Ramadan Fasting Tips: தொடங்கியது ரம்ஜான் நோன்பு… நோன்புக்கு பின் பலவீனமாக உணராமல் இருக்க சில டிப்ஸ்!!

  • SHARE
  • FOLLOW
Ramadan Fasting Tips: தொடங்கியது ரம்ஜான் நோன்பு… நோன்புக்கு பின் பலவீனமாக உணராமல் இருக்க சில டிப்ஸ்!!


Ramadan 2024 fasting begins today: ரம்ஜான் என்றாலே நமது நியாபகத்திற்கு வருவது பாய் வீட்டு பிரியாணி தான். புத்தாடை உடுத்தி சொந்த பந்தங்களுடன் சேர்ந்து இறைவனை தொழுது குடும்பமாக உண்டு மகிழ்வதே இந்த பண்டிகையின் நோக்கம். அந்தவகையில், ரமலான் மாதம் இன்று முதல் ஆரம்பமாகிவிட்டது. இந்தியா மற்றும் ஆசியாவின் பிற நாடுகளில் இன்று பிறை தெரிந்ததை அடுத்து ரம்ஜானுக்கான நோம்பு துவங்கியுள்ளது.

இஸ்லாமியர்களுக்கு இது மிகவும் புனிதமான மாதம். இந்த மாதத்தில் முஸ்லிம்கள் 12-13 மணி நேரம் நோன்பு நோற்பார்கள். இந்த விரத நேரத்தில் தண்ணீர் கூட அருந்த கூடாது என்பது வழக்கம். நீங்களும் நோன்பு இருக்கப் போகிறீர்கள் என்றால், இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் உடலை உண்ணாவிரதத்திற்கு தயார் செய்யலாம். இந்த குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் நோன்புக்கு பின் நாம் சோர்வாக உணர்வதை தவிர்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Fasting Benefits: உண்ணாவிரதத்தால் கல்லீரலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

நோன்புக்கு முன் இந்த விஷயங்களை பின்பற்றவும்

உண்ணாவிரதத்திற்கு முன், உங்கள் உணவுப் பழக்கத்தை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். ஏனென்றால், நோன்பின் போது நீங்கள் சாப்பிடவோ அல்லது ஒரு துளி தண்ணீர் கூட குடிக்க அனுமதிக்கப்படுவதில்லை. இதை நீங்கள் முன்பே செய்ய துவங்குவதால் மூலம், உங்கள் உடல் சமநிலைக்கு வந்து, திடீரென்று பசி எடுப்பதை நிறுத்தும்.

பகலில் தண்ணீர் குடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நீங்கள் முன்கூட்டியே உங்களை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். இதற்கு தண்ணீர் குடிப்பது மட்டுமின்றி, வெள்ளரி, தர்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளையும் சாப்பிடலாம். இது நீரேற்றத்தை பராமரிக்கும் மற்றும் எதிர்காலத்தில் நீங்கள் பலவீனமாக உணர்வதையும் தவிர்க்கும்.

நீங்கள் டீ மற்றும் காபி பிரியராக இருந்தால், அதிலிருந்து சற்று விலகி இருங்கள். ஏனெனில், ஒன்று அது நீரிழப்புக்கு காரணமாகிறது. இரண்டாவதாக, டீ மற்றும் காபி குடிக்காமல் இருந்தால் சிலருக்கு தலைவலி வரும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்தப் பழக்கத்தை முன்னரே கடைப்பிடித்தால், தலைவலியில் இருந்து விடுபடலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Fasting mistakes: கடுமையான விரதத்திற்கு பின் ஃபுல் கட்டு காட்டுவாரா நீங்க? அப்போ இதை படியுங்க!

சமச்சீரான உணவை உட்கொள்ள முயற்சி செய்யுங்கள். வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களை போதுமான அளவு உட்கொள்வதை உறுதிசெய்ய ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் நட்ஸ் விதைகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

நோன்புக்கு முன் போதுமான அளவு தூங்குங்கள். ஏனெனில், தூக்கமின்மை காரணமாக உங்கள் உடல் பலவீனமாகிவிடும். செரிமானம் பாதிக்கப்படலாம் மற்றும் விரதத்தைக் கடைப்பிடிப்பதில் சிரமம் இருக்கலாம்.

Pic Courtesy: Freepik

Read Next

காலை உணவாக இந்த 5 பழங்களை சாப்பிட வேண்டாம்…

Disclaimer

குறிச்சொற்கள்