Summer Food List: கோடை காலத்தில் நீங்க கட்டாயம் சாப்பிட வேண்டியவை இது தான்

  • SHARE
  • FOLLOW
Summer Food List: கோடை காலத்தில் நீங்க கட்டாயம் சாப்பிட வேண்டியவை இது தான்


What Foods To Eat During Summer: கோடை காலம் என்றாலே நாம் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளில் நீரிழிப்பும் ஒன்று. அதிகப்படியான வெயிலின் தாக்கத்தினால் உடலில் நீரிழிப்பு ஏற்படுவதுடன், உடலில் வைட்டமின்கள் குறைபாடு ஏற்பட்டு ஆபத்தை ஏற்படுத்தலாம். இதனைத் தவிர்க்க சில ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

பருவக்கால உணவு வகைகளில் கோடை காலத்திற்கென சில ஆரோக்கியமான உணவு வகைகள் உள்ளன. இந்த கால சூழ்நிலையில் இந்த உணவுகளை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கோடை காலத்தில் உடலுக்கு நீரேற்றம் அளிக்கக் கூடிய உணவுகள் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Tips: உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் புதினா டீ! இப்படி பண்ணுங்க..

கோடை காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்

தர்பூசணி

கோடை காலத்தில் உடலை நீரேற்றமாக வைக்க உதவும் உணவுகளில் தர்பூசணி முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள அதிகப்படியான நீர், உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. சூரிய ஒளியினால் ஏற்படும் சரும சேதத்திலிருந்து பாதுகாக்கவும் தர்பூசணி உதவுகிறது.

கிரீன் டீ

இது ஒரு சூடான பானமாகும். இது எப்படி உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் என்பது பலருக்கும் ஏற்படும் சந்தேகம் ஆகும். கிரீன் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் போன்றவை அதிகம் நிறைந்துள்ளன. உடலை நீரேற்றமாக வைத்திருக்க கிரீன் டீ பெரிதும் உதவுகிறது. இது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. சர்க்கரை நிறைந்த குளிர்பானங்களை அருந்துவதற்குப் பதிலாக, கிரீன் டீ குடிப்பது உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்.

சால்மன் மீன்

இதில் ஒமேகா-3 எனும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இது உடலில் இயற்கையான சுரப்பதில்லை. வெளிக்காரணியாக சில தாவரங்கள் மற்றும் இறைச்சிகள் மூலம் கிடைக்கப் பெறுகிறது. இந்த சால்மன் மீனில் உள்ள அதிகளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் புரதத்தின் சிறந்த மூலமாகவும், இதயத்திற்கு நன்மை தருபவையாகவும் அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: இரவில் பழம் சாப்பிடுவதில் இத்தனை விளைவுகள் இருக்கா? என்னனு தெரிஞ்சிக்கோங்க

பெர்ரி

பெர்ரியில் பல வகைகள் உள்ளன. ப்ளூ பெர்ரி, பிளாக் பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி என அனைத்து வகையான பெர்ரி பழங்களிலும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. ப்ளூபெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி இரண்டுமே அதிக ஃபிளவனாய்டுகளைக் கொண்டுள்ளது. இவை சருமத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது சருமத்தின் ஆரோக்கியம் மற்றும் தோற்றத்தை மேம்படுத்துகிறது.

இது தவிர, ப்ளாக் பெர்ரி, ராஸ்பெர்ரி இரண்டும் அதிகளவு நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளது. கோடைக்காலத்தில் இந்த பழங்களை எடுத்துக் கொள்வது சிறந்த பலனளிக்கும்.

தயிர்

புரதச்சத்துக்கள் நிறைந்த தயிர் மிக முக்கியமான பால் உணவாகும். இதில் உள்ள புரதம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைத் தருகிறது. தயிரை உட்கொள்வது அதிக கலோரி கொண்ட உணவுகள் உண்பதிலிருந்து தடுக்கிறது. மேலும் இதில் உள்ள புரோபயாடிக்குகள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

இந்த வகை உணவுகள் கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்:

Image Source: Freepik

Read Next

இரவில் பழம் சாப்பிடுவதில் இத்தனை விளைவுகள் இருக்கா? என்னனு தெரிஞ்சிக்கோங்க

Disclaimer

குறிச்சொற்கள்