Too Much Milk Effects: பழக பழக பாலும் புளிக்கும் - இது எதுக்கு சொல்றாங்க தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Too Much Milk Effects: பழக பழக பாலும் புளிக்கும் - இது எதுக்கு சொல்றாங்க தெரியுமா?

பழக பழக பாலும் புளிக்கும்

சிறுவயது முதலே பால் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்பது என்பதைப் பலரும் கூறுவதைக் கேள்விப்பட்டிருப்போம். ஏனெனில் பாலில் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது எலும்பு ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். எந்த அளவு ஆரோக்கியத்தைத் தருகிறதோ, அதே போல விளைவையும் ஏற்படுத்துவதாக அமைகிறது என்பதில் ஆச்சரியமில்லை. அதிகளவு பால் குடிப்பது நல்லதை விட அதிகமாக தீங்கு விளைவிக்கலாம். அதிகளவு பால் அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் சிலவற்றைக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு! குறிப்பா இந்த உணவுகளை சாப்பிடவே சாப்பிட்ராதீங்க

பாலில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துகள்

பால் மற்றும் பால் சார்ந்த பிற பொருள்களில் கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின் ஏ, பி12 மற்றும் டி, ரிபோஃப்ளேவின், புரதம், துத்தநாகம், பொட்டாசியம், மக்னீசியம், செலினியம் மற்றும் கோலின் போன்றவை நிறைந்துள்ளது.

இவ்வாறு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பினும் பாலிலிருந்து சிலர் முற்றிலும் விலகி இருப்பது அவசியமாகும். லாக்டோஸ் சகிப்புத்தன்மை உடலில் உள்ள லாக்டேஸ் எனப்படும் நொதியின் குறைபாட்டால் ஏற்படுவதாகும். இது பாலில் காணப்படக்கூடிய லாக்டோஸை உடைத்து அதன் முழுமையான செரிமானத்திற்கு உதவுகிறது. உண்மையில் லாக்டோஸ் சகிப்புத் தன்மையானது வயிற்றுப்பிடிப்புகள், வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றால் பாதிக்கப்படலாம்.

அதிகளவு பால் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள்

ஆய்வு ஒன்றின் படி, ஒவ்வொரு நாளும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட டம்ளர் அளவில் பால் குடிப்பது ஆபத்தை ஏற்படுத்தலாம். இது பெண்களுக்கு இதய நோய் அபாயத்தை கிட்டத்தட்ட இரட்டிப்பாகலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது அவர்களுக்கு புற்றுநோய் அபாயத்தை 44% அதிகரித்துள்ளது.

வீக்கம் மற்றும் செரிமான பிரச்சனை

இந்த வகை பிரச்சனையானது லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்களிடம் மட்டுமல்லாமல், மற்றவர்களிடமும் காணப்படலாம். ஏனெனில் அதிகளவு பால் குடிப்பது வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். உடல் லாக்டோஸை சரியாக உடைக்க முடியாமல் இருக்கும் போது, அது செரிமான அமைப்பு வழியாகச் சென்று குடல் பாக்டீரியாவால் உடைக்கப்படுகிறது. இது வாயு மற்றும் பிற செரிமான பிரச்சனைகளை ஏற்படலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Benefits Of Chewing Food: நொறுங்கத் தின்றால் நூறு வயது.! சும்மாவா சொன்னாங்க பெரியவங்க‌…

குமட்டல் பிரச்சனை

பொதுவாக பெரியவர்களுக்கே லாக்டோஸ் சகிப்புத்தன்மை அதிகமாக உள்ளது. இதில் குமட்டல் மிகப்பெரிய அறிகுறிகளில் ஒன்றாக அமைகிறது. அந்த வகையில் பால், ஐஸ்கிரீம் மற்றும் பாலாடைக்கட்டி உட்பட லாக்டோஸ் கொண்ட எந்த வகையான பால் பொருள்களையும் உட்கொண்ட பிறகு வாந்தி ஏற்படுகிறது.

புற்றுநோய்

பால் சில வகையான புற்றுநோய் பிரச்சனைகளை உண்டாக்கலாம். ஆனால் சிலர் அதிகப்படியான பால் உட்கொள்வது புரோஸ்டேட் அல்லது மார்பக புற்றுநோய் போன்ற சில வகையான புற்றுநோய்களை ஏற்படுத்துகிறது.

முகப்பரு பிரச்சனை

இன்று கிடைக்கும் பாலில் வளர்ச்சி மற்றும் உற்பத்தியை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது இன்சுலின் ஒழுங்குமுறையை சீர்குலைப்பதன் மூலம் முகப்பருவை மோசமாக்கலாம். மேலும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் உட்கொள்ளல் முகப்பருவை மோசமாக்கும். எனவே, முழு கொழுப்புள்ள பசும்பாலுக்குச் செல்வது நல்லது.

எனவே அதிகளவு பால் எடுத்துக் கொள்வது நல்லதை விட அதிகளவு தீங்கு விளைவிக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Vilvam Fruit Benefits: வில்வ பழத்தில் உள்ள இந்த நன்மைக்காக நீங்க இத கட்டாயம் சாப்பிடணும்

Image Source: Freepik

Read Next

Overeating Disadvantage: உண்பதற்காக வாழாதே.. உயிர் வாழ்வதற்காக உண்.. விளக்கம் இங்கே..

Disclaimer