நாடு முழுவதும் அக்டோபர் 3ம் தேதி தொடங்கிய நவராத்திரி கொண்டாட்டமானது அக்டோர் 12ம் தேதி நிறைவடைகிறது. இந்நாட்களில் இந்து பெண்கள் தங்களது வீடுகளில் கொழு வைத்து, விரதமிருந்து அம்மனை வழிபடுவார்கள்.

இந்த 9 நாள் விரதத்தில் துர்க்கையை 9 வடிவங்களில் ஆராதிப்பார்கள். இந்த உபவாசமானது வெறும் உடல் ரீதியாக மட்டுமின்றி மனம் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் தூய்மைப்படுத்தப்படுவதாக கருதப்படுகிறது.
இந்நாளில் விரதம் இருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்…
தானியங்கள்:
விரத நேரத்தில் பழுப்பு அரிசி, கோதுமை மற்றும் பருப்பு போன்ற தானியங்களை எடுத்துக்கொள்ளக்கூடாது. அதற்குப் பதிலாக கோதுமை போலவே இருக்கக்கூடிய பக்வீட், கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களைப் பயன்படுத்தலாம்.
பதப்படுத்தப்பட்ட, பேக்கேஜ்டு உணவுகள்:
பதப்படுத்தப்பட்ட மற்றும் ப்ரீபாக்ட் உணவுகள் அதிக சர்க்கரை அல்லது ப்ரிஜர்வேடிவ்களுடன் இருக்கும். நவராத்திரி விரதம் தூய்மையானது என்பதால்,இதுபோன்ற உணவுகளை கட்டாயம் சாப்பிடக்கூடாது.
வெங்காயம், பூண்டு:
இந்து பாரம்பரியத்தில் வெங்காயம், பூண்டு விரத நேரத்தில் புறக்கணிக்கப்படுகிறது. உபவாச நேரத்தில் சாத்விக உணவு மட்டுமே சாப்பிட்டார், அதனால் இவற்றை உணவில் முழுமையாக நீக்க வேண்டும்.
டேபுல் சால்ட், எண்ணெய்கள்:
விரத நேரத்தில் ரீபைண்ட் எண்ணெய் வகைகள் மற்றும் டேபுல் சால்ட்டை பயன்படுத்துவதற்குப் பதிலாக, சுத்திகரிக்கப்பட்ட நெய் மற்றும் கல் உப்பை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
அசைவம், முட்டை:
உபவாச நேரத்தில் இறைச்சி, மீன் போன்ற நான் வெஜ் உணவை முழுமையாக தவிர்க்க வேண்டும். முழுக்க, முழுக்க சைவ உணவுகளை மட்டுமே உட்கொள்வது வழக்கமாக உள்ளது.
ஆல்கஹால், காபி:
நவராத்திரி நேரத்தில் ஆல்கஹால், காபி, டீபோன்ற பானியங்களை முழுவதுமாக உட்கொள்ள வேண்டும். இதற்குப் பதிலாக கிரீன் டீ மற்றும் மூலிகை பானங்களைப் பருகலாம்.
வெந்தயம், பூசணி விதைகள்:
சில விதைகள் மற்றும் பருப்பு வகைகளை உண்ணாவிரதத்தின் போது சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது, குறிப்பாக பூசணி விதைகள் மற்றும் வெந்தயம்.
சர்க்கரை:
சாதாரண சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம், தேன் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.