$
Best Foods And Drinks For Healthy Teeth: நாம் பெரும்பாலும் பற்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க மறந்து விடுகிறோம். அதிலும் குறிப்பாக ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் மோசமான பழக்க வழக்கங்களால் பற்களின் ஈறுகள் பாதிக்கப்படுவதுடன் பற்களில் வலிகளைச் சந்திக்கும் நிலை ஏற்படும்.
தீங்கு விளைவிக்கக் கூடிய உணவுகளைத் தேர்ந்தெடுப்பது வாய்வழி ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கலாம். ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களின் மூலம் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். இதில் எந்தெந்த உணவுகள் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது என்பது குறித்துக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Palaya Soru Benefits: இந்த பிரச்சனைக்கு அறுவை சிகிச்சைலாம் வேணாம்! பழைய சோறு ஒன்னு போதும்
பல் ஈறு ஆரோக்கியத்திற்கான உணவுகள்
பற்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு சில ஊட்டச்சத்துமிக்க உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும். அந்த வகையில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதங்கள் போன்றவை நன்மை பயக்கும். வலுவான பற்களுக்கு ஆரோக்கியமான உணவுகள் உதவுகின்றன. இவை வாயிலிருந்து பாக்டீரியா மற்றும் அமிலம் போன்றவற்றை அகற்றுகிறது.
கேரட், செலரி, பச்சை இலை காய்கறிகள் போன்ற காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம். பாதாம், முந்திரி, மற்றும் பாஸ்தா போன்ற பருப்பு வகைகள், தயிர், சீஸ் போன்ற பால் பொருள்கள், முட்டை, மீன், வெள்ளை இறைச்சி போன்ற புரதம் நிறைந்த உணவுகள் போன்றவை பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

பற்களின் ஆரோக்கியத்திற்கு ஏன் காய்கறிகள்
காய்கறி வகைகளான கேரட் மற்றும் செலரியில் வைட்டமின் ஏ, சி மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவற்றை நிறைந்துள்ளது. கேரட்டை பச்சையாக சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம். மேலும், செலரியில் உள்ள நார்ச்சத்துக்கள் பற்களிலிருந்து பாக்டீரியாக்கள் மற்றும் மீதமுள்ள உணவுத் துகள்களை அகற்றி, அதை சுத்தம் செய்ய உதவுகிறது.
வாய் ஆரோக்கியத்திற்கு நட்ஸ் வகைகள்
பிரேசில் பருப்புகள், முந்திரி மற்றும் பாதாம் போன்றவை பற்சிதைவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய கூறுகள் நிறைந்துள்ளன. பாதாமில் அதிகளவு கால்சியம் உள்ளது மற்றும் வேர்க்கடலையில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. இவை பற்கள், ஈறுகள் மற்றும் எலும்புகளுக்கு நன்மை தருகிறது. நட்ஸ் வகைகளில் முந்திரி உமிழ்நீர் உற்பத்தியை அதிகரிக்கிறது. அக்ரூட் பருப்பில் வைட்டமின் ஈ, பி6, பொட்டாசியம், இரும்பு, மக்னீசியம், நியாசின் போன்றவை அதிகம் உள்ளது இவை பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Ear Healthy Foods: எவ்வளவு வயசானாலும் காது தெளிவா கேட்க இந்த உணவு எடுத்துக்கோங்க.
பல் ஈறு ஆரோக்கியத்திற்கு பழங்கள்
ஸ்ட்ராபெர்ரி, வெள்ளரிக்காய், ஆப்பிள், பேரிக்காய், தக்காளி, அன்னாச்சி போன்றவை வைட்டமின் சி அதிகம் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களாகும். மேலும், ஸ்ட்ராபெர்ரியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளன. இவை பல் ஈறுகளில் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. கூடுதலாக, பாக்டீரியா தொற்று, திசுக்களை செல்லுலார் சேதம் செய்வது போன்றவற்றிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

ஈறு ஆரோக்கியத்திற்கு மெலிந்த புரதங்கள்
பெரும்பாலான இறைச்சி வகைகள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இறைச்சிகளை மென்று சாப்பிடுவது, உமிழ்நீரை உருவாக்கி அவை வாயில் உள்ள அமிலத்தன்மையைக் குறைக்க உதவுகிறது. பற்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான பாஸ்பரஸ் மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் போன்றவை கொழுப்பு மீன், டோஃபு போன்றவற்றில் ஏராளமாக உள்ளது.
இது போன்ற பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் காய்கறிகள், பழங்கள், இறைச்சிகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Sweet Potato Benefits: சர்க்கரை வள்ளி கிழங்கில் இவ்வளவு நன்மை இருக்கா?
Image Source: Freepik