Tea Addiction: டீ குடிக்கும் பழக்கத்தை கைவிட நினைப்பவரா நீங்க? இதை செய்யுங்க!

  • SHARE
  • FOLLOW
Tea Addiction: டீ குடிக்கும் பழக்கத்தை கைவிட நினைப்பவரா நீங்க? இதை செய்யுங்க!

உணவு உண்ணாமல் பசியுடன் இருந்தாலும் டீ குடித்தே அந்த பசியை போக்கும் பலர் உள்ளனர். இப்படி அளவுக்கு அதிகமாக டீ குடிப்பதால் பல தீமைகள் ஏற்படும். எனவே, தேநீர் பழக்கத்தை கட்டுக்குள் வைக்க வேண்டியது மிகவும் அவசியம். நீங்களும் தேநீர் பழக்கத்தை குறைக்க விரும்பினால், உங்களுக்கான சில விஷயங்களை நாங்க உங்களுக்கு கூறுகிறோம். இவை அளவுக்கு அதிகமாக தேநீர் குடிக்கும் பழக்கத்தில் இருந்து உங்களை விடுவிக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : Almonds For Eyesight: உங்க கண்பார்வை பலவீனமா இருக்கா? பார்வையை மேம்படுத்த பாதாமை இப்படி சாப்பிடுங்க!

அளவுக்கு அதிகமாக டீ குடிப்பதை நிறுத்துவது எப்படி?

அதிக அளவில் டீ குடிப்பது - Avoid Wrong Quantity of Tea

நம்மில் பலர் ஒரு பெரிய கப் நிறைய டீயை ஊற்றி நீண்ட நீரம் அதை உறுஞ்சி உறுஞ்சி குடிப்போம். இப்படி செய்வது மிகவும் தவறு. இது மீண்டும் மீண்டும் காஃபின் உட்கொள்ளும் பழக்கத்திற்கு வழிவகுக்கும். இந்நிலையில், தேநீர் அல்லது காஃபி போன்ற காஃபின்களை சிறிய அளவில் உட்கொள்ள முயற்சிக்கவும்.

நீண்ட நேரம் பசியுடன் இருப்பது - Don't Starve

பலர் வேலை பளுவால் நீண்ட நேரம் பசியுடன், டீயை மட்டும் குடித்து கொண்டு வேலை செய்வார்கள். இப்படி அடிக்கடி செய்வது நம்மை டீ பழக்கத்திற்கு அடிமையாக்கும். டீ பழக்கத்திற்கு அடிமையாவதை குறைக்க வேண்டும் என்றால், முதலில் காலை உணவை தவறாமல் சாப்பிடுங்கள். இதற்குப் பிறகு தேநீர் அருந்தவும். மேலும், நீங்கள் டீயை ஒரு சிறிய கப்பில் அருந்தவும்.

இந்த பதிவும் உதவலாம் : கேரட்டின் முழு ஆரோக்கியத்தையும் பெற… இப்படி சாப்பிட்டு பாருங்க!

டீயை மீண்டும் மீண்டும் சூடு செய்து குடிப்பது - Avoid Boiling Tea Twice

நம்மில் பலர் மொத்தமாக டீயை தயார் செய்து வைத்து விட்டு, அடிக்கடி அதை சூடாக்கி குடிப்போம். இப்படி செய்வது, உங்கள் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும். டீயை மீண்டும் மீண்டு சூடாக்கி குடிக்கும் போது விஷமாக மாறும். இப்படி செய்யும் போது, அதில் உள்ள காஃபின் அளவு இன்னும் அதிகமாகும், இது உங்கள் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : அறுவை சிகிச்சைக்கு பின் இதை சாப்பிடுங்க! வடு காணாமல் போகும்!

டீக்கு பதில் ஜூஸ் குடியுங்கள் - Try Healthy Drinks Instead of Tea

நீங்கள் டிக்கு அடிமையாக வேண்டாம் என்று நினைத்தால், எப்போதெல்லாம் டீ குடிக்க தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் முதலில் பால் டீக்கு பதிலாக க்ரீன் டீ அல்லது வேறு ஹெர்பல் டீயை குடியுங்கள். இல்லையெனில், ஜூஸ் குடிக்கவும். இதனால், டீ குடிக்கும் பழக்கத்தை பெருமளவு கட்டுப்படுத்தலாம்.

Pic Courtesy: Freepik

Read Next

மூட்டு வலி முதல் இதய ஆரோக்கியம் வரை.. குளிர்காலத்தில் மீன் எண்ணெய் தரும் அற்புத நன்மைகள் இதோ.!

Disclaimer

குறிச்சொற்கள்