Expert

Fried Chicken Biryani: கமகமக்கும் ஃப்ரைட் சிக்கன் பிரியாணி… எப்படி செய்யணும் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Fried Chicken Biryani: கமகமக்கும் ஃப்ரைட் சிக்கன் பிரியாணி… எப்படி செய்யணும் தெரியுமா?


How To Make Pepper Roast Biryani Recipe: நம்மில் பலருக்கு பிரியாணி என்ற பெயரை கேட்டதும் நாவில் எச்சில் ஊறும். ஏனென்றால், மக்களில் 90 சதவீதம் பிரியாணி பிரியர்கள் என்று கூறினால் அதில் எந்த சந்தேகமும் இல்லை. எப்பவும் மட்டன், சிக்கன், மீன் என ஒரே மாதிரியான பிரியாணி செய்து சலித்து போய்விட்டதா?

அப்போ இந்த முறை சிக்கனை வைத்து சுவையான ஹோட்டல் ஸ்டைலில் ஃப்ரைட் சிக்கன் பிரியாணி செய்து கொடுங்கள். வீட்டில் உள்ளவர்கள் உங்க சமையல் திறமையை பார்த்து அசந்து போய்விடுவார்கள். வாருங்கள், குக்கரில் ஃப்ரைட் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Gilli Chicken Biryani: விடிவி கணேஷ் இப்படி தான் கில்லி சிக்கன் பிரியாணி செஞ்சாரு..

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 1/2 கிலோ
பாஸ்மதி அரிசி - 2 கப்
பட்டை, கிராம்பு, ஏலக்காய்
அன்னாசிப்பூ, பிரியாணி இலை
சோம்பு - 1 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு - 1 பழம்
வெங்காயம் - 10 மெல்லியதாக நறுக்கியது
தக்காளி - 8 நறுக்கியது (சிறியது)
இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
மஞ்சள் தூள் - 1 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 3 மேசைக்கரண்டி
தனியா தூள் - 2 மேசைக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - சிறிது
நெய் - 3 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 07
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலை நறுக்கியது - சிறிது

ஃப்ரைட் சிக்கன் பிரியாணி செய்முறை:

  • சிக்கனில் எலுமிச்சை பழசாறு, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • பின்பு தண்ணீர் சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊறவிடவும்.
  • கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி பருப்பு சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

இந்த பதிவும் உதவலாம் : Mushroom Donne Biryani: பெங்களூர் ஸ்பெஷல் காளான் தொன்னை பிரியாணி எப்படி செய்யணும் தெரியுமா?

  • அடுத்து அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் ஊறவைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறவும்.
  • சிக்கன் நிறம் மாறியதும் அதில் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 10 நிமிடம் வேகவிடவும்.
  • பின்பு சிக்கன் துண்டுகளை மற்றும் வேகவைத்த தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும்.
  • அதே கடாயில் எண்ணெய் ஊற்றி வேகவைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும் .
  • பின்பு அதே கடாயில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வதக்கவும் .
  • அடுத்து கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  • பிறகு தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி மூடின் வைத்து 3 நிமிடம் வேகவிடவும்.
  • அடுத்து வேகவைத்த சிக்கன் தண்ணீரை ஊற்றி அதில் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகு தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

இந்த பதிவும் உதவலாம் : Ulavacharu Chicken Biryani: சுஜிதா செய்து அசத்திய உலவச்சாறு சிக்கன் பிரியாணி ரெசிபி..

  • பின்பு பொரித்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கலந்து மூடி வைத்து மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிடவும்.
  • நறுக்கிய கொத்தமல்லி மற்றும் பொரித்த வெங்காயம் சேர்த்துகலந்து இறக்கி வைக்கவும்.
  • மற்றோரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரியாணி இலை, சோம்பு சேர்த்து கலந்துவிடவும்.
  • அடுத்து தண்ணீர், உப்பு சேர்த்து தண்ணீர் கொதித்ததும் ஊறவைத்த அரிசியை சேர்த்து கலந்து மூடி வேகவிடவும்.
  • கடைசியாக நெய் ஊற்றி தனியாக எடுத்து வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் பொரித்த வெங்காயம், வறுத்த முந்திரி பருப்பு அதின் மேல் வேகவைத்த சாதத்தை வைத்து அழுத்தி அதை ஒரு தட்டில் கவிழ்த்து பிறகு சிறிதளவு சிக்கன் மசாலாவை வைத்து சூடாக பரிமாறவும். ப்ரைட் சிக்கன் பிரியாணி தயார்!

இந்த பதிவும் உதவலாம் : Mushroom Biryani Recipe: செஃப் ஆஃப் தி வீக் வாங்கிய திவ்யா துரைசாமி.. கை கொடுத்த மஷ்ரூம் பிரியாணி..

பிரியாணி சாப்பிடுவதன் நன்மைகள்:

  • இது உங்கள் உடலுக்கு ஊட்டமளிக்கும் ஊட்டச்சத்துக்களின் கலவையுடன் கூடிய எளிதான மற்றும் சுவையான உணவாகும்.
  • மஞ்சள், பூண்டு, இஞ்சி, இலவங்கப்பட்டை, கிராம்பு போன்ற பல்வேறு மசாலாப் பொருட்கள் மற்றும் பிரியாணியில் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான பொருட்களால் மேற்கத்திய ஆராய்ச்சியாளர்களை கவர்ந்த பிரியாணி. இது அழற்சி எதிர்ப்பு பண்புகள், புற்றுநோய் எதிர்ப்பு, இரத்த சர்க்கரையை குறைக்கும் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • பிரியாணி கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களில் சமநிலையை வழங்குகிறது, இது ஆரோக்கியமான நபருக்கு ஏற்றது.

இந்த பதிவும் உதவலாம் : Kongunadu Vellai Chicken Biryani: அருமையான கொங்குநாடு வெள்ள சிக்கன் பிரியாணி.! இப்படி செஞ்சி பாருங்க..

  • ஒரு வெஜிடபிள் பிரியாணி, போதுமான அளவு காய்கறிகளுடன் சமைத்தால், சரியான அளவு நார்ச்சத்து கிடைக்கும். இது உங்கள் குடல் இயக்கத்திற்கு அவசியம் மற்றும் உங்கள் எடையை நிர்வகிக்க உதவுகிறது.
  • அசைவ பிரியாணி என்பது உங்கள் தினசரி வைட்டமின் பி 12 இன் இயற்கையான மூலமாகும், இது பொதுவாக சைவ உணவு உண்பவர்கள் மற்றும் அசைவ உணவு உண்பவர்களுக்கு குறைவாகவே உள்ளது.
  • கொழுப்புச் சத்து அதிகம் உள்ளதால், ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளை மட்டுப்படுத்துவதால், இது உங்களுக்கு முழுமை மற்றும் திருப்தி உணர்வைத் தருகிறது.

Pic Courtesy: Freepik

Read Next

கிரீன் டீ ஓகே.. அது என்ன கிரீன் காபி.. இது புதுசா இருக்கு சார்..

Disclaimer