Ramadan Fasting: ரமலான் நோன்பில் சர்க்கரை நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவை…

  • SHARE
  • FOLLOW
Ramadan Fasting: ரமலான் நோன்பில் சர்க்கரை நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவை…


Ramadan Fasting Tips For Diabetic Patients: ரமலான் மாதம் இஸ்லாமியர்களுக்கு மிகவும் புனிதமானது. முஸ்லிம்கள் இந்த மாதத்தில் நோன்பு இருப்பார்கள். விடியற்காலையில் இருந்து சூரிய அஸ்தமனம் வரை எந்த உணவும் எடுக்காமல் கடிமையாக நோன்பு இருப்பார்கள். 12 முதல் 14 மணி நேரம் எதையும் சாப்பிடவோ அல்லது குடிக்கவோ மாட்டார்கள்.

இத்தகைய சூழலில் விரதம் இருப்பவர்களில் சில நீரிழிவு நோயாளிகளும் உள்ளனர் . அப்படிப்பட்டவர்கள் நோன்பு இருக்கும் போது, எந்த பிரச்னையும் ஏற்படாமல் இருக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அதை இங்கே காண்போம்.

இதையும் படிங்க: Fasting mistakes: கடுமையான விரதத்திற்கு பின் ஃபுல் கட்டு காட்டுவாரா நீங்க? அப்போ இதை படியுங்க!

ரமலான் நோன்பில் சர்க்கரை நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவை…

  • சர்க்கரை நோய் உள்ளவர்கள் உண்ணாவிரதம் இருந்தால், அவர்களின் உடலில் குளுக்கோஸ் அளவு ஏறி இறங்கும். குறிப்பாக இப்தாருக்குப் பிறகு குளுக்கோஸ் மிக வேகமாகவும் அதிகமாகவும் வாய்ப்பு இருக்கிறது.
  • உண்ணாவிரதம் இருப்பவர்கள் தங்கள் உணவை முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • நீரிழிவு நோயாளிகளின் உண்ணாவிரதத்தால் இரத்த சர்க்கரை அளவு பாதிக்கப்படுகிறது. எனவே, ஒரு நாளைக்கு இரண்டு முறை காலையிலும் மாலையிலும் இரத்த சர்க்கரை பரிசோதனை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
  • இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால், 'ஹைப்பர் கிளைசீமியா' பிரச்னை ஏற்படும் என எச்சரிக்கப்படுகிறது.
  • உண்ணாவிரதம் இருக்கும் நீரிழிவு நோயாளிகள் செஹ்ரி (காலை உணவு) மற்றும் இப்தார் (நோன்பை முறிப்பதற்கான உணவு) ஆகியவற்றின் போது சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும்.
  • நாள் முழுவதும் உடலுக்கு ஆற்றலை வழங்கும் கார்போஹைட்ரேட் மற்றும் லீன் புரோட்டீன்களைக் கொண்ட உணவை உண்ண பரிந்துரைக்கப்படுகிறது.
  • பருப்பு வகைகள், தண்ணீர் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ளுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
  • வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நீர்ச்சத்து குறைவைத் தவிர்க்க, செஹ்ரி மற்றும் இப்தாரின் போது அதிக தண்ணீர் எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.
  • எண்ணெயில் பொரித்த பூரி, சமோசா, இறைச்சி போன்றவற்றை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவற்றுக்குப் பதிலாக வேகவைத்துச் சாப்பிட வேண்டும் என்பார்கள். கோதுமையால் செய்யப்பட்ட ரொட்டியையும் சாப்பிடலாம்.
  • நீரிழிவு நோயாளிகள் குறைந்த கலோரி உணவை உண்ண வேண்டும்.
    இஃப்தாரின் போது அதிகமாக சாப்பிடக்கூடாது. சாப்பிட்ட உடனேயே தூங்க வேண்டாம்.
  • உண்ணாவிரதத்தின் போது சோம்பல் போன்ற பிற உடல்நலப் பிரச்னைகளை நீங்கள் சந்தித்தால், நீங்கள் நிச்சயமாக உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த முன்னெச்சரிக்கைகளை கடைபிடிப்பதன் மூலம் சர்க்கரை நோய் உள்ளவர்கள் புனித ரமலான் மாதத்தில் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

Image source: Freepik

Read Next

சர்க்கரை அளவை சட்டென கட்டுப்படுத்த… இதை மோரில் கலந்து குடிங்க!

Disclaimer