$
Does Watermelon Cause Acidity Problem: கோடை காலத்தில் வெயில் வாட்டிக்கொண்டிப்பதால், மக்கள் பழங்களை நோக்கி நகர்கிறார்கள். இந்த காலத்தில் பழங்கள் சாப்பிடுவது, உங்களை நீரேற்றமாகவும், ஆற்றல் மிக்கவராகும் மாற்றும்.
குறிப்பாக இந்த நேரத்தில் நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். இது தாக்கத்தை தணித்து, உடலை நீரேற்றமாக வைப்பதுடன், பல ஊட்டச்சத்துக்களை உடலுக்கு வழங்கும்.
கோடையில் தர்பூசணி…
கோடை காலம் துவங்கும் போதே சந்தைகளில் தர்பூசணிகள் தாராளமாக விற்பனையாகின்றன. தர்பூசணிகள் சாப்பிட மிகவும் சுவையாகவும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். கோடையில் தர்பூசணியை உட்கொள்வது உங்களை நீரேற்றமாக வைத்திருக்கவும், உடலில் உள்ள நீர் பற்றாக்குறையை போக்கவும் உதவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தர்பூசணியை விரும்பி சாப்பிடுவார்கள்.

தர்பூசணி அசிடிட்டியை ஏற்படுத்துமா?
இருப்பினும், சிலர் தர்பூசணி சாப்பிடுவதால், அசிடிட்டி ஏற்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர். இதனால் அவரிகள் தர்பூசணி சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் அமிலத்தன்மைக்கான காரணங்களை விளக்கி, ஆயுர்வேத மருத்துவர் வரலக்ஷ்மி யனமந்த்ரா, அவரது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து டாக்டர் வரலக்ஷ்மி யனமந்த்ரா கூறுகையில், “பெரும்பாலான பழங்கள் அமிலத்தன்மை கொண்டவை. ஆனால் தர்பூசணி குறைந்த அமிலத்தன்மை கொண்ட பழமாகும். இது 5.6 pH ஐக் கொண்டுள்ளது, இது குறைந்த அளவு அமிலத்தன்மையைக் கொண்டுள்ளது. ஆனால், தர்பூசணி சாப்பிட்ட உடன் அசிடிட்டி ஏற்பட்டால், அதற்கு சில காரணங்கள் இருக்கலாம்” என்றார்.
தர்பூசணி சாப்பிடுவதால் ஏன் அசிடிட்டி ஏற்படுகிறது?
- சிலர் தர்பூசணி போன்ற பழங்களில் காணப்படும் இயற்கை அமிலங்களுக்கு உணர்திறன் உடையவர்களாக இருக்கலாம். இதன் காரணமாக அவற்றை சாப்பிடுவதால் அமிலத்தன்மை அல்லது செரிமான பிரச்னைகள் ஏற்படலாம்.
- பழுத்த பழத்துடன் ஒப்பிடும் போது பச்சை தர்பூசணியில் அதிக அளவு அமிலம் மற்றும் இயற்கையான சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பதால், அது அமிலத்தன்மை அல்லது செரிமானம் தொடர்பான உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும்.
- தர்பூசணியை மற்ற உணவுகளுடன் கலந்து சாப்பிடும்போது, அசிடிட்டி மற்றும் செரிமான பிரச்னைகள் ஏற்படலாம்.
நல்ல தர்பூசணி பழத்தை எப்படி அடையாளம் காண்பது?
- எப்போதும் உலர்ந்த பழுப்பு நிற குறிப்புகள் கொண்ட தர்பூசணிகளை வாங்கவும்.
- நீளமான தர்பூசணிகளை விட வட்டமான தர்பூசணிகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
- தர்பூசணியின் தோல் சீரானதாக இருக்க வேண்டும்.
- ஒரு தர்பூசணியில் உள்ள ஆரஞ்சு அல்லது மஞ்சள் புள்ளியும் ஒரு பழுத்த தர்பூசணியை அடையாளம் காட்டுகிறது.
அசிடிட்டியை தடுக்க டிப்ஸ்
பழுத்த தர்பூசணியை விட பச்சையாக தர்பூசணி சாப்பிடுவது அமிலத்தன்மை பிரச்சனையை அதிகரிக்கும். இதை தடுக்க, நீங்கள் பச்சை தர்பூசணி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதுமட்டுமின்றி, தர்பூசணியால் ஏற்படும் அமிலத்தன்மையை தடுக்க, தர்பூசணி சாப்பிடும் முன், கருஞ்சீரகம் மற்றும் சர்க்கரை மிட்டாய் பொடி கலந்து சாப்பிடவும்.
இதையும் படிங்க: தர்பூசணியை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.! ஏன்னு தெரியுமா.?
தர்பூசணியின் ஊட்டச்சத்து விவரங்கள்
கலோரிகள்: 45.6
கொழுப்பு: 0.2 கிராம்
கொலஸ்ட்ரால்: 0 மி.கி
சோடியம்: 1.52 மிகி
கார்போஹைட்ரேட்: 11.5 கிராம்
ஃபைபர்: 0.6 கிராம்
வைட்டமின் சி: 12.3 மிகி
பொட்டாசியம்: 170 மி.கி
கால்சியம்: 10 மி.கி
வைட்டமின் ஏ: 865 IU
லைகோபீன்: 6,890 மைக்ரோகிராம்கள்
தர்பூசணியில் சில நன்மைகள்…
- தர்ப்பூசணியில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- தர்பூசணியில் வைட்டமின் ஏ உள்ளது. இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
- தர்பூசணியில் உள்ள பொட்டாசியம், இரத்த அழுத்தத்தை சீராக்கி, இதயம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
- தர்பூசணியில் 90 சதவீதம் நீர்ச்சத்து இருப்பதால், உங்களை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.
- தர்பூசணியில் உள்ள நார்ச்சத்து, குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமானத்தை மேம்படுத்தும். இதனால் மலச்சிக்கல் போன்ற வயிறு சார்ந்த பிரச்னைகள் ஏற்படாது.
- தர்பூசணியில் காணப்படும் லைகோபீன் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற சேதத்தை குறைக்க உதவும்.
- தர்பூசணியில் உள்ள நீர் மற்றும் வைட்டமின்கள் ஏ, பி6 மற்றும் சி ஆகியவை உங்கள் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகின்றன.
- தர்பூசணியில் உள்ள L -citrulline என்னும் அமினோ அமிலம், தசை சேதத்தை குறைக்க உதவும்.
- ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, தர்பூசணியில் உள்ள L -citrulline என்னும் அமினோ அமிலம் உதவுகிறது.

தர்பூசணியை எப்படியெல்லாம் சாப்பிடலாம்?
கோடை காலத்தில் நம்மை ஆரோக்கியமாகவும், நீரேற்றமாகவும் வைத்துக்கொள்ள தர்பூசணி உதவும். இதனை எப்படியெல்லாம் சாப்பிடலாம் என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.
- தர்பூசணி ஜூஸ்
- தர்பூசணி சாலட்
- தர்பூசணி ஐஸ் கிரீம்
- தர்பூசணி கியூப்ஸ்
- கேரமலைஸ்ட் தர்பூசணி (பகுதி அளவுடன் உட்கொள்ள வேண்டும்)
- மார்கரிட்டா தர்பூசணி
- மோஜிடோ தர்பூசணி பாப்ஸ்
Image Source: Freepik