Horse Gram Vada Recipe: இன்றைய காலகட்டத்தில் பலரும் மோசமான உணவு முறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்றவற்றால் உடல் பருமன் அதிகமாகி பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதனால் உடல் எடையைக் குறைக்க பல்வேறு வகையான உணவுமுறைகள் மற்றும் உடற்பயிற்சிகளை செய்து வருகின்றனர். ஆனால், இந்த சூழ்நிலையில் பலரும் உணவு முறையைக் கையாள்வதில் தவறி விடுகின்றனர்.
உடல் எடையைக் குறைக்க முயற்சித்தாலும், சில தின்பண்டங்களை விரும்பி உண்ணுவது உடல் எடை குறைவதைத் தாமதப்படுத்துகிறது. இன்று பலரும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணெய் பலகாரங்கள் என பல்வேறு உணவுப் பொருள்களின் மீது அதிக ஈடுபாடுடன் இருக்கின்றனர். இது உடல் எடை குறைப்பதில் பாதகமான விளைவுகளையே தருகிறது. இதனைத் தவிர்க்க எடை குறைய உதவும் பொருள்களில் சுவையான ரெசிபியை செய்து சாப்பிடலாம். இது எடையைக் குறைப்பதாகவும் இருக்கும், அதே சமயம் சுவையான ரெசிபியைச் சாப்பிட்டது போலவும் இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Jamun for Weight Loss: உடல் எடையை சட்டுனு வேகமாக குறைக்க நாவல்பழத்தை சாப்பிடுங்க
கொள்ளு வடை
உடல் எடையைக் குறைக்கும் பல்வேறு உணவுப் பொருள்களில் கொள்ளு பருப்பும் அடங்கும். கொள்ளு பருப்பு கேள்விப்பட்டிருப்போம். வேறு எந்த சுவையான ரெசிபியை கொள்ளுவை வைத்து செய்ய முடியும் என்று தானே யோசிக்கிறீர்கள். கொள்ளுவை வைத்து சுவையான மொறு மொறு ரெசிபியான கொள்ளு வடை தயார் செய்யலாம். இந்த வடை உடல் எடையை குறைக்கவும் உதவும். எனவே ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் சாய்ஸ்க்கு இந்த வடையை எடுத்துக் கொள்ளலாம்.
கொள்ளு வடை தயார் செய்யும் முறை
தேவையானவை
- கொள்ளு – ஒரு கப் (நன்கு சுத்தம் செய்து 8 மணி நேரம் ஊற வைக்கப்பட்டது)
- பூண்டு – 10 பல்
- மிளகு – ஒரு ஸ்பூன்
- சோம்பு – ஒரு ஸ்பூன்
- வர மிளகாய் – 4
- கறிவேப்பிலை – 2 கொத்து
- கரம் மசாலா – ஒரு ஸ்பூன்
- மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
- கடலை மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்
- பச்சரிசி மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்
- சின்ன வெங்காயம் – 2 கப் (பொடியாக நறுக்கியது)
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
இந்த பதிவும் உதவலாம்: Weight Loss: சட்டுன்னு உடல் எடையை குறைக்கணுமா? அப்போ கேரட்டை இப்படி சாப்பிடுங்க!
செய்முறை
- மிக்ஸி ஜாரில் பூண்டு மற்றும் வர மிளகாய் இரண்டையும் சேர்த்து முதலில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு ஊறவைத்த கொள்ளு, மிளகு, சோம்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு என அனைத்தையும் சேர்த்து, சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். அரைக்கும் போது கொர கொரப்பாக கடலை பருப்பு வடைக்கு அரைக்கும் பக்குவத்தில் அரைக்க வேண்டும்.
- அதன் பிறகு, கடாய் ஒன்றில் எண்ணெயைச் சேர்த்து நன்கு சூடான பிறகு, கலந்து வைத்த கலவையை வடையாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.
- இந்த வடை அதிகம் எண்ணெய் குடிக்காது. எனவே இந்த வடை உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிரது.
- உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் சுவையான உணவைச் சாப்பிட முடியாமல் அவதிப்படுவர். இது போன்ற சிம்பிளான உடல் எடையைக் குறைக்கும் பொருளிலிருந்து தயார் செய்யப்படும் ரெசிபி சுவையுடன் கூடிய எடை மேலாண்மை நன்மைகளையும் தருகிறது.

கொள்ளு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
- உடல் பருமன் அதிகமாக இருப்பவர்களுக்கு கொள்ளு சிறந்த தேர்வாகும். ஏனெனில், இவை உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.
- கொள்ளுவில் உள்ள எண்ணற்ற மருத்துவ குணங்களால் ஆயுர்வேதத்தில் இது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
- கொள்ளு உட்கொள்ளல் உடலுக்கு சூட்டைக் கொடுக்கக் கூடியது என்பதால் சளிக்கு சிறந்த மருந்தாகிறது.
- கொள்ளுவில் உள்ள பாலிஃபினால்கள், ஃப்ளேவனாய்ட்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவை மழைக்காலத்தில் ஏற்படும் சளி மற்றும் இருமல் தொல்லைகளில் இருந்து நிவாரணம் தருகிறது.
- மேலும் மூலம், மஞ்சள் காமாலை உள்ளிட்ட வியாதிகளுக்கு கொள்ளு மருந்தாகச் செயல்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Dance for Weight Loss: டான்ஸ் ஆடினால் உடல் எடை குறையுமாம்! எப்படி தெரியுமா?
Image Source: Freepik