Diabetes and ramadan fasting: நீரிழிவு நோயாளிகளே! ரமலான் நோன்புக்கு விரதம் இருக்கீங்களா? WHO தரும் வழிகாட்டுதல் இதோ

Ramadan fasting for diabetes patients: ரமலான் நோன்பு கடைபிடிக்கும் நீரிழிவு நோயாளிகள் சில ஆரோக்கியமான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இதில் ரமலான் நோன்பு இருக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கு உலக சுகாதார நிறுவனம் சில வழிகாட்டுதல்களைத் தருகிறது. இதில் நீரிழிவு நோயாளிகளுக்கு ரமலான் நோன்புக்கு WHO தரும் வழிகாட்டுதல்களைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Diabetes and ramadan fasting: நீரிழிவு நோயாளிகளே! ரமலான் நோன்புக்கு விரதம் இருக்கீங்களா? WHO தரும் வழிகாட்டுதல் இதோ

WHO guidelines for diabetes people during ramadan fast: 2025 ஆம் ஆண்டு ரமலான் பிப்ரவரி 28 வெள்ளிக்கிழமை அல்லது அதைச் சுற்றி 29 அல்லது 30 நாட்களுக்கு நீடிக்கும் பண்டிகைக் காலமாகும். இது உலகெங்கிலும் உள்ள முஸ்லீம்களால் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இந்த ரமலான் பண்டிகையில் ரமலான் நோன்பு கையாளப்படுகிறது. ரமலான் மாதத்தில், முஸ்லிம்கள் விடியற்காலை முதல் சூரியன் மறையும் வரை நோன்பு கடைபிடிக்க வேண்டும். இதில் அவர்கள் சாப்பிடுவது, குடிப்பது, புகைபிடிப்பதைத் தவிர்க்கின்றனர்.

எனினும், இது ஒரு தனித்துவமான உடல்நல அபாயங்களை முன்வைக்கிறது. அதாவது கர்ப்பிணிப் பெண்களுக்கும், நீரிழிவு போன்ற நிலைமைகள் உள்ளவர்களுக்கும் நோன்பு பல கேள்விகளை எழுப்புகிறது. அதே சமயத்தில், இந்த நேரங்களில் நெருங்கிய தனிப்பட்ட தொடர்பு சுவாச நோய்கள் போன்ற நோய்கள் பரவுவதற்கு தாக்கங்களை ஏற்படுத்தலாம். இதில் ரமலான் நோன்பு இருக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கு உலக சுகாதார நிறுவனம் சில வழிகாட்டுதல்களைத் தந்துள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் நைட் தூங்கும் முன் இதை செய்யுங்க! உங்க சுகர் லெவல் ஏறவே ஏறாது

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் என்பது இரத்த குளுக்கோஸ் அல்லது இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது ஏற்படும் ஒரு நோயாகும். இது காலப்போக்கில், இரத்தத்தில் அதிகப்படியான குளுக்கோஸ் இருப்பது இதய நோய், நரம்பு பாதிப்பு, கண் பிரச்சினைகள் மற்றும் சிறுநீரக நோய் போன்ற பிற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

நீரிழிவு நோய்க்கு WHO-ன் வழிகாட்டுதல்

உலக சுகாதார நிறுவனம் (WHO)-வின் கூற்றுப்படி, “கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் மிகவும் பரவலாகக் காணப்படும் நோய்களில் ஒன்றாக நீரிழிவு நோய் அமைகிறது. எகிப்தில் 9 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உடல் செயல்பாடு இல்லாதது மற்றும் உணவு முறை மாற்றங்கள் போன்ற காரணங்களால் நீரிழிவு நோயின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனினும், நீரீழிவு நோயைத் தடுக்க அல்லது நிர்வகிக்க சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நீரிழிவு நோய் மற்றும் ரமலான்

ரமலான் பண்டிகையின் போது, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் தவறான தகவல்கள் பரவி வருகிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான முடிவுகளை எடுக்க உதவும் வகையில், குறிப்பாக ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும்போது பொதுவான தவறான கருத்துக்கள் சரிசெய்யப்பட வேண்டும் எனக் கூறப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Soups for diabetes: எகிறும் சுகர் லெவல் மடமடனு குறைய இந்த சூப்களை எல்லாம் உங்க டயட்ல சேர்த்துக்கோங்க

ரமலான் நோன்புக்கு நீரிழிவு நோயாளிகளுக்கான WHO தரும் வழிகாட்டுதல்கள்

உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமாக இருக்க சில வழிகாட்டுதல்களைப் பின்பற்றலாம். இதில் ரமலான் நோன்பின் போது நீரிழிவு நோயாளிகள் பின்பற்ற வேண்டிய சில குறிப்புகளைக் காணலாம்.

சர்க்கரை அளவை கண்காணிப்பது

ரமலான் பண்டிகையில் விரதத்தின் போது, சர்க்கரையைத் தவறாமல் அளவிட வேண்டும். இவ்வாறு சர்க்கரை அளவைக் கண்காணிப்பதன் மூலம் சர்க்கரை உயர்ந்தால் அல்லது குறைந்தால் உடனடியாக செயல்படலாம். இவ்வாறு சர்க்கரை அளவைக் கண்காணிப்பது நீரிழிவு நோயை நிர்வகிக்கலாம்.

மருத்துவரை அணுகுவது

ரமலான் பண்டிகைக்கு நீரிழிவு நோயாளிகள் விரதத்தை மேற்கொள்ளும் போது பாதுகாப்பான உண்ணாவிரதத் திட்டம் அல்லது பொருத்தமான மாற்று வழிகளை உருவாக்குவது அவசியமாகும். இந்நிலையில், ரமலான் பண்டிகைக்கு முன் மருத்துவரை அணுகுவது நல்லது.

நீரிழிவு நோய் உணவுமுறை

ரமலான விரதத்தின் போது அதிக அல்லது குறைந்த சர்க்கரை பிரச்சனை உள்ளவர்கள் விரதத்தை முடிக்கும் போது ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது அவசியமாகும். எனவே இந்த சூழ்நிலையில் கொழுப்பு, உப்பு உட்கொள்ளலைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும் உடலைத் தொடர்ந்து நீரேற்றமாக வைத்திருப்பது அவசியமாகும்.

உடற்பயிற்சி செய்வது

காலை உணவுக்குப் பிறகு நடைபயிற்சி அல்லது லேசான உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இது விரதத்தின் போது மட்டுமல்லாமல், மற்ற நேரங்களிலும் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: ரமலான் நோப்பு.. சுகர் கட்டுக்குள் இருக்க.. இதை மட்டும் செய்யவும்..

Image Source: Freepik

Read Next

Soups for diabetes: எகிறும் சுகர் லெவல் மடமடனு குறைய இந்த சூப்களை எல்லாம் உங்க டயட்ல சேர்த்துக்கோங்க

Disclaimer