$
Amla Murabba Benefits In Winter: ஆம்லா எனப்படும் இந்திய நெல்லிக்காய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட சிறந்த பழமாகும். அதே சமயம், தேன் சிறந்த ஆரோக்கிய பண்புகளைக் கொண்ட இனிப்பு சுவை மிக்கதாகும். இவை இரண்டையும் சேர்த்து தயாரிக்கப்படும் சூப்பரான உணவுப் பொருள் ஆம்லா முரப்பா ஆகும். இவை இனிப்பு மற்றும் காரம் கொண்ட தயாரிப்பு ஆகும். நெல்லிக்காயை பதப்படுத்தி தயாரிக்கப்படும் இந்த முறையில், நெல்லிக்காய் கெடாமல் பாதுகாக்கப்படுகிறது.
எப்படி செய்யலாம்?
இந்த நெல்லிக்காய் முரப்பா செய்வதற்கு பல்வேறு வழிகள் உள்ளன.
- நெல்லிக்காயை கொதிக்கும் நீரில் சேர்த்து, பின் காரம் மற்றும் இனிப்பு சேர்க்கப்பட்ட பாகில் கலந்து முரப்பாவை தயாரிக்கலாம்.
- மற்றொரு முறையாக, நெல்லிக்காயை முதலில் ஆவியில் வேக வைக்க வேண்டும். பின்பு இதை சர்க்கரை பாகில் ஊற வைத்து தயாரிக்கலாம்.
இந்த வழிகளில் வித்தியாசமான சுவை கொண்ட ஆம்லா முரப்பா தரும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Pineapple Juice Benefits: அன்னாசிப்பழச் சாறு குடிச்சா இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்கும்
ஏன் குளிர்காலத்தில்?
குளிர்காலத்தில் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க, நெல்லிக்காய் முரப்பா பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் பருவகால நோய்களின் ஆபத்தைக் கணிசமாகக் குறைக்கலாம். பலவீனமான நோயெதிர்ப்புச் சக்தியால், சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படும். குளிர்காலத்தில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் ஆம்லா முரப்பாவை சேர்த்துக் கொள்ளலாம். நெல்லிக்காயில் புரதம், கால்சியம், இரும்பு, நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்றவை காணப்படுகின்றன. உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க ஃபிட் கிளினிக்கின் டயட்டீஷியன் சுமன் அவர்கள் குளிர்காலத்தில் ஆம்லா முரப்பா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்துக் கூறியுள்ளார்.

தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதன் நன்மைகள்
கண் ஆரோக்கியத்திற்கு
குளிர்காலத்தில் ஆம்லா முரப்பாவை எடுத்துக் கொள்வது கண் ஆரோக்கியத்திற்கு உதவும். இதற்கு இதில் உள்ள வைட்டமின் ஏ சத்துக்களே காரணமாகும். வயது முதிர்வால் ஏற்படும் கண் பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெற இந்த ஆம்லா முரப்பா உதவுகிறது.
சருமம் மற்றும் முடி நன்மைக்கு
ஆம்லா முரப்பாவை குளிர்காலத்தில் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் தோல் தொடர்பான பிரச்சனைகள் குறையும். இது சருமத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்து ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. அதே சமயம், குளிர்காலத்தில் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படலாம். இந்த சூழ்நிலையில் ஆம்லா முரப்பா உட்கொள்வது முடியை வலுவாக்குவதுடன், முடி உதிர்தலைக் குறைக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Monsoon Foods: மழைக்காலத்தில் உடல் ஆரோக்கியத்துக்கு இந்த உணவெல்லாம் எடுத்துக்கோங்க.
செரிமான அமைப்பிற்கு
ஆம்லாவில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது அஜீரணம், மலச்சிக்கல், வாயு மற்றும் அமிலத்தன்மை உள்ளிட்ட பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் தருகிறது. இவை செரிமான அமைப்பை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்க உதவுகிறது.
நினைவாற்றல் மேம்பாட்டிற்கு
ஆம்லாவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோநியூட்ரியன்ட்ஸ் போன்றவை நிறைந்துள்ளது. ஆம்லா முரப்பாவை குளிர்காலத்தில் உட்கொள்வது வயது முதிர்வின் போது ஏற்படும் டிமென்ஷியா அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இது மூளையை வலுப்படுத்தவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.

சளி, இருமல் குணமாக
குளிர்காலத்தில் பலரும் பலவீனமான நோயெதிர்ப்புச் சக்தியக் கொண்டிருப்பர். இதனால் சளி, இருமல் போன்ற பிரச்சனை ஏற்படலாம். இந்த சூழ்நிலையில் ஆம்லா முரப்பாவை உட்கொள்வது சளி, இருமல் போன்றவற்றை நீக்குகிறது. மேலும், இதில் உள்ள வைட்டமின் சி போன்றவை பருவகால நோய்த்தொற்றுக்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது.
இவ்வாறு உடல் ஆரோக்கியத்திற்கும், சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கும் ஆம்லா முராப்பா பெரிதும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Tea Addiction: டீ குடிக்கும் பழக்கத்தை கைவிட நினைப்பவரா நீங்க? இதை செய்யுங்க!
Image Source: Freepik