Doctor Verified

Juice For High Cholesterol: கொழுப்பு அதிகமா இருக்கா? இந்த ஜூஸ் எல்லாம் குடிங்க.

  • SHARE
  • FOLLOW
Juice For High Cholesterol: கொழுப்பு அதிகமா இருக்கா? இந்த ஜூஸ் எல்லாம் குடிங்க.

HDL மற்றும் LDL கொழுப்பு வகைகள்

உடலில் இரண்டு வகையான கொழுப்புகள் காணப்படும். அவை உயர் அடர்த்தி கொண்ட கொழுப்புப் புரதம் (HDL) மற்றும் குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்புப் புரதம் (LDL) போன்றவை உள்ளன. உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் நிலையே உயர் கொலஸ்ட்ரால் எனப்படுகிறது. இது தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தலாம். இந்த உயர் கொழுப்பைக் கட்டுப்படுத்துவதில் காய்கறி சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Apple cider vinegar: சட்டுனு உடல் எடை குறைய ஆப்பிள் சைடர் வினிகரை எப்போது, எப்படி குடிக்கணும் தெரியுமா?

அதிக கொழுப்பைக் கட்டுப்படுத்த காய்கறி சாறு

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதன் காரணமாக பல்வேறு கடுமையான பிரச்சனைகள் ஏற்படும். இதனால் நோயாளிகள் இறக்கவும் நேரிடலாம். உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் குறைய பச்சை காய்கறிகள், நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இது மட்டுமின்றி சில கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது.

இது குறித்து ஆரோக்யா ஹெல்த் சென்டரின் மருத்துவ உணவியல் நிபுணர் டாக்டர் வி.டி.திரிபாதி அவர்கள் கூறுகையில், “உணவுப் பழக்கங்கள் மற்றும் சமநிலையற்ற வாழ்க்கை முறையால் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படுகிறது. கொலஸ்ட்ரால் அதிகரிப்பது பல்வேறு கடுமையான பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் ஏற்படலாம். அதிக கொழுப்பைக் கட்டுப்படுத்த பாகற்காய், கீரை, சுரைக்காய் போன்ற காய்கறிகளின் சாறுகளை அருந்தலாம்” என்று கூறியுள்ளார்.

கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் காய்கறி சாறு

உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க சில ஆரோக்கியமான காய்கறி சாறுகளை அருந்தலாம்.

சுரைக்காய் சாறு

அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு சுரைக்காய் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். இதில் இரும்புச்சத்துக்கள், வைட்டமின் சி, துத்தநாகம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை காணப்படுகின்றன. இதை உட்கொள்வதன் மூலம் அதிக கொழுப்பைக் கட்டுப்படுத்தலாம்.

பூசணி சாறு

அதிக கொழுப்பைக் கட்டுப்படுத்த பூசணி சாற்றைத் தொடர்ந்து உட்கொள்ளலாம். இவை நார்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். நார்ச்சத்துக்களைத் தொடர்ந்து உட்கொள்வது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Strong Teeth Foods: பற்கள் ஸ்ட்ராங்கா இருக்க நீங்க சாப்பிட வேண்டிய வேண்டிய உணவுகள் இது தான்

பாகற்காய் சாறு

பாகற்காய் சாறு உடல் நலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதிக கொலஸ்ட்ரால் மற்றும் நீரிழிவு நோய் போன்ற பிரச்சனைகளுக்கு பாகற்காய் சாறு அருந்தலாம். இவை கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. இந்த் சாற்றை அருந்துவதன் மூலம் பெருந்தமன தடிப்புத் தோல் அழற்சி அபாயத்தைக் குறைக்கிறது. பாகற்காய் சாற்றை தினமும் குடித்து வருவதன் மூலம் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம்.

கீரை சாறு

கீரை சாற்றை உட்கொள்வது அதிக கொழுப்பைக் கட்டுப்படுத்தலாம். இதில் போதுமான அளவு நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஜிங்க் போன்றவை நிறைந்துள்ளன. இதை காலையில் எடுத்துக் கொள்வது உடலில் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது.

இந்த சாறுகளை உட்கொள்வதன் மூலம் அதிக கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தலாம். இது தவிர அன்றாட உணவு முறை, வாழ்க்கை முறைகளின் மூலம் கொலஸ்ட்ராலைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். மேலும் உணவில் குறைந்த அளவிலான கொழுப்புள்ள உணவுகளைச் சேர்ப்பது, வழக்கமான உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் கொலஸ்ட்ராலைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Mushroom Health Benefits: இது தெரிஞ்சா இனி நீங்க தினமும் காளான் சாப்பிடுவீங்க

Image Source: Freepik

Read Next

Aval Vs Rice: ஆரோக்கியத்தில் சிறந்தது எது.? வெள்ளை அரிசியா.? அவலா.?

Disclaimer