Cook With Comali Irfan Special Recipe Of Veg Manchurian Balls: விஜய் டிவியில் இன்று பலரும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்கள் தங்கள் சமையல் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் புது புது ரெசிபிகளைச் செய்து வருகின்றனர். இதை மக்களும் தங்கள் வீடுகளில் செய்து பார்த்து அந்த ரெசிபியின் சுவையை அனுபவிக்க தவறுவதில்லை.
அந்த வகையில் யூடியூபர் இர்ஃபான் அவர்கள் செய்து அசத்திய ரெசிபியான வெஜ் மஞ்சூரியன் பால்ஸ் மக்களிடையே பிரபலமாக பேசி வரும் ரெசிபி ஆகும். இது வெஜ் பிரியர்களுக்கு ஏற்ற ருசி மற்றும் சுவையுடன் கூடிய ரெசிபி ஆகும். இதனை எளிமையாக வீட்டிலேயே தயார் செய்யலாம். இதில் இர்ஃபானின் வெஜ் மஞ்சூரியன் பால்ஸ் தயாரிக்கும் முறை குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Cauliflower Bajji Recipe: உங்க குழந்தைக்கு காலிஃபிளவர் பஜ்ஜி இப்படி செஞ்சி கொடுங்க!
வெஜ் மஞ்சூரியன் பால்ஸ் தயார் செய்வது எப்படி?
வெஜ் பால்ஸ் தயார் செய்யும் முறை
தேவையானவை
- தண்ணீர் - தேவையான அளவு
- கேரட் - 1 (நறுக்கியது)
- குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
- பீட்ரூட் - 1 (நறுக்கியது)
- முட்டைக்கோஸ் - 1 கப் (நறுக்கியது)
- உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)
- பச்சைப் பட்டாணி - 1 சிறிய கப்
- உப்பு - தேவையான அளவு
- சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்
- மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
- மைதா- 3 டேபிள் ஸ்பூன்
- கார்ன்ஃபிளவர் - தேவையான அளவு

செய்முறை
- முதலில் குக்கர் ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் தண்ணீர் தேவையான அளவு சேர்க்க வேண்டும்.
- பிறகு அதில் ஒரு பாத்திரத்தை எடுத்து வைத்து அதில் கேரட், குடை மிளகாய், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், பச்சை பட்டாணி மற்றும் தண்ணீர் சிறிதளவு சேர்த்து பிரஸர் குக்கரை மூட வேண்டும்.
- இதில் 5 விசில் வரும் வரை காய்கறிகளை வேகவைக்க வேண்டும்.
- பின் காய்கறிகளிலிருந்து தண்ணீரை வடிகட்டி விடலாம். பின் வேக வைக்கப்பட்ட காய்கறிகளை மசித்துக் கொள்ளலாம்.
- அதன் பிறகு அதை ஒரு கப் ஒன்றில் தனியாக எடுத்துக் கொண்டு அதை இன்னும் நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.
- பின் அதில் உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளலாம்.
- அதனைத் தொடர்ந்து சோயா சாஸ், மிளகுத் தூள், மைதா மற்றும் 3 டேபிள் ஸ்பூன் அளவு கார்ன்ஃபிளவர் போன்றவற்றைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
- பின் தனியாக கப் ஒன்றில் 2 டேபிள் ஸ்பூன் கார்ன் ஃபிளவருடன் சிறிதளவு தண்ணீரைச் சேர்த்துக் கலக்கி அந்தக் கலவையையும் மசித்த காய்கறிகளுடன் சேர்க்க வேண்டும்.
- இவ்வாறு ஒரு பதத்திற்கு வந்த பிறகு பந்து போல உருண்டை உருண்டையாக அந்தக் கலவையைப் பிடித்துக் கொள்ளலாம்.
- பிறகு வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, அது சூடான பிறகு அந்த உருண்டைகளைச் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Vazhakkai Kola Urundai: கலக்கலான சுவையில் வாழைக்காய் கோலா உருண்ட ரெசிபி! எப்படி செய்வது?
வெஜ் மஞ்சூரியன் பால்ஸ் தயார் செய்யும் முறை
தேவையானவை
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
- குடை மிளகாய் - சில (பொடியாக நறுக்கியது)
- உப்பு - தேவையான அளவு
- மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
- உலர் இஞ்சி பவுடர் - 1/4 டீஸ்பூன்
- கார்லிக் பவுடர் - 1/4 டீஸ்பூன்
- ரெட் சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
- சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
- தக்காளி சாஸ் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை
- முதலில் வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.
- பின் இதில் வெங்காயம், குடை மிளகாய், உப்பு, மிளகுத் தூள், உலர் இஞ்சி பவுடர் மற்றும் கார்லிக் பவுடர் போன்றவை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- பிறகு அதில் ரெட் சில்லி சாஸ், சோயா சாஸ் மற்றும் தக்காளி சாஸ் போன்றவற்றை நன்கு கலந்து அதை 1 நிமிடத்திற்கு வேக வைக்க வேண்டும்.
- அதன் பின் தண்ணீர் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம்.
- இதை நன்கு வதக்கி தயார் செய்த உருண்டைகளை அந்தக் கலவையில் சேர்த்து உருண்டை உடையாமல் கிளறி விட வேண்டும்.
- பின் அதில் 3 டீஸ்பூன் அளவு கார்ன்ஃபிளவரை தண்ணீரில் கட்டி இல்லாமல் கரைத்து அந்த உருண்டைகளில் சேர்க்கலாம்.
- இறுதியாக இதில் ஸ்பிரிங் ஆனியனை தூவி விட்டு அடுப்பை அணைத்து விடலாம்.
- இப்போது தனியாக தட்டு ஒன்றில் மாற்றி, விரும்பினால் இன்னும் சில ஸ்பிரிங் ஆனியனை தூவி சாப்பிடலாம்.
இவ்வாறு சுவையான மற்றும் சூப்பரான வெஜ் பால்ஸ் மஞ்சூரியன் ரெசிபியை வீட்டிலேயே எளிமையான முறையில் தயார் செய்யலாம்.
இந்த பதிவும் உதவலாம்: CWC Irfan’s Recipes: இர்ஃபானின் சுண்டல் மசாலா வடை ரெசிபி! இத ஒரு முறை ருசிச்சா திரும்ப திரும்ப கேப்பீங்க
Image Source: Freepik