Curry Leaves Water Benefits: தினமும் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை தண்ணீர் குடிச்சா இந்த பிரச்சனை எல்லாம் வராதாம்

  • SHARE
  • FOLLOW
Curry Leaves Water Benefits: தினமும் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை தண்ணீர் குடிச்சா இந்த பிரச்சனை எல்லாம் வராதாம்

அதிலும் காலை நேரத்தில் ஏராளமான உணவை உண்ணும் பழக்கம் பெரும்பாலானோர்க்கு உள்ளது. இவை செரிமானத்தைக் கடினமாக்கலாம். சில டிடாக்ஸ் பானங்களை அருந்துவதன் மூலம் உடலில் உள்ள அனைத்து நச்சுக்களையும் வெளியேற்ற உதவுகிறது. இது நம் உடலுக்கு பல்வேறு வழிகளில் பயனளிக்கிறது. அந்த வகையில் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை நீரை அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கும், ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Juice For High Cholesterol: கொழுப்பு அதிகமா இருக்கா? இந்த ஜூஸ் எல்லாம் குடிங்க.

கறிவேப்பிலை நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

காலை நேரத்தில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை நீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த

கறிவேப்பிலையில் நிறைந்துள்ள பண்புகள் தலைமுடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. வெறும் வயிற்றில் கறிவேப்பிலை நீர் அருந்துவது மயிர்க்கால்களை வலுப்படுத்துவதுடன், வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. முன்கூட்டிய நரையைத் தடுப்பதுடன், உச்சந்தலையில் ஊட்டமளிக்கிறது.

செரிமானத்திற்கு உதவ

கறிவேப்பிலையில் செரிமானத்தை ஊக்குவிக்கும் நொதிகள் நிறைந்துள்ளன. இவை ஆரோக்கியமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. கறிவேப்பிலை நீர் மலச்சிக்கல் பிரச்சனைக்குத் தீர்வு தருகிறது. செரிமான அமைப்பை மெதுவாகத் தூண்டுவதன் மூலம் குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. இதன் இயற்கையான பண்புகள் குடலில் கடுமையான அல்லது திடீர் விளைவுகளை ஏற்படுத்தாமல் மலச்சிக்கல்லைப் போக்க உதவுகிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த

கறிவேப்பிலை நீரில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இது உடலை உற்சாகப்படுத்த உதவுகிறது. இவை உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது. இவை உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது. இவை புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களைத் தடுக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Black Raisins benefits: தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த கருப்பு திராட்சை சாப்பிடுவதன் நன்மைகள்!

மன அழுத்தத்தை எதிர்த்துப் போராட

கறிவேப்பிலை நீர் அருந்துவது உடலில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்த உதவுகிறது. கறிவேப்பிலை தண்ணீரைக் குடிப்பது தசைகள் மற்றும் நரம்புகள் தளர்வடைவதுடன் மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது. வெறும் வயிற்றில் காலை நேரத்தில் கறிவேப்பிலை நீர் குடிப்பது காலை நேரத்தில் அமைதியாகவும், புத்துணர்ச்சியுடனும் வைக்க உதவுகிறது.

கறிவேப்பிலை நீர் செய்வது எப்படி?

ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை எடுத்து, அதை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து, பின் வடிகட்ட வேண்டும். இதன் ஆரோக்கிய நன்மைகளைப் பெற வெறும் வயிற்றில் இந்த நீரை அருந்தலாம்.

குறிப்பு

கறிவேப்பிலை நீர் அதிக பயன்களைத் தந்தாலும், இதன் அதிகப்படியான நுகர்வு சிறிய பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். உணர்திறன் கொண்ட நபர்களில் இரைப்பை தொந்தரவுகள் அல்லது ஒவ்வாமை எதிர்வினைகள் போன்ற சாத்தியமான அசௌகரியங்களை ஏற்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Inflammation Reduce Drinks: இந்த சாறு குடிச்சா சீக்கிரம் மூட்டு வலி குணமாகிடும்

Image Source: Freepik

Read Next

Kollu Dosa: காலை டிஃபனாக கொள்ளு தோசை சாப்பிடுங்க! எப்படி செய்யனும் தெரியுமா?

Disclaimer