பங்குனி உத்திரம் இந்துக்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. பங்குனி உத்திரத்தின் சிறப்பு என்னவென்றால், பௌர்ணமி மற்றும் உத்திர நட்சத்திரம் ஒன்றாக வருவதாகும். குறிப்பாக முருகன் கோவில்களில் நடக்கும் விழாக்கள் இந்த நாளின் முக்கிய சிறப்பம்சமாகும். இந்த ஆண்டு பங்குனி உத்திரம் மார்ச் 25 வருகிறது.
இந்த நாளில் அதிகாலையில் நீராடி விரத நடைமுறையை பின்பாற்றுவார்கள். பக்தர்கள் ஒரு நாள் கடுமையான விரதம் அனுசரிப்பார்கள். அது முடியாவிட்டால், அவர்கள் விருப்பப்படி தண்ணீர் அல்லது பழங்களை மட்டுமே எடுத்துக் கொள்ளலாம்.

இந்நாளில் பெண்கள் என்னென்ன மாதிரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என பார்க்கலாம்…
முன்கூட்டியே தயாராக இருங்கள்:
விரதம் அல்லது விரதத்தின் நாளில் பயப்படுவதை விட, ஒரு நாள் முன்னதாகவே தயாராக இருங்கள். விரதத்திற்கு முதல் நாள் நிறைய தண்ணீர், பழங்கள் அல்லது பழசாறுகளை பருகி உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளுங்கள். இது விரத நாளுக்குத் தேவையான ஆற்றலை உங்கள் உடலுக்கு வழங்க உதவும். புத்துணர்ச்சியுடன் இருக்க இளநீர் பருகலாம்.
அதிகமாக வேலை செய்யாதீர்கள்:
விரத தினத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ அதிக அளவில் வேலை பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. பங்குனி விரதம் இருக்கும் போது, சிலர் தண்ணீர் கூட பருக மாட்டார்கள் என்பதால், உடல் மிகவும் சோர்வாக இருக்கும். அந்த தருணத்தில் அதிகமாக வேலை செய்வஹ்டு தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம் உள்ளிட்ட உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
பல்துலக்குதல் பசியைக் கட்டுபத்தும்:
விரதத்தின் போது தண்ணீர் அல்லது சாப்பாடு இல்லாமல் இருப்பதால் பசி அதிகரிக்கக்கூடும். இதனைக் கட்டுப்படுத்த பல் துலக்குவது சிறந்த ஹேக்காக அமையும். அதாவது பசி எடுக்கும் போது பல் துலக்கினால் பற்பசையின் சுவை மற்றும் வாயை தண்ணீர் ஊற்றி கொப்பளிப்பதால் நீங்கள் சிறிதளவு புத்துணர்ச்சி பெறலாம்.
மாற்றத்திற்கு தயாராக இருங்கள்:
விரதம் உங்கள் உடலில் பாதிப்பை ஏற்படுத்துவதாக நீங்கள் உணர்ந்தால், சில மாற்றங்களைச் செய்யவது நல்லது. மாலை நேரத்தில் சிறிதளவு ஓய்வெடுத்து, சில சாறு அல்லது பழங்களை உண்ணலாம்.
விரதத்திற்கு முன்பு நினைவில் கொள்ள வேண்டியவை?
- விரதத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக ஒரு கிளாஸ் பழச்சாறு அல்லது பழங்களை சாப்பிடலாம்.
- வறுத்த, எண்ணெய், பதப்படுத்தப்பட்ட மற்றும் சர்க்கரை உணவுகளுடன் நோன்பை முறிப்பதைத் தவிர்க்கவும்.
- காஃபினேட்டட் பானங்கள் வேண்டாம், அதற்கு பதிலாக தண்ணீர் மற்றும் பழச்சாறுகளை பருகவும். இல்லையெல் அமிலத்தன்மை, வீக்கம் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
ImageSource: freepik