்பதுடன், நகங்களைச் சுற்றியுள்ள சருமத்தையும் மென்மையாக வைத்திருக்க உதவும்.

பச்சை பால்

கொழுப்பு அமிலங்கள் நிறைந்த பாலை தோல் மற்றும் நகங்களுக்கு உபயோகப்படுத்துவது நன்மை தருகிறது. இதற்கு விரல்களை பாலில் நனைத்து 10 நிமிடங்கள் வரை வைக்கவும். இது நகங்களை ஈரப்பதமாக்க வைக்க உதவுகிறது. இதனைத் தொடர்ந்து செய்வது நகங்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Karanja Oil Benefits: சருமப் பொலிவு, முடி வளர்ச்சி இரண்டுக்கும் இந்த ஒரு எண்ணெய் போதும்

தேன்

நகங்களுக்குத் தேனை பயன்படுத்துவது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இவை நகங்களை வலுப்படுத்துகிறது. நகங்களில் தேனைத் தடவி 15 நிமிடங்கள் வரை வைக்கலாம். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வரலாம். இது நகங்களை வலுப்படுத்துவது மட்டுமின்றி, நகங்களில் படிந்திருக்கும் அழுக்குகளை அகற்ற உதவுகிறது.

நாள் முழுவதும் கால் நகங்கள் மூடி வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். இது நோய்த்தொற்றுக்களின் ஆபத்தை கணிசமாக அதிகரிக்கிறது. எனவே சில நேரங்களில் கால்களைத் திறந்து வைக்கும் பாதணிகளை அணியலாம். மேலும், கால்கள் அதிக நேரம் ஈரப்பதமாக வைக்காமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.

ஏனெனில் இவை பூஞ்சை உருவாகும் அபாயத்தை ஏற்படுத்தலாம். எனினும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நாள் முழுவதும் நகங்கள் மூடி வைத்திருக்கும் சூழ்நிலையில் நகங்களை வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து கழுவலாம். இது நிவாரணம் அளிப்பது மட்டுமல்லாமல், தொற்று அபாயத்தையும் குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Beard Growth Oil: தாடி வேகமா வளர பாதாம் எண்ணெயை இப்படி பயன்படுத்துங்க.

Image Source: Freepik

Read Next

Bags Under Eyes: கண்களுக்குக் கீழே உள்ள வீக்கத்தை உடனே குறைக்க இந்த பொருட்களை யூஸ் பண்ணுங்க!

Disclaimer

குறிச்சொற்கள்