Cholesterol Lower Drinks: காலை எழுந்ததும் இதெல்லாம் குடிச்சா கொலஸ்ட்ரால் டக்குனு குறைஞ்சிடும்

  • SHARE
  • FOLLOW
Cholesterol Lower Drinks: காலை எழுந்ததும் இதெல்லாம் குடிச்சா கொலஸ்ட்ரால் டக்குனு குறைஞ்சிடும்


How To Reduce Cholesterol Naturally: இதயம் மற்றும் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் நல்ல கொழுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. நம் உடலில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் வகைகள் உள்ளன. அதில் ஒன்று குறைந்த அடர்த்தி கொழுப்பு புரதம் மற்றும் உயர் அடர்த்தி கொழுப்பு புரதம். கொலஸ்ட்ரால் உடலில் வைட்டமின் டி மற்றும் ஹார்மோன் உற்பத்திக்கு உதவக்கூடிய மெழுகுப் பொருளாகும்.

ஒருவரின் உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பின், அவை இதயநோய், பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய் அபாயங்களை அதிகரிக்கலாம். எனவே உடல் ஆரோக்கியத்திற்கு சரியான அளவைப் பராமரிப்பது மிகவும் அவசியமாகும். அதன் படி, உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க காலை நேரத்தில் சில சத்தான மற்றும் ஆரோக்கியமான பானங்களை அருந்தலாம். இதில் உடலில் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவும் பானங்கள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Banana Side Effects: வாழைப்பழம் நல்லது தான்… ஆனால் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

கொலஸ்ட்ரால் அளவு குறைய காலையில் குடிக்க வேண்டிய பானங்கள்

உடலில் தேங்கியிருக்கும் அதிக அளவிலான கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க காலை நேரத்தில் குடிக்க வேண்டிய பானங்களைக் காணலாம்.

ஓட்ஸ் ஸ்மூத்திகள்

உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நலன்களைத் தருவதில் ஓட்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. ஓட்ஸ் எடுத்துக் கொள்வது உடல் எடையைக் குறைப்பதுடன், இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இத்துடன், நாள்பட்ட நோய்களை உருவாக்கும் வாய்ப்பைக் குறைக்கிறது. இதற்கு ஓட்ஸில் உள்ள புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்துக்கள் போன்றவையே காரணமாகும். இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், கெட்ட கொழுப்பு அல்லது குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்புப் புரதத்தைக் குறைக்க உதவுகிறது.

கோகோ பானங்கள்

கோகோ பானங்களில் அதிகளவு ஃபிளவனோல்கள் மற்றும் இன்னும் பிற தாவர கூறுகள் நிறைந்துள்ளன. இது உடல் ஆரோக்கியத்திற்கு பெருமளவு உதவுகிறது. கோகோ பானங்களில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளான ஃபிளவனோல்கள் அதிக கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

சோயா பால்

இதில் பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் குறைந்த அளவிலான கலோரிகள் நிறைந்துள்ளன. இதனை வழக்கமாக எடுத்துக் கொள்வது உடல் எடையைக் கட்டுப்படுத்தவும், வீக்கத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. மேலும் அதிக கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Tips: உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் புதினா டீ! இப்படி பண்ணுங்க..

தக்காளி சாறு

இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இந்த சாற்றில் நிறைந்துள்ள லைகோபீன் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும் இதில் கொழுப்பைக் கரைக்க உதவும் நியாசின், நார்ச்சத்துக்கள் போன்றவையும் அதிகம் உள்ளது.

கிரீன் டீ

உடலில் தீங்கு விளைவிக்கும் கொழுப்பின் அளவைக் குறைக்க கிரீன் டீ பெரிதும் உதவுகிறது. இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கேடசின்கள் உடல் எடையைக் கட்டுப்படுத்தவும், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

இந்த பானங்களை காலை நேரத்தில் அருந்துவதன் மூலம் உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Black Rice Benefits: இது தெரிஞ்சா வெள்ளை அரிசிக்கு பதிலா கருப்பு அரிசியை தான் சாப்பிடுவீங்க

Image Source: Freepik

Read Next

Rambutan Fruit: ஷாக் ஆகிடுவீங்க… ரம்புட்டான் பழத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்காம்!

Disclaimer