Pineapple Juice Benefits: அன்னாசிப்பழச் சாறு குடிச்சா இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்கும்

  • SHARE
  • FOLLOW
Pineapple Juice Benefits: அன்னாசிப்பழச் சாறு குடிச்சா இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்கும்


மேலும், அன்னாச்சிப்பழத்தில் இயற்கையாகவே சர்க்கரை அதிகமாக இருக்கும். ஆனால், இதில் உள்ள ஊட்டச்சத்துகளை பெரும்பாலானோர் அறிந்ததில்லை. இதில், பப்பாளிச் சாற்றை அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: இனி இந்த கலர் பாக்கெட் பால் கிடையாது. எந்த கலர் பாக்கெட் பால் உடலுக்கு நல்லது தெரியுமா?

அன்னாச்சி பழச்சாறு

அன்னாச்சி பல்வேறு விதமான நன்மைகளைத் தருகிறது. அதன் படி, வீக்கத்தை குறைப்பது, உடல் வளர்ச்சியை ஊக்குவிப்பது, இதய ஆரோக்கியத்திற்கு, தசை ஆற்றலுக்கு உதவ, செரிமானத்தை அதிகரிக்க போன்றவற்றைத் தருகிறது. மேலும், இந்தப் பழச்சாற்றில் ப்ரோமெலைன் என்ற என்சைம் காணப்படுகிறது. இவை செரிமானத்திற்கு உதவக்கூடிய என்சைம் ஆகும். மேலும், இதில் வைட்டமின்கள் பி, மாங்கனீஸ், பொட்டாசியம், நார்ச்சத்துகள் போன்றவை நிறைந்து காணப்படுகிறது.

அன்னாச்சிப் பழச்சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

மனச்சோர்வுக்கு தீர்வாக

அன்னாச்சி சாற்றில் வைட்டமின் பி ஊட்டச்சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. இவை மனநிலையை மேம்படுத்தும் ஹார்மோன் வளர்ச்சியை சீராக்குகிறது. அன்னாச்சி பழச்சாறு அருந்துவதால் பதட்டத்தைத் தணிக்க உதவுகிறது. மேலும், மனச்சோர்வுக்கு சிறந்த தீர்வை தருகிறது.

செரிமான மேம்பாட்டிற்கு

அன்னாச்சியில் ப்ரோமெலைன் மற்றும் நார்ச்சத்து போன்றவை நிறைந்துள்ளன. இவை செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சனையைத் தீர்க்க உதவுகிறது. மேலும், குடல் இயக்கத்தை மேம்படுத்தி, ஊட்டச்சத்துக்கள் செரிமான மண்டலத்தில் சேர்வதற்கு உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Turmeric Water Benefits: குளிர் காலத்தில் மஞ்சள் நீர் குடிப்பது இவ்வளவு நல்லதா?

சருமத்திற்கு நன்மை தரும் சாறு

அன்னாச்சிப் பழச்சாற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இவை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. இவை சருமத்திற்குத் தேவையான கொலாஜன் உற்பத்தியைத் தருகிறது. இவை சருமத்திற்குத் தேவையான முக்கிய புரதமாகும். இந்த அன்னாச்சிப்பழச் சாறு சருமத்தை ஆழமாகப் பாதுகாத்து, ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

இதய பராமரிப்பில் அன்னாச்சி சாறு

அன்னாச்சிச் சாறு கணிசமான வைட்டமின் பி1 உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. இது இதய செயல்பாட்டை சாதகமாக பாதிக்கிறது. அதாவது இதன் வைட்டமின் சி உள்ளடக்கம் இரத்த நாளங்களை வலுவாக வைப்பதுடன், இதயம் மற்றும் வாஸ்குலார் ஆரோக்கியத்திற்கு சிறந்த தேர்வாக அமைகிறது.

நோயெதிர்ப்புச் சக்திக்கு

அன்னாச்சி பழச்சாற்றில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றைத் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை வலுவாக்க உதவுகிறது. மேலும், இதில் நோய் எதிர்ப்புச் சக்திக்கு உதவக்கூடிய பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் நிறைந்துள்ளன.

இந்த பதிவும் உதவலாம்: Drinking Cold Water: இதயத்திற்கே ஆபத்து… குளிர்காலத்தில் இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க!

மூளை செயல்பாட்டிற்கு

மூளைத் திறனை ஆதரிக்க உதவும் பானங்களில் அன்னாச்சிப்பழச் சாறு சிறந்த பானமாகும். இதில் உள்ள வைட்டமின் சி சத்துகள் நினைவாற்றல் மற்றும் செறிவு மேம்பாட்டில் பங்களிக்கிறது. மேலும், இவை நல்ல மன சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இவை மூளை செயம்பாட்டை ஆதரிப்பதாக அமைகின்றன.

ஆற்றலை மேம்படுத்த

அன்னாச்சிப் பழச்சாற்றை அருந்துவது உடல் சோர்வடைவதில் இருந்தும், மந்தத் தன்மையிலிருந்தும் விடுபட வைக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் இன்னும் பிற ஊட்டச்சத்துக்கள் உடல் சோர்வைக் குறைத்து, மீண்டும் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகின்றன. மேலும், இதில் உள்ள மாங்கனீசு தாதுக்கள் உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகிறது. மேலும், உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவதுடன், புத்துணர்ச்சியாக இருக்கவும் அன்னாச்சிப் பழச்சாறு உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Benefits of Coriander Water: வெறும் வயிற்றில் தினமும் காலை கொத்தமல்லி தண்ணீர் குடிப்பது எவ்வளவு நல்லது தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Saffron Tea Benefits: மூட்டுவலி காணாமல் போக சூப்பரான இந்த டீ குடிங்க.

Disclaimer

குறிச்சொற்கள்