World Oral Health Day 2025: ஆண்டுதோறும், மார்ச் 20 ஆம் தேதி உலக வாய்வழி சுகாதார தினமாக அனுசரிக்கப்படுகிறது. இது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் வாய்வழி சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கும் உதவக்கூடியதாகும். இது பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒட்டுமொத்த நல்வாழ்வின் மிகவும் இன்றியமையாத அங்கமாகும். பொதுவாக வாய்வழி நோய்கள் உலகளவில் மிகவும் பொதுவான தொற்று அல்லாத நோய்களில் ஒன்றாகும். இது பெரும்பாலும் தடுக்கக் கூடியவையாக இருப்பினும், வாய்வழி ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும். இது வாய்வழி சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளவில் பில்லியன் மக்களைப் பாதிக்கும் வாய்வழி நோய்களைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் கொண்டாடப்படுகிறது.
அன்றாட உணவில் தண்ணீரை உட்கொள்வது உடலின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்றாகும். ஏனெனில், இது வாழ்க்கையின் மிக அடிப்படையான தேவைகளில் ஒன்றாகும். உடலில் செரிமானம், உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துதல், மூட்டு உயவு, ஹார்மோன் உற்பத்தி, உடல் முழுவதும் ஆக்ஸிஜன் விநியோகம் மற்றும் pH சமநிலையை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு தண்ணீர் மிகவும் அவசியமானதாகும். தண்ணீர் அருந்துவது தாகத்தைத் தணிப்பது மட்டுமல்லாமல் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. இது தவிர, தண்ணீர் அருந்துவதில் குறைவாக அறியப்பட்ட நன்மைகளில் ஒன்றாக, அது வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்துவது அடங்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Mouth Breathing: வாயை திறந்து கொண்டு தூங்கினால் வாய் வறட்சி ஏற்படுமா?
வாய் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் குடிப்பது எவ்வாறு உதவுகிறது?
ஹெல்த்ஷாட்ஸ் தளத்தில் குறிப்பிட்ட படி, “பல்வேறு ஆரோக்கிய நலன்களுக்காக குடிநீர் எப்போதும் ஒரு நல்ல தேர்வாக அமைகிறது. இது நீரேற்றமாக வைத்திருப்பதற்கும், ஊட்டச்சத்துக்களின் விநியோகத்தில் உதவுவதற்கும், சருமத்திற்கு ஆரோக்கியமான பளபளப்பைக் கொடுப்பதற்கும், தசைகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் இது முக்கியமானதாகும். அதே சமயம், பற்களின் ஆரோக்கியத்திற்கும் தண்ணீர் குடிப்பது சிறந்த விஷயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த தண்ணீர் அருந்துவதன் நன்மைகள்
அரிப்பைக் குறைப்பதற்கு
பற்களில் ஏற்படக்கூடிய அமில அரிப்பின் விளைவுகளை குறைக்க நீர் பெரிதும் உதவுகிறது. அமில பானங்கள் மற்றும் சோடா மற்றும் சிட்ரஸ் பழங்கள் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வது பல் எனாமலை அரிக்கலாம். இதனால், பல் உணர்திறன் மற்றும் சிதைவை ஏற்படுத்தலாம். இந்நிலையில் தண்ணீர் அருந்துவது பற்களின் அமிலத்தை அகற்றி, பற்களைப் பாதுகாக்க உதவுகிறது.
வாயை சுத்தம் செய்வதற்கு
பொதுவாக தண்ணீர் அருந்துவது ஒரு சிறந்த வாய் சுத்தப்படுத்தியாக அமைகிறது. ஏனெனில், இது வாயிலிருந்து உணவுத் துகள்களை நீக்கவும், ஆபத்தான பாக்டீரியாக்களை வெளியேற்றவும் உதவுகிறது. இதன் விளைவாக பற்சிப்பியில் படிந்திருக்கும் தகடுகளை அகற்றலாம் மற்றும் பற்சிப்பி அரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம். எனவே வெண்மையான பற்களுக்கு அதிக தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
வாய் வறட்சியைத் தடுப்பதற்கு
போதுமான அளவு தண்ணீரைக் குடிப்பதன் மூலம் வாய் வறட்சியைத் தடுக்கலாம். ஏனெனில் வாய் வறட்சியின் காரணமாக பற்சிதைவு, வாய் துர்நாற்றம் மற்றும் பிற வாய்வழி சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம். வாயில் உள்ள பாக்டீரியாக்களால் உற்பத்தி செய்யப்படும் அமிலங்களை நடுநிலையாக்க உமிழ்நீர் உதவுகிறது. இது பற்சிதைவை ஏற்படுத்தக்கூடிய உணவுத் துகள்களைக் கழுவ உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: National toothache day 2025: தினமும் பல் துலக்குவது ஏன் ரொம்ப முக்கியம் தெரியுமா? நீங்க கட்டாயம் தெரிஞ்சிக்கணும்
ஃப்ளூரைடு உட்கொள்ளலை அதிகரிப்பதற்கு
பெரும்பாலான குடிநீரில் ஃப்ளூரைடு நிறைந்திருக்கும். அதன் படி, தண்ணீரை அருந்துவதன் மூலம் ஃப்ளூரைடு உட்கொள்ளலை அதிகரிக்கலாம். இது பற்களை வலுப்படுத்துவதற்கு உதவுகிறது. இது பற்களில் ஏற்படும் துவாரங்களைத் தடுக்கவும், ஒட்டுமொத்த வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது. எனவே தான் ஃப்ளூரைடு கொண்ட பற்பசையைக் கொண்டு பல் துலக்க பரிந்துரைக்கப்படுகிறது.
கறைகளைத் தடுப்பதற்கு
வாய்வழி ஆரோக்கியத்தைப் பேணிப்பாதுகாப்பதற்கு, பல் துலக்குதல் மற்றும் பல் பல் ஃப்ளாஸ் பயன்படுத்துவது முக்கியமானதாகும். எனினும், பற்களை சுத்தமாகவும், கறைகள் இல்லாமலும் இருக்க அடிக்கடி தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியமாகும். அதே சமயம் சர்க்கரை பானங்கள் நிறைந்த கார்பனேற்றப்பட்ட பானங்கள், பழச்சாறு மற்றும் விளையாட்டு பானங்களைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது பற்சிதைவை அதிகரிக்கலாம்.
ஈறு நோயைத் தடுப்பதற்கு
பற்களின் ஈறுகளை நீரேற்றமாக வைத்திருக்க தண்ணீர் குடிப்பது அவசியமாகும். இது ஈறு நோயைத் தடுக்க மிகவும் முக்கியமானதாகும். ஈறு நோய் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், ஈறு நோய் வீக்கம், இரத்தப்போக்கு மற்றும் இறுதியில் பல் இழப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த அபாயத்தைத் தவிர்ப்பதற்கு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
உலக வாய்வழி சுகாதார தினத்தின் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு வாய் ஆரோக்கியத்தைப் பராமரிக்க தண்ணீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: World Oral Health Day 2025: வாயில் துர்நாற்றம் வீசுவதற்கு ஈறு பிரச்சனை காரணமா? துர்நாற்றம் போக்க வீட்டு வைத்தியம்!
Image Source: Freepik