How To Make Kollu Dosa: இன்று பெரும்பாலான மக்கள் மீண்டும் பழமையை நோக்கி நகர்கிறார்கள். குறிப்பாக உணவு பழக்கத்தில் ஆரோக்கியத்தை நோக்கி நகர்கிறார்கள். காலை முதல் இரவு வரை, திட்டமிட்டு ஆரோக்கியமான உணவுகளை பின்பற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் உடலுக்கு பல ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் கொள்ளை கொண்டு தோசை எப்படி செய்யலாம் என்று இங்கே காண்போம். காலை உணவு செய்ய யோசிக்கும் நீங்கள், இதை செய்து பாருங்கள்.
முக்கிய கட்டுரைகள்
கொள்ளு தோசை ரெசிபி (Kollu Dosa Recipe)
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 கப்
கொள்ளு - 1/2 கப்
உளுந்து - 1/4 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
அவல் - 1/4 கப்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
இதையும் படிங்க: எறும்பு போல சுறுசுறுப்பாக இருக்க இதை சாப்பிட்டாலே போதும்.!
கொள்ளு தோசை செய்முறை
* பெரிய பாத்திரத்தில் பச்சரிசி, கொள்ளு, உளுந்து மற்றும் வெந்தயத்தை சேர்த்து, அவற்றை நன்கு கழுவு எடுத்துக்கொள்ளவும்.
* இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 5 மணி நேரம் ஊற விடவும்.
* மற்றொரு பாத்திரத்தில் அவலை ஊற வைக்கவும். இதனை மாவு தயார் செய்வதற்கும் 30 மணி நேரம் முன் ஊற வைக்க வேண்டும்.
* இந்த பொருட்கள் நன்கு ஊறிய பின் இதனை மிக்ஸி அல்லது கிரைண்டரில் போட்டு மென்மையான பதம் வரும் வரை அரைக்கவும்.
* அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
* இரவு முழுவதும் இதனை அப்படியே விடவும்.
* காலையில் மாவு நன்கு புளித்திருக்கும். அப்போது அதை மீண்டும் நன்கு கலக்கவும்.
* இப்போது தோசை கல்லை சூடு படுத்தி, அதில் இந்த மாவை ஊற்றி பரப்பிக்கொள்ளவும்.
* நெய் அல்லது எண்ணெயை இதில் ஊற்றவும்.
* இரு பக்கமும் தோசை வெந்ததும், அடுப்பை நிறுத்தவும்.
* சுடசுட ருசியான மற்றும் ஆரோக்கியமான கொள்ளு தோசை ரெடி ஆகிவிடும்.