$
Health Benefits Of Curry Leaves Juice in empty stomach: உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை ஆரோக்கியமான, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியமாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் நம் சமையல் அறையில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொதுவான உணவுப்பொருளாக கறிவேப்பிலை அமைகிறது. கறிவேப்பிலை மருத்துவ குணங்கள் கொண்ட உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும் உணவுப்பொருளாகும். நம் அன்றாட உணவில் கறிவேப்பிலை சேர்ப்பதன் மூலம் உடல் எடை குறைப்பு முதல் கண் ஆரோக்கியம் உட்பட ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.
கறிவேப்பிலையின் ஊட்டச்சத்துக்கள்
கறிவேப்பிலையில் வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி போன்ற வைட்டமின்களும், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு போன்ற தாதுக்களும் நிறைந்து காணப்படுகிறது. மேலும் கறிவேப்பிலையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. இது போன்ற ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கறிவேப்பிலை வழங்குகிறது. மேலும் இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு விளைவுகள் சாத்தியமான மருத்துவ குணங்களுக்காக நன்கு அறியப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Curry Leaves Juice: முடி உதிர்வு முதல் எடை குறைப்பு வரை… அனைத்து பிரச்சனைக்கும் இந்த ஒரு ஜூஸ் போதும்!!
கறிவேப்பிலை சாறு தயார் செய்வது எப்படி?
கறிவேப்பிலையை நேரடியாக அப்படியே உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். எனினும், இதை சாறாக தயாரித்து அருந்தலாம். இதில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.
தேவையானவை
- புதிய கறிவேப்பிலை - 30-40
- தண்ணீர் - 3 கப்
- உலர்ந்த புதினா இலைகள் - 10-15
- இலவங்கப்பட்டை தூள் - 2 டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு - 3 டீஸ்பூன்
- தேன் - 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை சாறு தயாரிக்கும் முறை
- முதலில் அடி கனமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு அதில் கறிவேப்பிலை, புதினா இலைகள் மற்றும் இலவங்கப்பட்டை தூள் போன்றவற்றைச் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
- அதன் பின், இந்தக் கலவையிலிருந்து கடினமான துகள்கள் மற்றும் அசுத்தங்களை நீக்குவதற்கு நெருப்பை அணைத்து, முழு கலவையையும் வடிகட்டலாம்.
- அதில் ஒரு துளி எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்க்க வேண்டும்.
- பிறகு இந்த சாற்றை ஒரு டம்ளரில் ஊற்றி, சூடாக இருக்கும்போதே அருந்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Curry Leaves Water Benefits: தினமும் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை தண்ணீர் குடிச்சா இந்த பிரச்சனை எல்லாம் வராதாம்
வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாறு தரும் நன்மைகள்
தினமும் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாறு அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது.
எடை குறைவதற்கு
கறிவேப்பிலையானது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் பயோஆக்டிவ் கலவைகள் நிறைந்துள்ளது. இவை வளர்சிதை மாற்ற விகிதத்தை சீராக வைக்க உதவுகிறது. இதன் மூலம் உடலில் கொழுப்பு சேர்வதைத் தவிர்க்கலாம். இவை உடல் எடை குறைவதற்கு உதவுகிறது.
அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள்
வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாறு அருந்துவதன் மூலம் அதில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவை உடலை உற்சாகப்படுத்துகிறது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி, நோய்களை பிடிப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. மேலும் இது புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களுக்குக் காரணமாகும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
செரிமானத்தை மேம்படுத்த
கறிவேப்பிலை சாறு அருந்துவது ஒரு லேசான மலமிளக்கியாக செயல்படுகிறது. இது செரிமான அமைப்பை மெதுவாக தூண்டுவதன் மூலம் குடல் இயக்கங்களை ஊக்குவிக்கிறது. மேலும் இதன் இயற்கையான பண்புகள் குடலில் கடுமையான அல்லது திடீர் விளைவுகளை ஏற்படுத்தாமல் மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது.

மன அழுத்தத்தைக் குறைக்க
கறிவேப்பிலை ஒரு இனிமையான மூலிகை வாசனையைக் கொண்டுள்ளது. இந்த வாசனையானது நம் உடலில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது தசைகள் மற்றும் நரம்புகள் தளர்வடையச் செய்வதுடன் மன அழுத்தத்தைப் போக்கும் அமைதி உணர்வை ஊக்குவிக்கிறது. இந்த டிடாக்ஸ் பானத்துடன் நாளைத் தொடங்குவது நாள் முழுவதும் அமைதியாகவும் புத்துணர்ச்சியுடனும் வைக்க உதவுகிறது.
கண் ஆரோக்கியத்திற்கு
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இவை இரட்டைப் பார்வை, மாகுலர் சிதைவு, கண் புரை உள்ளிட்ட கண் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது. மேலும் கண்களை கூர்மையாகவும் கண் பார்வைத் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.
வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாறு அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு இது போன்ற நன்மைகளைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Curry Leaves Benefits: இந்த நாள்பட்ட நோய்களை எல்லாம் தவிர்க்க தினமும் 5 கறிவேப்பிலை சாப்பிடுங்க
Image Source: Freepik