$
Side Effects Of Eating Fruits At Night: உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில் உணவு முறையைச் சரியாகக் கையாள்வது அவசியமாகும். உடல் ஆரோக்கியத்திற்கு பழங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தைகள், சிறியவர்கள், மற்றும் வயதானவர்கள் என அனைவரும் பழங்களை உட்கொள்ளலாம். ஆனால், பழங்களை எந்த நேரத்திலும் சாப்பிட வேண்டும் என்பதல்ல. ஏனெனில் காலத்திற்கு ஏற்ப பழங்களை எடுத்துக் கொள்வதே சிறந்த பலன்களைத் தரும்.
குறிப்பாக இரவு நேரத்தில் பலரும் இனிப்பு சாப்பிட விரும்புவர். இதற்கு பழங்களைத் தேர்ந்தெடுப்பர். இரவில் ஏற்படும் இனிப்பு பசியைத் தீர்க்க பழங்களைத் தேர்ந்தெடுப்பது நல்லதா? பழங்கள் ஆரோக்கியமானவை மற்றும் சத்தானவையாகும். ஆனால், இரவில் பழங்களை சாப்பிடுவது நல்லதல்ல என கூறப்படுகிறது. அதற்கான காரணங்கள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Cholesterol Lower Drinks: காலை எழுந்ததும் இதெல்லாம் குடிச்சா கொலஸ்ட்ரால் டக்குனு குறைஞ்சிடும்
இரவில் பழங்கள் சாப்பிடுவதன் விளைவுகள்
இரவு நேரங்களில் பழங்களை உட்கொள்வது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். இதனுடன் உடலின் ஆற்றல் அளவையும் அதிகரிக்கிறது. இந்த சூழ்நிலையில் தூக்கம் தடைபடுகிறது. எனவே, இரவில் பழங்கள் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
பழங்களில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் உடலின் செரிமான அமைப்பு நார்ச்சத்து செரிமானத்தைக் குறைக்கிறது. கூடுதலாக பழங்களில் சர்க்கரை (பிரக்டோஸ்) நிறைந்துள்ளது. இது செரிமான அமைப்பால் மெதுவாக செரிக்கப்படுவதுடன், மெதுவாக உடலால் உறிஞ்சப்படுகிறது.
வாழைப்பழம், ஆரஞ்சு போன்ற பழங்களை எடுத்துக் கொள்வது சிலருக்கு தொண்டைப் புண்களை ஏற்படுத்தலாம்.
கலோரிகளைக் குறைக்க விரும்புபவர்கள் இரவு உணவில் பழங்களைத் தேர்ந்தெடுப்பதற்கு பதில் காய்கறி சாலட்கள், முளைத்த பீன்ஸ், பருப்பு வகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இந்த சாலட்டில் ஆப்பிள் போன்ற குறைந்த கார்போஹைட்ரேட்டுகள் கொண்ட பழங்களைக் கண்டிப்பாக சேர்க்கலாம்.

இரவில் பழங்களுக்கும் உணவுகளுக்கும் இடையேயான இடைவெளி
ஆயுர்வேதத்தின் படி, உணவுகளுக்கும் பழங்களுக்கும் இடையே இடைவெளி இருப்பது அவசியமாகும். ஏனெனில் இரண்டையும் இடைவெளியில்லாமல் உட்கொள்வது செரிமான அமைப்பில் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தலாம். மேலும் உறங்குவதற்கு 3 முதல் 4 மணி நேரத்திற்கு முன்னதாகவே உணவை உட்கொள்ள வேண்டும் என்று கூறுவர். இத்துடன் உணவில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உறிஞ்ச முடியாது. எனவே பழங்களை சாப்பிட்ட 30 நிமிடங்களுக்குப் பிறகே உணவை உண்ண வேண்டும். எனினும் முடிந்த வரை இரவு நேரங்களில் பழங்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Black Rice Benefits: இது தெரிஞ்சா வெள்ளை அரிசிக்கு பதிலா கருப்பு அரிசியை தான் சாப்பிடுவீங்க
Image Source: Freepik