தர்பூசணி நல்லது தான்! ஆனா ரொம்ப சாப்பிட்டா என்ன பிரச்சனை எல்லாம் வரும் தெரியுமா?

Side effects of having too much watermelon: கோடைக்காலம் வந்துவிட்டாலே தர்பூசணி சாப்பிடுவதற்கான ஆர்வமும் அதிகரித்து விடும். இந்த காலநிலையில் தர்பூசணியை சாப்பிடுவது உடலுக்குப் பல்வேறு நன்மைகளைத் தந்தாலும், இதனை அதிகம் உட்கொள்வது சில உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயம் ஏற்படலாம்.
  • SHARE
  • FOLLOW
தர்பூசணி நல்லது தான்! ஆனா ரொம்ப சாப்பிட்டா என்ன பிரச்சனை எல்லாம் வரும் தெரியுமா?


What happens to your body when you eat watermelon every day: கோடைக்காலம் வந்துவிட்டாலே உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்வதில் தனிக்கவனம் செலுத்துவது அவசியமாகி விட்டது. ஏனெனில், கடுமையான வெப்பத்தால் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு, பலதரப்பட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். எனவே உடலை நீரேற்றமாக வைப்பதற்கு அன்றாட உணவில் குளிர்ச்சியூட்டும் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடிய ஆரோக்கியமான, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களில் தர்பூசணி பழமும் ஒன்று. தர்பூசணி பழத்தில் சுமார் 92 சதவீதம் தண்ணீர் உள்ளது. இது குர்பிடேசியஸ் குடும்பத்தைச் சேர்ந்த பழமாகும்.

இது பழம் மற்றும் காய்கறி என இரண்டிலும் கருதப்படுவதால் தனித்துவமானதாக விளங்குகிறது. இது கொழுப்பு இல்லாதது மற்றும் வைட்டமின்கள் ஏ, பி6 மற்றும் சி போன்றவற்றின் நல்ல மூலமாகும். மேலும், இதில் பொட்டாசியம் மற்றும் லைகோபீன் மற்றும் சிட்ரூலின் போன்ற நன்மை பயக்கும் தாவர இரசாயனங்கள் உள்ளது. தர்பூசணியில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்கள் எடை இழப்புக்கு ஒரு அற்புதமான தேர்வாக அமைகிறது. இந்த சிவப்பு சதைப்பற்றுள்ள பழமானது அற்புத நன்மைகளைக் கொண்டுள்ளது. ஆனால், இதை அதிகளவில் சாப்பிடுவது உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. இதில் தர்பூசணியை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: சுகர் பற்றிய கவலை வேணாம்! கோடைக்காலத்தில் நீரிழிவு நோயாளிகள் இந்த பழங்களை தாராளமா சாப்பிடலாம்

தர்பூசணியை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்

தர்பூசணி பல்வேறு அற்புதமான நன்மைகளைக் கொண்டிருப்பினும், இதை அதிகளவில் சாப்பிடுவது உடலுக்குத் தீங்கு விளைவிக்கலாம்.

அதிகரித்த குளுக்கோஸ் அளவு

நீரிழிவு நோயாளியாக இருப்பின், தர்பூசணியை அதிகம் சாப்பிடுவது உடலில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இது ஒரு ஆரோக்கியமான பழமாக இருப்பினும், அதிகளவு கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட பழமாகும். எனவே இதை தினமும் உட்கொள்வதற்கு முன்பு எப்போதும் ஒரு மருத்துவரை அணுகுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

செரிமான பிரச்சனைகள்

தர்பூசணி ஒரு சிறந்த நீர் ஆதாரமாகவும், உணவு நார்ச்சத்து நிறைந்த உணவாகவும் அமைகிறது. எனினும், இதை அதிகளவு உட்கொள்வது வீக்கம், வயிற்றுப்போக்கு, வாயு போன்ற பல்வேறு செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். தர்பூசணி பழத்தில் சர்பிடால் உள்ளது. இது ஒரு சர்க்கரை கலவை ஆகும். மேலும், இது தளர்வான மலம் மற்றும் வாயு பிரச்சினைகளை ஊக்குவிக்கும் என்று கூறப்படுகிறது. இது போன்ற பிரச்சனைகளுக்கு மற்றொரு பொதுவான காரணமாக இதன் லைகோபீன் உள்ளடக்கமும் அடங்கும். இது தர்பூசணிக்கு அதன் பிரகாசமான நிறத்தை அளிக்கும் நிறமி ஆக்ஸிஜனேற்றியாக விளங்குகிறது.

கல்லீரல் அழற்சி ஏற்படும் அபாயம்

தொடர்ந்து மது அருந்துபவர்கள், அதிக அளவு தர்பூசணி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், தர்பூசணியில் உள்ள அதிகளவிலான லைகோபீன், மதுவுடன் வினைபுரிந்து கல்லீரல் வீக்கத்தை மேலும் ஏற்படுத்தலாம். இது கல்லீரலில் அதிகப்படியான ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்தி தீங்கு விளைவிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Watermelon: தர்பூசணியின் வெள்ளைப் பகுதியை தூக்கி வீசுவீங்களா? இதை படிச்சா இனி அப்படி செய்ய மாட்டீங்க?

இதய பிரச்சனைகள்

தர்பூசணி பொட்டாசியம் நிறைந்த சிறந்த மூலமாகக் கருதப்படுகிறது. இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க ஏராளமான பங்கு வகிக்கும் ஒரு முக்கிய ஊட்டச்சத்தாகக் கருதப்படுகிறது. இது எலக்ட்ரோலைட் செயல்பாட்டை பராமரிக்க வழிவகுக்கிறது. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், தசைகள் மற்றும் எலும்புகளை வலிமையாக்குகிறது. எனினும், அதிகப்படியான பொட்டாசியம் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, பலவீனமான நாடித்துடிப்பு போன்ற இதய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம்.

அதிகப்படியான நீரேற்றம்

அதிகளவு தர்பூசணியை உட்கொள்வதால் அதன் அதிகப்படியான நீரேற்றம், உடலில் அதிகப்படியான நீர் இருக்கும்போது ஏற்படும் ஒரு நிலையைக் குறிக்கிறது. இது சோடியம் உள்ளடக்கத்தை இழக்க வழிவகுக்கலாம். இந்நிலையில் அதிக அளவு தர்பூசணியை உட்கொள்வது நம் உடலில் நீரின் அளவை அதிகரிக்கக்கூடும். அதே சமயம், உடலிலிருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்படாவிட்டால், அது இரத்தத்தின் அளவை அதிகரிக்க வழிவகுக்கும். இதன் காரணமாக கால்களில் வீக்கம், சோர்வு, பலவீனமான சிறுநீரகங்கள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இது உடலில் சோடியம் அளவை இழக்கவும் வழிவகுக்கிறது.

தர்பூசணி சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். ஆனால், இதை அதிகம் உட்கொள்வது ஆரோக்கியமற்றதாக காணப்படலாம். இதை மிதமான அளவு எடுத்துக் கொள்வது உடலுக்கு ஆரோக்கியத்தையும், நீரேற்றத்தையும் உறுதி செய்கிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Yellow Watermelon: இனி சிவப்பு தர்பூசணிக்கு குட்பை.. மஞ்சள் தர்பூசணி வாங்கி சாப்பிடுங்க அம்புட்டு நல்லது!

Image Source: Freepik

Read Next

காமதா ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய காய்கறிகளும்.. அதன் நன்மைகளும்..

Disclaimer