Ramadan 2024: ரமலான் நோன்புக்கு தயாராகும் முன்பு… இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்!

  • SHARE
  • FOLLOW
Ramadan 2024: ரமலான் நோன்புக்கு தயாராகும் முன்பு… இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்!


இஸ்லாமியர்களின் புனிதமான மாதமான ரமலான் மாதத்தில் நோன்பு மேற்கொள்வது வழக்கம். இந்த நோன்பு காலத்தில் உணவு மட்டுமின்றி, தண்ணீர் குடிக்காமல், எச்சில் கூட விழுங்காமல் இஸ்லாமியர்கள் கடுமையாக விரதம் இருப்பார்கள்.

இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை சூரிய உதயத்தில் இருந்து சூரிய அஸ்தமனம் வரை மேற்கொள்வார்கள். நோன்கு காலத்தில் சுகூர் மற்றும் இஃப்தார் என இரண்டு வகையான உணவுகளை இஸ்லாமியர்கள் உண்பார்கள். இநோன்பு திறக்கும் முன் சாப்பிடும் உணவு தான் சுகூர் என்று அழைக்கப்படுகிறது. அதாவது இது சூரிய உதயத்திற்கு முன் சாப்பிடும் உணவு. மாலையில் இப்தார் மூலம் நோன்பை முடித்துக்கொள்வார்கள்.

how-to-prepare-for-ramadan-fasting

ஆனால் ரமலான் நோன்பிற்காக இந்த தினசரி வழக்கத்தைத் தொடங்குவதற்கு முன், உங்கள் உடலை தயார் செய்ய வேண்டும். உண்மையில், திடீரென்று உணவு மற்றும் தண்ணீரை விட்டுவிடுவது உடலில் செயல்பாடுகளை பாதிக்கக்கூடும். எனவே நோன்பு தொடங்குவதற்கு முன்பாகவே சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்.

இதில் நோன்பு தொடங்கும் முன்பே உடலை தயார்ப்படுத்த என்னென்ன மாதிரியான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என இக்கட்டுரை மூலம் விரிவாக பார்க்கலாம்…

  1. இனிமேல் உணவின் அளவைக் குறையுங்கள்:

ரம்ஜான் நோன்பைக் கடைபிடிக்க, இனிமேல் உண்ணும் உணவை குறைக்க வேண்டும். குறைப்பது என்பதற்கு, உணவு உட்கொள்வதை நிறுத்துவது என்ற அர்த்தம் கிடையாது. மாறாக ஒரே நேரத்தில் அதிக அளவில் சாப்பிடுவதற்கு பதிலாக, உணவை கொஞ்சம், கொஞ்சமாக பிரித்து சாப்பிடலாம்.

அதாவது தினமும் மூன்று அல்லது ஐந்து வேளை சாப்பிடாமல் 2 வேளை மட்டும் சாப்பிடுங்கள். இந்த வழியில் உடலை சமநிலைப்படுத்த முயற்சிக்கவும்.

  1. அதிக தண்ணீர் குடிக்கவும்:

உடலுக்கு தண்ணீர் அதிகம் தேவை. அத்தகைய சூழ்நிலையில், முதலில் நீங்கள் அதிக தண்ணீர் குடிக்கத் தொடங்க வேண்டும், இதனால் நோன்பு தொடங்குவதற்கு முன்னதாகவே உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற முடியும்.

இது தவிர, உடலை முழுவதுமாக ஹைட்ரேட் செய்ய முயற்சி செய்யுங்கள், இதனால் உண்ணாவிரதத்தின் போது உடலில் ஈரப்பதம் இருக்கும், மேலும் இது பிபியை சமநிலைப்படுத்த உதவுகிறது. இது தவிர உணவு உண்பதற்கு முன் தண்ணீர் குடிக்கவும். இது உணவின் அளவைக் குறைக்க உதவும்.

  1. இந்த மூன்றின் அளவை கட்டுப்படுத்துங்கள்:

உப்பு, காபி, தேநீர் மூன்றையும் எடுத்துக் கொள்வது உடலில் அதிக நீரிழப்பை தூண்டும். இது தவிர, திசுக்கள் மற்றும் பல செல்களை சேதப்படுத்துகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த மூன்று பொருட்களின் நுகர்வைக் குறைக்க முயற்சி செய்யுங்கள்.

இது தவிர, இந்த மூன்றும் வாயு மற்றும் அமிலத்தன்மைக் கொண்டவை என்பதால், உடலில் வீக்கம், நெஞ்செரிச்சல், உபசம் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தக்கூடும். எனவே நோன்பிற்கு முன்னதாகவே உப்பு, காபி, டீ ஆகியவற்றின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

Image Source: Freepik

Read Next

Cholesterol Lower Drinks: காலை எழுந்ததும் இதெல்லாம் குடிச்சா கொலஸ்ட்ரால் டக்குனு குறைஞ்சிடும்

Disclaimer