Worst Foods To Avoid After Fast: உண்ணாவிரதம் (fasting) மத முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இதனால், உடலில் உள்ள கலோரிகள் குறைந்து, உடல் டீடாக்ஸ் செய்யப்படும். அத்துடன், செரிமான அமைப்புக்கும் நன்மை பயக்கும்.
நம்மில் சிலர், நாள் முழுவதும் விரதம் இருந்துவிட்டு மாலை வெளியில் சென்று ஃபுல் கட்டு காட்டுவோம். அப்படி செய்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? விரதத்திற்கு பின் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Warm Water Benefits: தினமும் காலையில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?
விரதம் முடிந்த பிறகு என்னென்ன விஷயங்களைத் தவிர்க்க வேண்டும்?

காரமான உணவுகளை தவிர்க்கவும்
ஒரு நாள் முழுவதும் நீங்கள் எதுவும் சாப்பிடாமல் இருந்தால், விரதம் முடிந்த பிறகு உங்களுக்கு மிகவும் பசியாக இருக்கும். அப்போது நீங்கள் சிறந்த உணவுகளை சாப்பிட வேண்டும். நம்மில் பலர் விரதத்திற்கு பின் காரமான உணவுகளை சாப்பிடுவோம். அது முற்றிலும் தவறானது. ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்த பின், எண்ணெய் மற்றும் காரமான உணவை நீங்கள் சாப்பிட்டால் அதை உங்கள் உடலால் ஜீரணிக்க முடியாது. இதனால் வயிற்றுவலி, வாயு பிரச்சனை போன்றவை ஏற்படும்.
புளிப்பு பழங்களை சாப்பிட வேண்டாம்

விரதம் முடிந்த பிறகு, நம்மில் அலர் லெமன் ஜூஸ் மற்றும் ஆரஞ்சு போன்ற புளிப்பான பலன்களை சாப்பிடுவோம். இவ்வாறு செய்வது அமிலத்தன்மை பிரச்சனையை ஏற்படுத்தும். எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற புளிப்புப் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்று எரிச்சல் ஏற்படும். இதற்கு பதிலாக தர்பூசணி, வெள்ளரி, ஆப்பிள், கொய்யா போன்றவற்றை உட்கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம் : அதிக உப்பு சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
காஃபி மற்றும் டீயை தவிர்க்கவும்

விரதம் முடிந்த பிறகு பெரும்பாலும் நாம் டீ மற்றும் காஃபி குடிப்போம். இன்னும் சிலர் தாகம் தீர்க்க குளிர் பானங்கள் அருந்துவார்கள். ஆனால், இவற்றை பருகுவது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல. ஏனென்றால், வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடிப்பது உங்கள் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் வாயு பிரச்சினை மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சினைகளை சந்திக்கலாம். அதற்கு பதிலாக பிரஷ் ஜூஸ், மோர் அல்லது குளிர்ந்த பால் குடிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Summer Skin Care: கோடையில் சாப்பிட வேண்டிய காய்கறிகள்?
பொரித்த உணவு மற்றும் இனிப்புகள்

விரதத்திற்கு பிறகு, கலோரிகள் நிறைந்த பக்கோடாக்கள், எண்ணெயில் பொரித்த பஜ்ஜி, அல்வா மற்றும் பால்கோவா போன்ற இனிப்புகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது வயிற்றில் வீக்கத்தை ஏற்படுத்துவதுடன், தலைவலி பிரச்சனையும் ஏற்படுத்தும். நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருப்பதாலும், திடீரென கனமான உணவை உட்கொள்வதால், எரிச்சலை உண்டாக்கும் இத்தகைய உணவு செரிமானம் ஆக அதிக நேரம் எடுக்கும்.
Pic Courtesy: Freepik