How to make curry leaves pepper chicken: ஞாயிற்றுக்கிழமை என்றாலே அனைத்து வீடுகளிலும் சிக்கன் கிரேவி வாசனை மூக்கை துளைக்கும். சிக்கன் என்றாலே நம்மில் பலரது நாவில் எச்சில் ஊரும். ஏனென்றால், உலகில் உள்ள மூன்றில் ஒருவர் சிக்கன் பிரியர். நாம் பெரும்பாலும் சிக்கனை வைத்து சிக்கன் கிரேவி, சிக்கன் பிரியாணி, சிக்கன் வறுவல் என பல ஒரே ரெசிபியை அடிக்கடி செய்வோம்.
சிக்கனில் மிளகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து காரசாரமாக ஒரு மிளகு சிக்கன் செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும். இந்த முறை சிக்கனை இப்படி செய்து பாருங்கள். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் சமையலை கொண்டாடுவார்கள். ஒரு சூப்பரான கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : CWC Sujitha Recipe: சுஜிதா செய்த முட்டை ஆப்பம் ஆட்டு கால் பாயா ரெசிபி.!
தேவையான பொருட்கள்:
இஞ்சி - 1 இன்ச்.
பூண்டு - 20 பல்.
பச்சை மிளகாய் - 2.
மிளகு - 1 ஸ்பூன்.
சீரகம் - 1 ஸ்பூன்.
சோம்பு - 1 ஸ்பூன்.
கறிவேப்பிலை - 5 கொத்து.
சின்ன வெங்காயம் - 2 கைப்பிடியளவு.
எலும்பு இல்லாத சிக்கன் - 1/2 கிலோ.
மிளகாய்ப் பொடி - 1 ஸ்பூன்.
மஞ்சள் பொடி - 1 ஸ்பூன்.
உப்பு - தேவையான அளவு.
எலுமிச்சை சாறு - அரைப்பழம்.
நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்.
பட்டை - 1.
கிராம்பு - 2.
ஸ்டார் சோம்பு - 1
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பச்சை மிளகாய் - 2
சின்ன வெங்காயம் – கைப்பிடியளவு (தாளிக்க)
தக்காளி - 2 (நறுக்கியது).
மல்லித்தழை - 1 கைப்பிடியளவு.
இந்த பதிவும் உதவலாம் : Raw Mango Pickle: மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் பச்சை மாங்காய் ஊறுகாய் ரெசிபி!
செய்முறை:
முதலில், சிக்கனை மேரியனேட் செய்யவும். ஒரு பாத்திரத்தல் சுத்தம் செய்த சிக்கனை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில், மிளகாய்ப்பொடி, மஞ்சள் பொடி, உப்பு, எலுமிச்சை பழச்சாறு, அரை மசாலா விழுது என அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
இப்போது, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். கடைசியாக சின்ன வெங்காயத்தை மட்டும் தனியாக கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். சின்ன வெங்காயம் மசியக்கூடாது.
இந்த மசாலாவை அம்மியில் அரைக்கும்போது, முதலில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை வைத்து நன்றாக அரைக்கவேண்டும். அடுத்து மிளகு, சீரகம், சோம்பை வைத்து அரைத்துக்கொள்ளவேண்டும்.
இந்த பதிவும் உதவலாம் : CWC Irfan Recipe: MSG இல்லாமல் ரோட்டு கடை ஸ்டைல் Fried Rice செய்யனுமா.! இர்ஃபான் ரெசிபியை ட்ரை பண்ணவும்!
கறிவேப்பிலையை வைத்து அரைத்துவிட்டு, சின்ன வெங்காயத்தை கடைசியாக சேர்த்து ஒன்றிரண்டாக தட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்.
தலைப்புக்கு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் பட்டை, கிராம்பு, ஸ்டார் சோம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர், அதில் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும். அடுத்து தக்காளி சேர்த்து நன்றாக மசிய வதக்கிய பின், மேரியனேட் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து, போதியளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கினால், சுவையான கோழி, மிளகு வறுவல் தயார்.
இந்த பதிவும் உதவலாம் : CWC 5 Special: மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ப்ரான் ரெசிபி! இதுல இருக்க நன்மைகள் என்னென்ன தெரியுமா?
இதை சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை உள்ளிட்ட டிபஃன் வகைகளுக்கும் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். ஒருமுறை இதை ருசித்துவிட்டால் அடிக்கடி செய்து சாப்பிடுவீர்கள்.
Pic Courtesy: Freepik